About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 27 November 2025

108 திவ்ய தேசங்கள் - நடு நாடு அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

நடு நாட்டு திவ்ய தேசங்கள் 2 பற்றி பார்ப்போம்  

நடு நாட்டு திவ்ய தேசங்கள் Area Wise:

கடலூர் - 2

  • DD 041 - திருவஹீந்திரபுரம் (திரு அயிந்தை) (திருவந்திபுரம்)
  • DD 042 - திருக்கோவலூர்  (திருக்கோயிலூர்)

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 100

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||விதுர மைத்ரேய ஸம்வாதம் - 45||

||ஸ்கந்தம் 04||

தொடர்ந்து கர்தம ப்ரஜாபதியின் பெண்களின் வம்சங்களைச் சொன்னார் மைத்ரேயர்.

சிரத்தா என்ற பெண்ணை ஆங்கீரஸுக்கு மணம் முடித்தார் கர்தமர். அவர்களுக்கு ஸினீவாலி, குஹூ, ராகா, அனுமதி என்று நான்கு பெண்கள்.

ஸினீவாலி என்பவள் தேய்பிறை சதுர்தசிக்கும், குஹூ அமாவாசைக்கும், ராகா பௌர்ணமிக்கும், அனுமதி வளர்பிறை சதுர்தசிக்கும் அதிதேவதைகள்.

இவர்களைத் தவிர, பகவானைப் போன்ற பெருமை உடைய உதத்யர் என்பவரும், தேவகுரு ப்ருஹஸ்பதியும் ஆங்கீரஸின் புதல்வர்கள் ஆவர். அவர்கள் ஸ்வாரோசிஷ மன்வந்தரத்தில் புகழ் பெற்று விளங்கினர்.

ஹவிர்புக் என்ற கர்தமரின் மகளை புலஸ்தியர் மணந்தார். இவர்களின் மகன்கள் அகஸ்தியரும், விச்ரவஸ் என்பவரும் ஆவர்.

விச்ரவஸின் மனைவியான இடபிடை என்பவளிடம் யக்ஷர்களின் தலைவரான குபேரன் பிறந்தார். இன்னொரு மனைவியான கைகஸி என்பவளின் புதல்வர்களே ராவணன், கும்பகர்ணன், மற்றும் விபீஷணன் ஆகியோர்.


புலஹரின் மனைவி கதி என்பவள். அவளது புதல்வர்கள் கர்மச்ரேஷ்டன், வரீயான், ஸஹிஷ்ணு ஆகியோர்.

க்ரது என்பவரின் மனைவி க்ரியை. இவள் ப்ரும்மதேஜஸுடன் விளங்கும் வாலகில்யர்கள் என்னும் அறுபதினாயிரம் முனிவர்களைப் பெற்றாள்.

வசிஷ்டரின் மனைவியான ஊர்ஜை அல்லது அருந்ததி சித்ரகேது முதலான ஏழு மகன்களை ஈன்றாள். அவர்கள் ஸப்தரிஷிகள் ஆனார்கள்.

ஸப்தரிஷி என்பதும் பதவிகளே. ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு மஹரிஷிகள் ஸப்தரிஷிகளாக இருக்கின்றனர். அவர்கள் சித்ரகேது, ஸுரோசி, விரஜன், மித்ரன், உல்பணன், வஸுப்ருத்யானன், த்யுமான் ஆகியோர்.

அதர்வா என்ற முனிவரின் பத்னி சித்தி என்பவள் ததீசி‌ முனிவரைப் பெற்றாள். அவரை அசுவசிரஸ் என்றும் அழைப்பர்.

ப்ருகு மஹரிஷியின் மனைவி கியாதி என்பவள். அவள் தாதா, விதாதா ஆகிய இரு மகன்களையும் திருமகளின் அம்சமான லக்ஷ்மி என்ற மகளையும் பெற்றாள்.

மேரு மஹரிஷி ஆயதி, நியதி என்ற தன் புதல்விகளை தாதா, விதாதாவிற்கு‌ மணம் செய்து கொடுத்தார்.

அவர்களுக்கு மிருகண்டு, பிராணன் என்ற புதல்வர்கள் உண்டு. மிருகண்டுவின் மகன்‌ மார்க்கண்டேயர். பிராணனின் மகன் வேதசிரேயஸ். ப்ருகுவின் மற்றொரு புதல்வரான கவியின் மகன் உசனஸ் என்னும் சுக்ராசார்யார்.

விதுரா! இந்த ஒன்பது முனிவர்களும் ப்ரஜைகளைப் படைத்து உலகத்தைப் போஷித்தனர்.

இந்த வரலாற்றைச் சிரத்தையுடன் கேட்பவர்களின் பாவங்கள் உடனே நீங்கும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ அஷ்டலட்சுமி 108 போற்றி

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஓம் அஷ்டலக்ஷ்மியே போற்றி|
ஓம் அதிர்ஷ்டலக்ஷ்மியே போற்றி|
ஓம் அன்னலக்ஷ்மியே போற்றி|
ஓம் அபயலக்ஷ்மியே போற்றி|
ஓம்  அலங்காரலக்ஷ்மியே போற்றி|
ஓம் அஸ்வாரூடலக்ஷ்மியே போற்றி|
ஓம் அஷ்டபுஜலக்ஷ்மியே போற்றி|
ஓம் அஷ்டாதசபுஜலக்ஷ்மியே போற்றி|
ஓம் அம்ருதலக்ஷ்மியே போற்றி|
ஓம் அனந்தலக்ஷ்மியே போற்றி|
ஓம் ஆதிலக்ஷ்மியே போற்றி|
ஓம் ஆனந்தலக்ஷ்மியே போற்றி|
ஓம் இஷ்டலக்ஷ்மியே போற்றி|
ஓம் இந்திரலக்ஷ்மியே போற்றி|
ஓம் ஐஸ்வர்யலக்ஷ்மியே போற்றி|
ஓம் ஓங்கார லக்ஷ்மியே போற்றி|
ஓம் கஜலக்ஷ்மியே போற்றி|
ஓம் கனகலக்ஷ்மியே போற்றி|
ஓம் கற்பகலக்ஷ்மியே போற்றி|
ஓம் கனகாபிஷேக லக்ஷ்மியே போற்றி|
ஓம் கன்யாலக்ஷ்மியே போற்றி|
ஓம் காருண்யலக்ஷ்மியே போற்றி|
ஓம் கிருபாலக்ஷ்மியே போற்றி|
ஓம் கீர்த்திலக்ஷ்மியே போற்றி|
ஓம் கோ லக்ஷ்மியே போற்றி|
ஓம் கோலாபுரி லக்ஷ்மியே போற்றி|
ஓம் சத்ய லக்ஷ்மியே போற்றி|
ஓம் சர்வ லக்ஷ்மியே போற்றி|
ஓம் சம்பத்ஸ்வரூபியே போற்றி|
ஓம் சந்தானலக்ஷ்மியே போற்றி|
ஓம் சாந்தலக்ஷ்மியே போற்றி|
ஓம் சாகரோத்பவ லக்ஷ்மியே போற்றி|
ஓம் சித்த லக்ஷ்மியே போற்றி|
ஓம் சிவானந்த லக்ஷ்மியே போற்றி|
ஓம் சுபலக்ஷ்மியே போற்றி|
ஓம் சுந்தர லக்ஷ்மியே போற்றி|
ஓம் சுவர்ண லக்ஷ்மியே போற்றி|
ஓம் சுஸ்மித லக்ஷ்மியே போற்றி|
ஓம் சுகாசன லக்ஷ்மியே போற்றி|
ஓம் சௌபாக்ய லக்ஷ்மியே போற்றி|
ஓம் ஸ்தித லக்ஷ்மியே போற்றி|
ஓம் ஸெளந்தர்ய லக்ஷ்மியே போற்றி|
ஓம் சுவர்க்க லக்ஷ்மியே போற்றி|
ஓம் ஸைன்ய லக்ஷ்மியே போற்றி|
ஓம் ஜய லக்ஷ்மியே போற்றி|
ஓம் ஜகல்லக்ஷ்மியே போற்றி|
ஓம் ஜோதி லக்ஷ்மியே போற்றி|
ஓம் ஜேஷ்ட சோதரியே போற்றி|
ஓம் ஷட்புஜ லக்ஷ்மியே போற்றி|
ஓம் ஷோடச லக்ஷ்மியே போற்றி|
ஓம் தன லக்ஷ்மியே போற்றி|
ஓம் தனத லக்ஷ்மியே போற்றி|
ஓம் தயா லக்ஷ்மியே போற்றி|
ஓம் தான்ய லக்ஷ்மியே போற்றி|
ஓம் த்ரிகுண லக்ஷ்மியே போற்றி|
ஓம் த்வார லக்ஷ்மியே போற்றி|
ஓம் த்விபுஜ லக்ஷ்மியே போற்றி|
ஓம் த்விபுஜ வீரலக்ஷ்மியே போற்றி|
ஓம் திவ்ய லக்ஷ்மியே போற்றி|
ஓம் தீபலக்ஷ்மியே போற்றி|
ஓம் தீரலக்ஷ்மியே போற்றி|
ஓம் தைர்ய லக்ஷ்மியே போற்றி|
ஓம் துளசி லக்ஷ்மியே போற்றி|
ஓம் துக்க நிவாரணியே போற்றி|
ஓம் நாகலக்ஷ்மியே போற்றி|
ஓம் நித்திய லக்ஷ்மியே போற்றி|
ஓம் பால லக்ஷ்மியே போற்றி|
ஓம் பங்கஜ லக்ஷ்மியே போற்றி|
ஓம் பாக்ய லக்ஷ்மியே போற்றி|
ஓம் பிரம்மசோதரியே போற்றி|
ஓம் பிரசன்ன லக்ஷ்மியே போற்றி|
ஓம் பிரகாச லக்ஷ்மியே போற்றி|
ஓம் பில்வ லக்ஷ்மியே போற்றி|
ஓம் பூலக்ஷ்மியே போற்றி|
ஓம் புவன லக்ஷ்மியே போற்றி|
ஓம் பூஜ்ய லக்ஷ்மியே போற்றி|
ஓம் பூர்ண லக்ஷ்மியே போற்றி|
ஓம் போக லக்ஷ்மியே போற்றி|
ஓம் மகாலக்ஷ்மியே போற்றி|
ஓம் மாயாலக்ஷ்மியே போற்றி|
ஓம் மோக்ஷலக்ஷ்மியே போற்றி|
ஓம் மோஹனலக்ஷ்மியே போற்றி|
ஓம் யக்ஞலக்ஷ்மியே போற்றி|
ஓம் யந்திரலக்ஷ்மியே போற்றி|
ஓம் யோகலக்ஷ்மியே போற்றி|
ஓம் யௌவன லக்ஷ்மியே போற்றி|
ஓம் ராஜலக்ஷ்மியே போற்றி|
ஓம் ராஜ்யலக்ஷ்மியே போற்றி|
ஓம் ரம்யலக்ஷ்மியே போற்றி|
ஓம் ரூபலக்ஷ்மியே போற்றி|
ஓம் லக்ஷ்மியே போற்றி|
ஓம் லங்காதகனியே போற்றி|
ஓம் வரலக்ஷ்மியே போற்றி|
ஓம் வரதலக்ஷ்மியே போற்றி|
ஓம் விஷ்ணுலக்ஷ்மியே போற்றி|
ஓம் விஜயலக்ஷ்மியே போற்றி|
ஓம் விஸ்வலக்ஷ்மியே போற்றி|
ஓம் வித்யாலக்ஷ்மியே போற்றி|
ஓம் வீரலக்ஷ்மியே போற்றி|
ஓம் வீர்யலக்ஷ்மியே போற்றி|
ஓம் ஞானலக்ஷ்மியே போற்றி|
ஓம் ஹம்ஸவாகினியே போற்றி|
ஓம் ஹ்ருதயலக்ஷ்மியே போற்றி|
ஓம் ஹிரண்ய லக்ஷ்மியே போற்றி|
ஓம் ஸ்ரீ லக்ஷ்மியே போற்றி|
ஓம் ஸ்ரீ சக்ர லக்ஷ்மியே போற்றி|
ஓம் ஸ்ரீ சூக்த லக்ஷ்மியே போற்றி|
ஓம் ஸ்ரீப்ரதனாலக்ஷ்மியே போற்றி|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

ஸ்ரீ ஸுதர்சந அஷ்டோத்தரம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ ஸுதர்சந அஷ்டோத்தரம்

ஸ்ரீ ஸுதர்சந அஷ்டோத்திரம் என்பது சுதர்சனர் எனப்படும் சக்கரத்தாழ்வாரின் 108 போற்றிப் புகழும் மந்திரங்களாகும். இந்த அஷ்டோத்திரத்தை தினமும் உச்சரித்து வழிபடுவதன் மூலம் பாவங்கள் நீங்கி, சக்கரத்தாழ்வாரின் அருளால் எல்லா இடங்களிலும் எப்போதும் பாதுகாப்பு கிடைக்கும். 

பானபத்திரம், முஸலம், மழு, கதை, வஸ்ராயுதம், அக்னி, குந்தம், கேடயம், ஹலம் போன்ற இன்னும் பற்பலவிதமான சிறந்த ஆயுதங்களை ஏந்தியவரும் ஆன அந்த சக்கரத்தாழ்வார் வாக்கு, மனம், புத்தி, அகங்காரம் ஞானம், அக்ஞானம் இவற்றால் ஜன்ம ஜன்மாந்திரங்களில் செய்த அநேக பாவங்களைப் போக்கி எங்கும் எப்போதும் பாதுகாக்க வேண்டுகிறேன்.

ஓம் உதய சூரியனுக்கு சமமானவரே போற்றி|
ஓம் உதாரமான புஜபலம் உள்ளவரே போற்றி|
ஓம் கோடி மன்மதனைப் போன்றவரே போற்றி|
ஓம் ஸ்ரீவிஷ்ணுவின் இதய ஆனந்தமே போற்றி|
ஓம் பக்தர்களின் கற்பத விருட்சமே போற்றி|
ஓம் அபய வரத ஹஸ்தம் உள்ளவரே போற்றி|
ஓம் சக்கரத்தாழ்வாரே போற்றி|
ஓம் அண்ட சராசரத்தை தாண்டுபவரே போற்றி|
ஓம் தசரதச் சக்கரவர்த்தியின் திருக்குமாரரே போற்றி|
ஓம் துக்க நெருப்பைத் தகிப்பவரே போற்றி|
ஓம் சுசிபாலனை வதைத்தவரே போற்றி|
ஓம் கைகேயியின் திருக்குமாரரே போற்றி|
ஓம் பாலசூரியனைப் போன்றவரே போற்றி|
ஓம் மிகச் சிறந்த நீதிமானே போற்றி|
ஓம் தேவர்களைக் காப்பவரே போற்றி|
ஓம் தேவ எதிரிகளை வதைப்பவரே போற்றி|
ஓம் மூம்மூர்த்திகளின் முதல்வரே போற்றி|
ஓம் மிகப்பெரும் கீர்த்தி உள்ளவரே போற்றி|
ஓம் திக்குகளைப் பிரகாசிக்க வைப்பவரே போற்றி|
ஓம் சுக்ரீவன் போன்ற வானரர்களுக்கு பிரியரே போற்றி|
ஓம் தத்துவ ஞான ஆசை கொண்டவரே போற்றி|
ஓம் உதய சூரியனைப் போன்ற விழியுடையவரே போற்றி|
ஓம் பட்டுப் பீதாம்பரம்அணிந்தவரே போற்றி|
ஓம் மஹா விஷ்ணுவிற்குப் பிரியமானவரே போற்றி|
ஓம் கோடி சூர்யப் பிரகாசம் உடையரே போற்றி|
ஓம் மௌஞ்சி தரித்திருப்பவரே போற்றி|
ஓம் யக்ஞோப வீதம் தரித்திருப்பவரே போற்றி|
ஓம் பல ஆபரணம் பூண்டவரே போற்றி|
ஓம் தெய்வீகக் களையுள்ளவரே போற்றி|
ஓம் குண்டலங்களை அணிபவரே போற்றி|
ஓம் பக்தர்களின் கோரிக்கையை ஏற்பவரே போற்றி|
ஓம் விரும்பியதைத் தருபவரே போற்றி|
ஓம் முனிவர்களாலும் வணங்கப்படுபவரே போற்றி|
ஓம் வேத த்வனிகளால் மகிழ்ச்சியடைபவரே போற்றி|
ஓம் வைரம் பாய்ந்த அங்கமுடையவரே போற்றி|
ஓம் பிங்கள வண்ண உரோமமுடையவரே போற்றி|
ஓம் ககன மார்க்கப் பிரயாணியே போற்றி|
ஓம் இரண்டு கைகளை யுடையவரே போற்றி|
ஓம் நான்கு கைகளைப் பெற்றவரே போற்றி|
ஓம் எட்டுக் கைகள் உடையவரே போற்றி|
ஓம் பதினெட்டுக் கைகள் உடையவரே போற்றி|
ஓம் தங்கக் குண்டலமணிந்தவரே போற்றி|
ஓம் அம்பரிஷனைக் காத்தவரே போற்றி|
ஓம் கூப்பிய கைகள் உடையவரே போற்றி|
ஓம் மஹாவிஷ்ணுமுன் நிற்பவரே போற்றி|
ஓம் ஆனந்தக் கண்ணீர் சொரிபவரே போற்றி|
ஓம் காதயுதம் தரித்தவரே போற்றி|
ஓம் சங்காயுதத்தைப் பெற்றவரே போற்றி|
ஓம் சக்கராயுதத்தை அடைந்தவரே போற்றி|
ஓம் வாள் ஆயுதம் உடையவரே போற்றி|
ஓம் எமனின் பாசாயுதம் கொண்டவரே போற்றி|
ஓம் பிரளய காலர்க்னி ஏந்தியவரே போற்றி|
ஓம் விரலாயுதத்தை உடையவரே போற்றி|
ஓம் வஜ்ராயுதம் தரித்தவரே போற்றி|
ஓம் சூலாயுதம் ஏந்தியவரே போற்றி|
ஓம் பராசக்தியின் திரிசூலம் ஏந்தியவரே போற்றி|
ஓம் குந்தாயுதத்தைப் தரித்தவரே போற்றி|
ஓம் முஸலத்தைக் கையில் பெற்றவரே போற்றி|
ஓம் பரசுவைக் கையில் ஏந்தியவரே போற்றி|
ஓம் கேடயத்தைத் தரித்தவரே போற்றி|
ஓம் பிரகாசிக்கும் கேசத்தை உடையவரே போற்றி|
ஓம் முக்கண்களை உடையவரே போற்றி|
ஓம் உறுதி வாய்ந்த தோள் வலிமையரே போற்றி|
ஓம் தண்டம் போன்ற கையரே போற்றி|
ஓம் ராட்சச சம்ஹாரியே போற்றி|
ஓம் விஷ்ணு பக்தரே போற்றி|
ஓம் ருத்ரப் பிரியரே போற்றி|
ஓம் பிங்கள வர்ணக் கண்கள் உடையவரே போற்றி|
ஓம் மஹா வீரரே போற்றி|
ஓம் அசுரர்களின் கொழுப்பகற்றுபவரே போற்றி|
ஓம் தேவர்களால் பூஜிக்கப்படுபவரே போற்றி|
ஓம் மஹா தேஜஸ்வீயே போற்றி|
ஓம் புஜங்களை ஆயுதமாக உடையவரே போற்றி|
ஓம் மஹா ப்ரபஞ்சரே போற்றி|
ஓம் சிவப்ரியரே போற்றி|
ஓம் மஹா பலரே போற்றி|
ஓம் சூரியனுக்கு இணையானவரே போற்றி|
ஓம் அளவில்லா ஆற்றல் உடையவரே போற்றி|
ஓம் மஹா சூரரே போற்றி|
ஓம் ஆத்ம ஸ்வரூபியே போற்றி|
ஓம் தர்மத்தை ஆராதனை செய்பவரே போற்றி|
ஓம் தர்மராஜரே போற்றி|
ஓம் சமத்துவமுடையவரே போற்றி|
ஓம் தண்டதரரே போற்றி|
ஓம் தபஸ்வியே போற்றி|
ஓம் ஜிதேந்த்ரியரே போற்றி|
ஓம் சர்வக்ஞரே போற்றி|
ஓம் புண்ணிய மித்திரரே போற்றி|
ஓம் பிரும்ம அம்சமுடையவரே போற்றி|
ஓம் மிக பயங்கர வாதியே போற்றி|
ஓம் சம்ஹா மூர்த்தியே போற்றி|
ஓம் நம்பினோர்க்கு உபகாரியே போற்றி|
ஓம் பாவிகளின் எமனே போற்றி|
ஓம் விசாலமான கண்கள் உள்ளவரே போற்றி|
ஓம் சுலபமாய் தரிசிக்க முடியாதவரே போற்றி|
ஓம் காலத்தை கண்காணிப்பவரே போற்றி|
ஓம் கோரமானவரே போற்றி|
ஓம் பயங்கரரே போற்றி|
ஓம் திருப்தியுற்றவரே போற்றி|
ஓம் ஸம்ஹாரியே போற்றி|
ஓம் குளிரச் செய்பவரே போற்றி|
ஓம் சந்தோஷத்தைத் தருபவரே போற்றி|
ஓம் அமைதி நிறைந்த ஞானியே போற்றி|
ஓம் வேண்டிய வரம் தரும் ஸுதர்சநரே போற்றி போற்றி|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||