||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 126 - களிறு துயர் தீர்த்தவன்
பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து - முதலாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
பதக முதலை* வாய்ப் பட்ட களிறு*
கதறிக் கை கூப்பி*
என் கண்ணா! கண்ணா! என்ன*
உதவப் புள் ஊர்ந்து* அங்கு உறு துயர் தீர்த்த*
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்| (2)
- பதகம் - பாதிக்குந் தன்மையை யுடைய
- முதலை - முதலையின்
- வாய் - வாயிலே
- பட்ட - அகப்பட்ட
- களிறு – ஸ்ரீ கஜேந்த்ராழ்வான்
- கதறி - தன் வருத்தந்தோன்றக் கூப்பிட்டு
- கை கூப்பி - கையைக் குவித்துக் கொண்டு
- என் கண்ணா கண்ணா என்ன - என்னுடைய கண்ணனே! என்று பலகாலழைக்க முக் கரண வியாபாரங்கள்
- அங்கு - அப்போதே
- உதவ - அந்த யானைக்கு உதவும்படி
- புள் ஊர்ந்து - பெரிய திருவடியை வாஹநமாகக் கொண்டு சென்று
- உறு துயர் - அந்த யானையின் மிக்க வருத்தத்தை
- தீர்த்த - போக்கின
- அதகன் - ஆஸ்ரித ரக்ஷணத்தில் மிடுக்கை யுடையவன்
- வந்து அப் பூச்சி காட்டுகின்றான் - அப்படிப் பட்ட மிகவும் பயங்கரமான பூச்சி காட்டுகின்றான்
- அம்மனே - அம்மா!
- அப் பூச்சி காட்டுகின்றான் - தலை கேசம் வைத்து மறைத்து, கண்ணை புரட்டி, சங்கு சக்கரம் காட்டி அப்பூச்சி காட்டுதல்
கொடிய முதலையின் வாயில் அகப்பட்ட கஜேந்திராழ்வான் என்ற யானை, தான் பகவானுக்காக பறித்து வைத்திருக்கும் பூவை அவனுக்கு சமர்பிக்க முடியாமல் போகப் போகிறதே என்று தவித்து "என் கண்ணா! கண்ணா!" என தும்பிக்கையை தூக்கியவாறே கதற, உடனே தன்னுடைய வாகனமான கருடன் மேலமர்ந்து விரைந்து வந்து யானையின் துயரத்தைப் போக்கின பக்த ரக்ஷகனான கண்ணன் ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகின்றான்!
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment