About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 8 August 2023

திவ்ய ப்ரபந்தம் - திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி தனியன் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

தனியன் 1

நாதமுனிகள் அருளிச் செய்தது

கு³ருமுக² மநதீ⁴த்ய* ப்ராஹ வே³தாந ஸே²ஷாந்* 
நரபதி பரிக்லுப்தம்* ஸு²ல்க மாதா³து காம:*
ஸ்²வஸு²ர மமர வந்த்³யம்* ரங்க³ நாத²ஸ்ய ஸாக்ஷாத்* 
த்³விஜ குல திலகம் தம்* விஷ்ணு சித்தம் நமாமி|

  • குருமுகம் - ஆசார்ய முகத்தாலே
  • அநதீத்ய - அப்யசிக்காமலே
  • ப்ராஹ - உபன்யசித்தாரோ
  • வேதான் - வேதங்களை
  • அசேஷான் - சமஸ்தமாகிய
  • நர பதி - ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜாவினால்
  • பரிக்லிப்தம் - ஏற்படுத்தப்பட்ட
  • ஸூல்கம் - வித்யா சுல்கத்தை
  • ஆதாதுகாம - க்ரஹிப்பதற்கு ஆசை உள்ளவராய்
  • ஸ்வஸுரம் - மாமனாரும்
  • அமர - தேவதைகளால்
  • வந்த்யம் - ஸ்தோத்ரம் செய்வதற்கு தக்கவரும்
  • ரங்க நாதஸ்ய - ஸ்ரீ ரெங்க அதிபனுக்கு
  • ஸாஷாத் - பிரத்யஷமாய்
  • த்விஜகுல - ப்ராஹ்மண வம்சத்துக்கு
  • திலகம் - அலங்கார பூதருமாகிய
  • தம் விஷ்ணு சித்தம் - அந்த பெரியாழ்வாரை
  • நமாமி – சேவிக்கிறேன்

ஒரு குருவின் மூலமாகக் கற்காமல், திருமாலாலே நேராக (மயர்வற மதிநலம்) தெளிவான ஞானமும் பக்தியும் அருளப் பெற்ற விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வார், மதுரையில், ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜாவின் ஸபையில் நடக்கும் வித்வான்களின் கோஷ்டியில் அங்கே இருக்கும் பரிசான பொற் கிழியை ஸ்ரீவில்லிபுத்தூர் வட பெரும் கோயில் உடையான் எம்பெருமானுக்கு ஆக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்று, எல்லா வேதங்களையும் எடுத்துரைத்து, அப்பரிசை வென்றார். மேலும் ஸ்ரீரங்கநாதனுக்குத் தன் திருமகளாரான ஆண்டாளை மணமுடித்துக் கொடுத்து, நித்ய ஸூரிகளாலும் எம்பெருமானுக்கு மாமனார் என்று வணங்கப்பட்டார். அந்தணர் குலத்தில் மிகச் சிறந்தவராக விளங்கினார். இப்படிப்பட்ட பெரியாழ்வாரை நான் வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - த்யான ஸ்லோகம் 6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான ஸ்லோகம் - 6

பீ⁴ஷ்ம த்³ரோண தடா ஜயத்³ரத² ஜலா, 
கா³ந்தா⁴ரனீ லோத் பலா
ஸல்ய க்³ராஹ வதீ க்ருபேண வஹனீ, 
கர்ணேன வேலா குலா|
அஸ்வத்தா²ம விகர்ண கோ⁴ர மகரா 
து³ர்யோத⁴னா வர்தினீ
ஸோத் தீர்ணா க²லு பாண்ட³வை꞉ 
ரணனதீ³ கைவர்தக꞉ கேஸவ꞉||

  • பீ⁴ஷ்ம த்³ரோண தடா – பீஷ்மரும் துரோணரும் இரு கரைகளாகக் கொண்ட
  • ஜயத்³ரத² ஜலா – ஜயத்ரதனை நீராகக் கொண்ட
  • கா³ந்தா⁴ர நீலோத்பலா – காந்தார நாட்டு சகுனியை நீல நிற தாமரை மலராகக் கொண்ட
  • ஸல்ய க்³ராஹவதீ  – சல்யனை முதலையாகக் கொண்ட
  • க்ருபேண வஹனீ – கிருபாச்சாரியாரை நீரோட்டமாகக் கொண்டு பாய்கின்ற
  • கர்ணேன வேலா குலா – கர்ணனைப் பெரிய அலைகளாகக் கொண்ட
  • அஸ்வத்தா²ம விகர்ண கோ⁴ர மகரா – அஸ்வத்தாமாவையும் விகர்ணனையும் கொடிய நீர் விலங்குகளாகவும் முதலைகளாகவும் கொண்ட
  • து³ர்யோத⁴ன ஆவர்தினீ – துரியோதனனை ஆபத்தான நீர்ச் சுழலாகக் கொண்ட
  • ஸா – அந்த
  • ரண நதீ³ – யுத்தக் களம் என்னும் நதியானது
  • பாண்ட³வைஹி – பாண்டவர்களால்
  • உத்தீர்ணா க²லு – நிச்சயமாகக் கடந்து செல்லப்பட்டது
  • கைவர்தகஹ கேஸவஹ – ஏனெனில், அதற்குப் படகோட்டியாகக் கிருஷ்ணர் (கேசவன்) இருந்தார் 

இந்த யுத்தம் ஒரு ரத்த ஆறாக வர்ணிக்கப் படுகிறது. இதில், கரைகளைப் போல் வெள்ளத்தை கட்டுப் படுத்துவதால், பீஷ்மரும் துரோணரும் கரைகள். ஜெயத்ரதனை நதியின் நீர் என்று கூறுகிறார். நீல நிறம் விஷத்தைக் குறிக்கும். அதனால் சகுனி நீல தாமரை. பார்ப்பதற்கு சாதாணமானவன் ஆனால் உள்ளே விஷத்தன்மை உடையவன். சல்லியன் முதலையாகவும், கிருபர் நதியின் வேகமாகவும், கர்ணன் அந்த நதியின் அலை போலவும், அஸ்வத்தாமன், விகர்ணன் இவர்கள் சுறா மீன்கள் எனவும் உருவகப்படுத்தப் பட்டுள்ளார்கள். துரியோதனன் நீர்ச் சுழலுக்கு ஒப்பானவன். ஏனென்றால் அவன் தான் எல்லோரையும் தன்னுள் இழுத்துக் கொண்டு அழிக்கிறான். அப்படிப்பட்ட ரத்த ஆறானது, பாண்டவர்களால் கேசவன் என்ற ஓடக்காரனின் உதவியால் கடக்கப்பட்டது. கேசவன் என்ற சொல்லின் பொருள் மும்மூர்த்திகளையும் தம்முள் அடக்கிய பரம் பொருள் என்பது. அதுவே அழகிய கேசங்கள் உடைய கண்ணனாக வந்து பாண்டவர்களுக்கு உதவியது. பவசாகரம் கடக்கவே உதவும் பகவான் யுத்தமாகிய ரண நதியைக் கடக்க உதவியதில் என்ன ஆச்சரியம்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.1.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே  
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்|| 
||ஞானிகளின் கேள்விகள்||

ஸ்லோகம் - 1.1.3

நிக³ம கல்ப தரோர் க³லிதம் ப²லம்|
ஸு²க முகா²த்³ அம்ருதத்³ ரவ ஸம் யுதம்||
பிப³த பா⁴க³வதம் ரஸமாலயம்|
முஹுர ஹோ ரஸிகா பு⁴வி பா⁴வுகா꞉||

  • அஹோ ரஸிகா - ஹேl ரசிகர்களேl 
  • பா⁴வுகாஹ - ரஸ விசேஷத்தை அறிவதில் வல்லுனர்களேl 
  • நிக³ம கல்ப தரோர் - வேதமாகிய கற்பக விருக்ஷத்தில் இருந்தும் 
  • ஸு²க முகா²த்³ - ஸுக முனிவருடைய (கிளியின்) வாயிலிருந்தும்
  • பு⁴வி க³லிதம் - பூமியில் விழுந்ததும், பரம்பரையாக வந்ததும்
  • அம்ருதத்³ ரவ ஸம் யுதம் - அமிர்த துளிகளோடு கூடியதும், பரமானந்த ரஸத்தோடு கூடியதும்
  • ரஸம் - ரஸ ஸ்வரூபமாக உள்ளதுமான
  • பா⁴க³வதம் ப²லம் - ஸ்ரீமத் பாகவதம் என்னும் பலத்தை (பழத்தை)
  • ஆலயம் - மோக்ஷ ஸாம்ராஜ்யம் ஏற்படும் வரை
  • முஹுர் - அடிக்கடி
  • பிப³த - அனுபவியுங்கள் (சாப்பிடுங்கள்)

பூமியில் கனிந்த, நிபுணத்துவம் வாய்ந்த மற்றும் சிந்தனை மிக்க மனிதர்களே, அறிவில் நிரம்பியவர்களே! வேத இலக்கியங்களான கல்ப விருட்சத்தின் முதிர்ந்த பழமான ஸ்ரீமத் பாகவதத்தை ரசியுங்கள். இது ஸ்ரீல ஸுக தேவ கோஸ்வாமியின் உதடுகளில் இருந்து வெளிப்பட்டது. இது பழ இரசமாக (அரை திடமாகவும் மென்மையாகவும்) மாறி விட்டது, எனவே எளிதில் விழுங்கக் கூடியது மற்றும் சுவைக்க எல்லா வகையிலும் சரியானது. இறைவனுடனான நித்ய உறவின் அறிவியலைக் கையாளும் புத்தகம் மற்றும் விடுதலை கிடைக்கும் வரை அல்லது விடுதலையான நிலையில் கூட, எப்போதும் சுவைக்கக் கூடிய அமிர்த சாறு.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய|| 
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்||

ஸ்ரீ பீ⁴ஷ்ம உவாச|
ஜகத் ப்ரபு⁴ம் தேவ தேவம் 
அநந்தம் புருஷோத்தமம்|
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண 
புருஷ: ஸததோத்தித:||

  • ஸ்ரீ - திரு, மரியாதைக்குரிய
  • பீ⁴ஷ்ம - பீஷ்மர்
  • உவாச - கூறினார், சொன்னார்
  • ஜகத் - உலகத்தின்
  • ப்ரபு⁴ம் - அதிபதியை, தலைவனை
  • தேவ தேவம் - தேவர்களுக்கெல்லாம் தேவனானவனை
  • அநந்தம் - முடிவில்லாதவனை, எல்லையற்றவனை
  • புருஷோத்தமம் - புருஷர்களில் உத்தமனானவனை, புருஷோத்தமனை 
  • ஸ்துவந் - துதிப்பதன் மூலம், புகழ்ந்து பாடுவதன் மூலம் முன்னேற்றமடைவான்
  • நாம - திருநாமங்களை, பெயர்களை 
  • ஸஹஸ்ரேண - ஆயிரத்தினால்
  • புருஷஸ் - மனிதன்
  • ஸதத - எப்போதும்
  • உத்திதஹ - விழிப்புடன், முயற்சியுடன்  

ஸ்ரீ பீஷ்மர் கூறலானார்: அசைபவை, அசையாதவை ஆகியவற்றைக் கொண்ட உலகத்துக்குத் தலைவனும், தேவர்களுக்கு எல்லாம் தேவனும், அளந்து காண முடியாத பெருமை உடையவமானுகிய வள்ளல்களில் சிறந்தவனை இடைவிடாத முயற்சியுடன் அவனது ஆயிரம் திருநாமங்களை எப்போதும் துதித்து வழிபடுவதன் மூலம் அனைத்து துயரங்களிலிருந்தும் விடுபட்டு உயர்நிலை அடைவான்.


||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்