About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 14 August 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 24

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய|| 
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்||

||த்யான ஸ்லோகம் - 1|| 

த்⁴யாநம்||
க்ஷீரோ த³ந்வ ப்ரதே³ஸே² 
ஸு²சிமணி விலஸத்
ஸைகதே மௌக்தி காநாம்
மாலா க்லுப்தா ஸநஸ்த²: 
ஸ்ஃப²டிக மணி நிபை⁴ர் 
மௌக்தி கைர் மண்டி³தாங்க³:|

  • த்⁴யாநம் - தியானம், மனதை ஒருமுகப்படுத்துதல்
  • க்ஷீர - பால்
  • உத³ந்வ - கடல்
  • ப்ரதே³ஸே²  - பகுதியில், இடத்தில்
  • ஸு²சி - தூய்மையான, பரிசுத்தமான
  • மணி - இரத்தினம்
  • விலஸத் - ஒளி வீசுகின்ற, பிரகாசிக்கின்ற
  • ஸைகதே - மணற்பரப்பில்
  • மௌக்தி காநாம் - முத்துக்களின்
  • மாலா - மாலை
  • க்லுப்த - அமைக்கப்பட்ட, உருவாக்கப்பட்ட
  • ஆசநஸ்த²ஸ் - ஆசனத்தில் அமர்ந்திருப்பவர்
  • ஸ்ப²டிக - படிகம்
  • மணி - இரத்தினம்
  • நிபை⁴ர் - போன்ற, ஒத்த
  • மௌக்தி கைர் - முத்துக்களால்
  • மண்டி³த - அலங்கரிக்கப்பட்ட
  • அங்க³ஹ - திருமேனி, உடல்


ஸு²ப்⁴ரை ரப்⁴ரை ரத³ப்⁴ரைர் 
உபரி விரசி தைர் 
முக்த பீயூஷ வர்ஷை:
ஆநந்தீ³ ந: புநீயா த³ரி நளிந க³தா³ 
ஸ²ங்க² பாணிர் முகுந்த³:||

  • ஸு²ப்⁴ரைர் - வெண்மையான
  • அப்⁴ரை - மேகங்களால்
  • அத³ப்⁴ரைர் - மிகவும் வெண்மையான, ஒளிமிக்க
  • உபரி - மேலே
  • விரசி தைர் - அமைக்கப்பட்ட, உருவாக்கப்பட்ட
  • முக்த - விடப்பட்ட, பொழியப்படும்
  • பீயூஷ - அமுதம்
  • வர்ஷைஹி - மழையால், பொழிவால்
  • ஆநந்தீ³ - ஆனந்தத்தை அளிப்பவன்
  • நஃ - நம்மை
  • புநீயா- தூய்மைப்படுத்துவானாக 
  • த³ரி - தாங்கியிருப்பவர்
  • நளிந - தாமரை
  • க³தா³  - கதாயுதம்
  • ஸ²ங்க² - சங்கு
  • பாணிர் - கையில் உடையவர்
  • முகுந்த³ஹ - முக்தியை, மோட்சத்தை அளிப்பவர்


தூய்மையான இரத்தினங்களை மணல் பரப்பாக உள்ள திருப்பாற்கடல் எனப்படும் இடத்தில் முத்துமாலைகளால் அலங்காரம் செய்யப்பட்ட ஆசனத்தில் எழுந்தருளி இருப்பவரும், படிக மணிகளைப் போன்ற முத்துகளால் அலங்கரிக்கப்பட்ட திருமேனியை உடையவரும், மேலே விளங்கும் வெண்மையான மேகங்கள் பலவற்றால் துளிக்கப்படும் அமுதத் திவலைகளால் மகிழ்பவரும், திருவாழி திருச்சங்கு கதை பத்மம் ஆகியவற்றைத் திருக்கைகளில் ஏந்தியவரும், மேலே உலவுகின்ற வெண்மையான மேகங்கள் பொழிகின்ற அமிர்த தாரைகளால் மகிழ்பவருமான முகுந்தன் ஸ்ரீமந் நாராயணன் நம்மைப் புனிதர் ஆக்கிக் காப்பாராகl

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment