About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 14 August 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் – 1.9 

அந்யே ச ப³ஹவ: ஸூ²ரா:
மத³ர்தே² த்யக்த ஜீவிதா:|
நாநா ஸ²ஸ்த்ர ப்ரஹரணா:
ஸர்வே யுத்³த⁴ விஸா²ரதா³:||

  • அந்யே - பிறர் 
  • ச - மேலும் 
  • ப³ஹவஸ்² - பெரும் எண்ணிக்கையில் 
  • ஸூ²ராஹ - மாவீரர்கள் 
  • மத³ர்தே² - எனக்காக 
  • த்யக்த ஜீவிதாஹ - உயிரை விடத் தயாராக 
  • நாநா - பல்வேறு 
  • ஸ²ஸ்த்ர - ஆயுதங்கள் 
  • ப்ரஹரணாஹ - உடைய 
  • ஸர்வே - அவர்களெல்லாம் 
  • யுத்³த⁴ - யுத்தத்தில்
  • விஸா²ரதா³ஹ - வல்லுநர்கள்

இன்னும் எனக்காக உயிரையும் கொடுக்கக்கூடிய ஜயத்ரதன், கிருதவர்மன், சல்லியன் போன்றோர் எண்ணற்ற மாவீரர்கள் பலரும் உள்ளனர். யுத்தத்தில் வல்லுநர்களான அவர்கள் அனைவரும் பலவிதமான ஆயுதங்களுடன் அம்புகளுடன் தயாராக உள்ளனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.1.16

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே  
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்|| 
||ஞானிகளின் கேள்விகள்||

ஸ்லோகம் - 1.1.16

கோ வா ப⁴க³வதஸ் தஸ்ய
புண்ய ஸ்²லோகேட்³ய கர்மண꞉|
ஸு²த்³தி⁴ காமோ ந ஸ்²ருணுயாத்³
யஸ²꞉ கலிமலா பஹம்||

  • தஸ்ய - அப்படிப்பட்ட
  • புண்ய ஸ்²லோகேட்³ய - மஹநீயர்களால் ஸ்தோத்திரம் செய்யப்பட்ட
  • கர்மணஹ - வியாபாரத்தை உடைய
  • ப⁴க³வதஸ் -  மகாவிஷ்ணுவின்
  • கலிமலா பஹம் - கலியில் தோன்றும் தோஷத்தை நிவர்த்தி செய்யும்
  • யஸ²ஹ் - கீர்த்தியை
  • ஸு²த்³தி⁴ காமோ - பரிசுத்தன் ஆக விரும்பும்
  • கோ வா - எவன் தான் 
  •  ந ஸ்²ருணுயாத்³ - கேட்க மாட்டான்? யாவரும் கேட்பர்

கலியுகத்தில் பிறவி நோயைத் தீர்ப்பதும், மகான்களான சாதுக்களால் புகழப்படுவதும் ஆன பகவானுடைய திருவிளையாடல்களை, தன்னைத் தூய்மை ஆக்கிக் கொள்ள விரும்புபவர் எவர் தான்?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 24

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய|| 
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்||

||த்யான ஸ்லோகம் - 1|| 

த்⁴யாநம்||
க்ஷீரோ த³ந்வ ப்ரதே³ஸே² 
ஸு²சிமணி விலஸத்
ஸைகதே மௌக்தி காநாம்
மாலா க்லுப்தா ஸநஸ்த²: 
ஸ்ஃப²டிக மணி நிபை⁴ர் 
மௌக்தி கைர் மண்டி³தாங்க³:|

  • த்⁴யாநம் - தியானம், மனதை ஒருமுகப்படுத்துதல்
  • க்ஷீர - பால்
  • உத³ந்வ - கடல்
  • ப்ரதே³ஸே²  - பகுதியில், இடத்தில்
  • ஸு²சி - தூய்மையான, பரிசுத்தமான
  • மணி - இரத்தினம்
  • விலஸத் - ஒளி வீசுகின்ற, பிரகாசிக்கின்ற
  • ஸைகதே - மணற்பரப்பில்
  • மௌக்தி காநாம் - முத்துக்களின்
  • மாலா - மாலை
  • க்லுப்த - அமைக்கப்பட்ட, உருவாக்கப்பட்ட
  • ஆசநஸ்த²ஸ் - ஆசனத்தில் அமர்ந்திருப்பவர்
  • ஸ்ப²டிக - படிகம்
  • மணி - இரத்தினம்
  • நிபை⁴ர் - போன்ற, ஒத்த
  • மௌக்தி கைர் - முத்துக்களால்
  • மண்டி³த - அலங்கரிக்கப்பட்ட
  • அங்க³ஹ - திருமேனி, உடல்


ஸு²ப்⁴ரை ரப்⁴ரை ரத³ப்⁴ரைர் 
உபரி விரசி தைர் 
முக்த பீயூஷ வர்ஷை:
ஆநந்தீ³ ந: புநீயா த³ரி நளிந க³தா³ 
ஸ²ங்க² பாணிர் முகுந்த³:||

  • ஸு²ப்⁴ரைர் - வெண்மையான
  • அப்⁴ரை - மேகங்களால்
  • அத³ப்⁴ரைர் - மிகவும் வெண்மையான, ஒளிமிக்க
  • உபரி - மேலே
  • விரசி தைர் - அமைக்கப்பட்ட, உருவாக்கப்பட்ட
  • முக்த - விடப்பட்ட, பொழியப்படும்
  • பீயூஷ - அமுதம்
  • வர்ஷைஹி - மழையால், பொழிவால்
  • ஆநந்தீ³ - ஆனந்தத்தை அளிப்பவன்
  • நஃ - நம்மை
  • புநீயா- தூய்மைப்படுத்துவானாக 
  • த³ரி - தாங்கியிருப்பவர்
  • நளிந - தாமரை
  • க³தா³  - கதாயுதம்
  • ஸ²ங்க² - சங்கு
  • பாணிர் - கையில் உடையவர்
  • முகுந்த³ஹ - முக்தியை, மோட்சத்தை அளிப்பவர்


தூய்மையான இரத்தினங்களை மணல் பரப்பாக உள்ள திருப்பாற்கடல் எனப்படும் இடத்தில் முத்துமாலைகளால் அலங்காரம் செய்யப்பட்ட ஆசனத்தில் எழுந்தருளி இருப்பவரும், படிக மணிகளைப் போன்ற முத்துகளால் அலங்கரிக்கப்பட்ட திருமேனியை உடையவரும், மேலே விளங்கும் வெண்மையான மேகங்கள் பலவற்றால் துளிக்கப்படும் அமுதத் திவலைகளால் மகிழ்பவரும், திருவாழி திருச்சங்கு கதை பத்மம் ஆகியவற்றைத் திருக்கைகளில் ஏந்தியவரும், மேலே உலவுகின்ற வெண்மையான மேகங்கள் பொழிகின்ற அமிர்த தாரைகளால் மகிழ்பவருமான முகுந்தன் ஸ்ரீமந் நாராயணன் நம்மைப் புனிதர் ஆக்கிக் காப்பாராகl

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - 21

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

இருபத்தி ஒன்றாவது வார்த்தை

021. தேவு மற்றறியேன் என்றேனோ மதுரகவியாரைப் போலே|

மதுரகவி இல்லையென்றால் வைஷ்ணவத்தைப் போற்றிக் கொண்டாடும் ஆச்சார்ய வைபவம் என்ற ஒன்றே இல்லாமல் போயிருக்கும். ஓரிரு நூற்றாண்டுகள் நாலாயிர திவ்ய பிரபந்தம் பொது வழக்கில் இல்லாமல் போய்விட்டது. அந்தப் பாசுரங்கள் யாரிடம் வழக்கில் இருந்து வந்தது என்பதற்கும் சான்றுகள் இல்லை. கடவுள் செயல் என்று தான் சொல்ல வேண்டும்.  நாதமுனிகள், இரண்டு வைஷ்ணவர்கள் கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரத்தை பாடக் கேட்டு அதன் தமிழிலும் வடிவிலும் பொருளிலும் மயங்கி அதன் பின்னால் சென்று தேடப்போக அவர் சென்று சேர்ந்த இடம் திருக்குருகூர்.   அங்கே 12000 முறை அந்தப் பாசுரத்தை பாராயணம் செய்து யோக நெறியில் நம்மாழ்வாரிடமிருந்து நாலாயிரத்தையும் பெற்றதாக வரலாறு.  அப்படிப்பட்ட மதுரகவியாழ்வார் பிறந்த மண் இந்தப் பெண்பிள்ளை பிறந்த திருக்கோளூர் மண்ணே. இந்த திருக்கோளூர் பாண்டிய தேசத்தில் திருக்குருகூருக்கு (ஆழ்வார் திருநகரி) அருகில் உள்ளது. சித்திரையில் சித்திரை நக்ஷத்திரத்தில் அவதரித்தவர் மதுரகவியாழ்வார். இவர் காலத்தால் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர்.  


இவரது ஊருக்கு மிக அருகாமையில் உள்ள திருக்குருகூரில் உள்ள நம்மாழ்வாரின் ஞானத்தின் திண்மையை மதுரகவியார், வடநாட்டில் அயோத்திக்கு செல்லும் போது தான் அறிந்துக் கொண்டார். யாத்திரை முடித்து விட்டு திரும்பும் போது ஒரு அதியற்புதமான ஜோதி வானில் எழும்பிச் செல்வதை தனது யோக நெறியில் கண்டுணர்ந்த மதுரகவி அது எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ந்தபோது தென்பாண்டி நாட்டில் உள்ள திருக்குருகூரிலிருந்து வருவதை அறிந்து அந்த திசையை நோக்கி சென்று, அங்கே எம்பெருமான் கோவிலில் ஒரு புளிய மரத்தடியில் அசைவின்றி பதினாறு வருடங்கள் இருக்கும் நம்மாழ்வாரின் தேஜஸ் தான் அந்த ஒளி தான் என்பதை புரிந்து அவரை சந்திக்கிறார். 

சிறு கல் ஒன்றை அவர் அருகில் போட அத்தனை வருடம் கண்மூடி யோகத்தில் ஆழ்ந்திருந்த நம்மாழ்வார் முதன்முதலாக கண் விழிக்கிறார். செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்? என்று கேட்டார். அதற்கு நம்மாழ்வார் "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று ஆத்மாவின் தன்மையை மிக அழகாகக் கூறினார். அன்று முதல் மதுரகவி நம்மாழ்வாரை தனது ஆசானாக ஏற்றுக் கொண்டார். 


அவரிடம் சரணடைந்து அவரே எல்லாமாக எண்ணி ஆசார்ய பக்தியோடு இருந்தவர் மதுகவியாழ்வார். ஆசார்யனை தவிர மற்ற தேவதைகள் இருக்கு என்பதை நாங்கள் நம்ப மாட்டோம். ஆசார்ய அபிமானமே உத்தாரகம். தன் அடியார்களிடம் பக்தி செலுத்தினால் தான் பகவானுக்கு பிடிக்கும். ஆசார்யனை பற்றினாலே, கைங்கர்யம் புரிந்தாலே எம்பெருமான் மோக்ஷம் குடுத்து விடுவான். எம்பெருமானை விட ஆசார்ய பக்தி தான் முக்கியம் என்று சொல்பவர் மதுரகவியாழ்வார். நம்மாழ்வாரை தவிர மற்றொரு தெய்வம் அவருக்கு தெரியாது. கோயிலுக்குள் செல்லும் போது பெருமான் சந்நிதியில் இருக்கும் பெருமான் கண்ணில் படவேண்டாம் என்று கண்ணை மூடி கொண்டு போய் ஆசார்யனை சேவிப்பார். அந்த அளவுக்கு ஆசார்ய பக்தி நிறைந்தவர் மதுரகவியாழ்வார்.


வைஷ்ணவத்தில் பகவத் சம்பந்தம் கிடைக்கிறதோ இல்லையோ ஆச்சாரிய சம்பந்தம் இருந்தால் போதும் பகவத் சம்பந்தம் தானே வந்து சேர்ந்து விடும். மாறாக ஆச்சாரிய சம்பந்தம் இன்றி நேரடியாக பெருமாள் சம்பந்தம் என்பது எளிதான விஷயமில்லை. வைஷ்ணவத்தின் சூட்சுமமே இதில்தான் அடங்கியுள்ளது. மதுரகவியாழ்வார் இதற்கு மிகச் சிறந்த உதாரணம். 

மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் மறைவுக்கு பின்னர் அவருடைய தங்கத்தினாலான திருமேனியை ஊர் ஊராக எடுத்துச் சென்று அவர் புகழ் பாடி வந்தார். 


"வேதம் தமிழ்செய்த பெருமாள் வந்தார், திருவாய்மொழிப் பெருமாள் வந்தார், திருநகரிப் பெருமாள் வந்தார், திருவழுதிவளநாடர் வந்தார், திருக்குருகூர்நகர் நம்பி வந்தார்,  கார்மாறர் வந்தார், சடகோபர் வந்தார், பராங்குசர் வந்தார்" என்று பாட்டுப் பாடிக் கொண்டு செல்வது இவர் வழக்கம். 

பாடல் அங்கீகரம் என்பது இன்று மட்டுமல்ல அன்றும் பெரிய விஷயம். மதுரைத் தமிழ்ச் சங்கம் இறுதி செய்வதே வழக்கில் ஏற்றுக் கொள்ளப்படும். சங்கப்பலகை ஏற்றுக் கொள்ளுதல் என்ற மரபு கடைபிடிக்கப்பட்டது. நம்மாழ்வாரின் பாடல்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று மதுரையில் இருந்த தமிழ்ச் சங்கத்திற்கு பாடல் எழுதப்பட்ட ஓலைகளை எடுத்துச் செல்கிறார். அவருடைய எட்டு வரி, நான்கு வரிப் பாடல்களை எல்லாம் விட்டு விட்டு. கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே என்று திருவாய்மொழி (10.5.1) இரண்டு வரிப் பாடலை பலகையில் வைக்க தமிழ்ச் சங்கப் பலகை அதனை ஏற்றுக் கொண்டது என்பது வரலாறு. 


இதில் ஆச்சரியம் என்னவென்றால் அதன் பிறகு நம்மாழ்வாரின் பாசுரப் பெருமைகளை அறிந்த புலவர்கள் அவரைக் குறித்து ஒரே நேரத்தில் அத்தனை புலவர்களும் ஒரே பாடலை இயற்றினார்கள் என்பதாகும். 

ஈயாடுவதோ கருடற்கெதிரே இரவிக்கெதிர் மின்மினி ஆடுவதோ  
நாயாடுவதோ உறுமும்புலிமுன் நரி கேசரிமுன்நடையாடுவதோ  
பேயாடுவதோ ஊர்வசிக்குமுன் பெருமானடிசேர் வகுளாபரணன்  
ஓராயிரமாமறையின் தமிழிற்ஒருசொற்பெறுமோ இவ்வுலகிற்கவியே  

என்பது தான் அந்தப் பாடல். 

கண்ணிநுண் சிறுத்தாம்பு எனத் தொடங்கும் பதினொரு பாடல்களிலும் எம்பெருமானைப் பற்றி பாடாமல் தனது ஆச்சாரியரான நம்மாழ்வாரை பற்றி மட்டும் பாடியிருப்பதன் மூலம் ஆச்சாரிய சம்பந்தத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.


திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “அந்த அளவுக்கு ஆசார்ய பக்தியோடு நான் இல்லையே! அந்த நிஷ்டை என்னிடம் இல்லையே! ஆசார்யனை விட வேற தெய்வம் உண்டு என்று சொன்னேனே! ஆச்சாரியனைத் தவிர வேறு கடவுளை அறிந்ததில்லை என்று தலையில் வைத்துக் கொண்டாடும் மதுரகவியாழ்வாரைப் போல நான் கொண்டாடவில்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்