About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 12 September 2025

ஸ்ரீமத் பாகவத புராணம் - 88

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 33

ஸ்கந்தம் 03

இறைவனை மகனாகப் பெற்ற தேவஹூதி, குருவிடம் சிஷ்யை கேட்பது போல் கேட்டாள்.

ப்ரும்மத்தை அறிந்த ஞானியாகிய என் ப்ரபுவே! ப்ரக்ருதியும்‌ புருஷனும் ஒன்றையொன்று தழுவிய நித்ய வஸ்துக்கள். ப்ரக்ருதி புருஷனை விட்டுப் பிரிவதே இல்லை.

பூமியும் அதன் குணமான மணமும், நீரும் அதன் தன்மையான சுவையும் எப்படி ஒன்றை விட்டு ஒன்று பிரியாதோ அவ்வாறே ப்ரக்ருதியும் புருஷனும் பிரிவதில்லை.

இயற்கையில் ஆன்மா செயலற்றதாக இருப்பினும் ப்ரக்ருதி அவனைச் செயல்பட வைக்கிறது. ப்ரக்ருதியோடு சம்பந்தம்‌ உள்ளவரை ஆன்மாவிற்குச் சுதந்திரம்‌ இல்லையே. பிறகு எப்படி விடுபடும்? என்றாள்.

பகவான் சிரித்தார். பின்னர் கூறலானார்.


அம்மா! அக்னியை உண்டாக்க அரணிக் கட்டையைக் கடைவது வழக்கம். அக்னியானது தான் தோன்றக் காரணமாயிருக்கும் அரணிக் கட்டையையே எரித்து விடும்.

விறகடுப்பை எரிக்க ஒரு குச்சியைப் பயன்படுத்துவோம். அந்தக் குச்சியால், மற்ற விறகுகளை அடுப்பில் தள்ளுவோம். கடைசியில் இவ்வளவு நேரமாக அடுப்பை எரிக்கப் பயன்படுத்திய குச்சியும் அடுப்பினுள்ளேயே போடப்பட்டு எரிந்து போகும்.

ப்ரக்ருதியால் உண்டாக்கப்பட்ட புத்தி, மனம், இந்திரியங்கள்‌ ஆகியவை ப்ரக்ருதியை எரித்து விடும்.

எப்படி என்றால், ஸ்வதர்மத்தை, அதாவது தனக்கென்று நிச்சயிக்கப்பட்ட கர்மத்தை ஒருவன் பலனை எதிர்பார்த்துச் செய்யாமல், பகவத் அர்ப்பணமாகச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மனத்தூய்மை ஏற்படும். அதனால், இறைவனின் திருவிளையாடல்கள் பற்றிய கதைகளில் ஊக்கம் ஏற்படும். அதனால் தீவிரமான பக்தி ஏற்படும். அதன் மூலம் தத்துவத்தை உணரும் அறிவும் திடமான வைராக்யமும், சித்தம் ஒருமைப்படுவதால், புருஷனுடைய அறியாமை நாளடைவில் குறைந்து கொண்டே வந்து பின்னர் முற்றிலும் அழிந்து விடும்.

கனவில் வரும் பற்பல துன்பங்களால் கனவில் மிகவும் கஷ்டப்படுகிறான். விழித்துக் கொண்ட பின்னர், கனவில் வந்த கஷ்டங்கள் அவனைப் பாதிக்கவில்லை என்று உணர்கிறான்.

அது போல் உண்மை நிலையை உணர்ந்தவனை ப்ரக்ருதியால் சம்சார பந்தத்தில் சிக்க வைக்க முடியாது.

இவ்வாறு ஒருவன் பற்பல பிறவிகள் தோறும் பகவானான என்னைப் பற்றிய நினைவாகவே வெகுகாலம்‌ இருப்பானாகில், அவனுக்கு ப்ரும்ம லோகம் உள்பட அனைத்து போகங்களிலும் வெறுப்பு தோன்றி வைராக்யம்‌ சித்திக்கும்.

அம்மா! வைராக்யம்‌ கை வரப் பெற்ற என் பக்தன் மிகுந்த துணிவுடையவன் ஆகிறான். என் கருணையினால், தத்வங்கள் அனைத்தின் ஸாரமான காண்பதனைத்தும் பொய், இறைவனே சத்யம் என்ற அனுபவத்தைப் பெற்றுகிறான். அவனது அத்தனை சந்தேகங்களும்‌ நீங்கப் பெறுகிறான்.

தேகமே ஆன்மா என்ற அபிமானம் அவனை விட்டொழியும். சூக்ஷ்ம உடலை விட்டு யோகிகள் எப்படி திரும்பி வர இயலாத இடத்தை அடைகிறார்களோ, அதே இடத்தை என் பக்தன் அடைகிறான். அவ்விடம் கைவல்யம் எனப்படும் ஆனந்த வடிவான என் உலகமே ஆகும்.

அஷ்டமா சித்திகளும் கடினமான யோக சாதனையால்‌ மட்டுமே கை கூடும். வேறு சாதனைகளால் அவற்றை அடைய முடியாது. ஆனால், பக்தி யோகம்‌ கூடியவனுக்கு அணிமாதி சித்திகள் தானே கை கூடும். அவை மாயையே உருவானவை. ஆகவே மனத்தைத் தன்பால் இழுத்து விடும். உலகியல் தளைகளை மேன்மேலும் தோற்றுவிக்கும். அவைகளில் பற்று வைப்பவர்கள் மீளவே இயலாத சம்சாரக் கடலில் விழுந்து விடுகிறார்கள்.

பக்தி யோகம் கை வரப் பெற்றவர் அவற்றில் மனம் வைக்காமல் இருப்பாராயின், உலகியல் பற்றுக்கள் விடுபட்டு, உடலின் தொடர்பு நீங்கி, மரணபயமற்ற ஆனந்தமே வடிவான என் பரமபதத்தை அடைந்து விடுகிறார். இதற்குச் சிறந்த உதாரணம்..

குருவிடம் பக்தி செலுத்திய கனிகண்ணன் கிழவியைக் குமரியாக்கினார். ஆனால், அந்த சித்தியில் மயங்காமல், குருவருளால் நிகழ்ந்ததென்று அர்ப்பணம் செய்தார். அந்த கனிகண்ணன் ஊரை விட்டுப் போனால், அவர் பின்னால், குருவான திருமழிசை ஆழ்வாரும், பகவானும், காஞ்சியில் இருக்கும் தெய்வங்களும் நடந்து போகிறார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

Thursday, 1 August 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 143

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 143

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 5

||உத்தர பீடி²கா||
உத்தர பாகம்
பலஸ்²ருதி

ப⁴க்திமாந் ய: ஸதோ³த்தா²ய 
ஸு²சி  ஸ்தத்³க³த மாநஸ꞉|
ஸஹஸ்ரம் வாஸுதே³வஸ்ய 
நாம்நா மேதத் ப்ரகீர்தயேத்||

  • ப⁴க்திமாந் - பக்தி உடையவன்
  • யஸ் - எவன்
  • ஸதா³ - எப்பொழுதும்
  • உத்தா²ய - எழுந்து
  • ஸு²சிஸ் - தூய்மையானவன்
  • தத்³க³த - அதில் நிலைத்த
  • மானஸஸ் - மனத்தை உடையவன்
  • ஸஹஸ்ரம் - ஆயிரம்
  • வாஸுதே³வஸ்ய - வாஸுதேவருடைய
  • நாம்நா - நாமங்களால்
  • மேதத் - இந்த
  • ப்ரகீர்தயேத் - போற்றிக் கூற வேண்டும்

எந்த மனிதன் நாள்தோறும் காலையில் எழுந்ததும் கடன்களை முடித்து விட்டு, அவனிடம் முழுமையாகத் திருப்பப்பட்ட இதயத்துடன் தன்னைத் தூய்மை செய்து கொண்டு, பக்தியுடனும், விடாமுயற்சியுடனும், ஒவ்வொரு நாளும் வாஸுதேவனின் இந்த ஆயிரம் பெயர்களையும் சொல்வானோ!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.7 

யஸ்த் விந்த்³ரியாணி மநஸா 
நியம்யா ரப⁴தே அர்ஜுந|
கர்மேந்த்³ரியை: கர்ம யோக³ம்
அஸக்த: ஸ விஸி²ஷ்யதே||

  • யஸ் - யாரெருவன் 
  • து - ஆனால்  
  • இந்த்³ரியாணி - புலன்களை 
  • மநஸா - மனதால் 
  • நியம்ய - நியமங்களுக்கு உட்படுத்துகின்றானோ 
  • ஆரப⁴தே - தொடங்குகிறான் 
  • அர்ஜுந - அர்ஜுநனே 
  • கர்மேந்த்³ரியைஹ் - செயற்புலன்களால் 
  • கர்ம யோக³ம் - பக்தி 
  • அஸக்தஸ் - பற்றின்றி 
  • ஸ: - அவன் 
  • விஸி²ஷ்யதே - மிக உயர்ந்தவன்

ஆனால், அர்ஜுநா! யாரொருவன் புலன்களை மனதால் நியமங்களுக்கு உட்படுத்தத் தொடங்குகின்றானோ, அவன் செயற் புலன்களால் பற்றின்றி கர்ம யோகத்தில் மிக உயர்ந்தவனாகிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.33

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.33

தம பி⁴ஜ்ஞாய ஸஹஸா 
ப்ரத் யுத்தா² யாக³தம் முநி:|
பூஜயா மாஸ விதி⁴வந்
நாரத³ம் ஸுர பூஜிதம்|| 

  • தம - அந்த நாரதரை 
  • ஆக³தம் அபி⁴ஜ்ஞாய - வந்தவராக பார்த்து 
  • முநிஹி - வியாஸர் 
  • ஸஹஸா - உடனே 
  • ப்ரத் யுத்தா² யா - எதிர் சென்று அழைத்து 
  • ஸுர பூஜிதம் - தேவர்கள் யாவராலும் பூஜிக்கப்பட்ட 
  • நாரத³ம் -   நாரத மஹரிஷியை 
  • விதி⁴வந் - முறைப்படி 
  • பூஜயா மாஸ - பூஜித்தார் 

நாரதர் வந்ததைக் கண்ட வியாஸ முனிவர் எழுந்து எதிர்கொண்டழைத்து, தேவர்களும் கொண்டாடும் நாரத மகரிஷியை அர்க்யம், பாத்யம், ஆசமனம் அளித்து முறைப்படி பூசனை புரிந்தார்.

||ஸ்ரீமத் பாகவத மகாபுராணம், முதலாவது ஸ்கந்தத்தில் 
நான்காவது அத்தியாயம் முற்றிற்று||

||இதி ஸ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரம ஹம்ஸ்யாம் ஸம்ஹி தாயாம்
ப்ரத²ம ஸ்கந்தே⁴ நைமிஷீயோ பாக்²யாநே சதுர்தோ² அத்⁴யாய:||




||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்