About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 12 April 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 138

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 

ஸ்லோகம் - 108

வநமாலீ க³தீ³ ஸா²ர்ங்கீ³ 
ஸ²ங்கீ² சக்ரீ ச நந்த³கீ:|
ஸ்ரீமாந் நாரயணோ விஷ்ணுர் 
வாஸுதே³வோ பி⁴ரக்ஷது|| (2)

ஸ்ரீ வாஸுதே³வோ பி⁴ரக்ஷது ஓம் நம இதி||

  • வநமாலீ - வைஜெயந்தி மலர்களின் மாலையை அலங்கரிப்பவர்
  • க³தீ³ - சூலாயுதத்தை ஏந்துபவர்
  • ஸா²ர்ங்கீ³ - ஷார்ங்கம் என்று அழைக்கப்படும் வில் ஏந்தியவர்
  • ஸ²ங்கீ² - பாஞ்சஜன்யம் என்ற சங்கு தாங்குபவர்
  • சக்ரி ச - சுதர்சனம் என்று அழைக்கப்படும் சக்கரத்தை ஆயுதமாக தாங்குபவர்
  • நந்த³கீ - நந்தகா என்ற வாளை ஏந்தியவர்
  • ஸ்ரீமாந் - லட்சுமி தேவியை உடையவர்
  • நாரயணோ - நர என்றால் ஆத்மா, அயனம் என்றால் பயணம் அல்லது தங்குமிடம். நாராயணன் எல்லா உயிர்களிலும் வசிக்கும் ஒருவர்.
  • விஷ்ணுர் - அகிலம் முழுவதையும் வியாபித்திருப்பவர் 
  • வாஸுதே³வ - பிரபஞ்சம் முழுவதையும் மாயாவால் மறைக்கும் தெய்வீகம்
  • அபி⁴ரக்ஷது - பக்தர்களைக் காப்பவர்
வநமாலா என்னும் வைஜெயந்தி மாலையும்,  சங்க சக்கர முதலிய திவ்ய ஆயுதங்களையும் தரித்துள்ள  எங்கும் வியாபித்திருக்கும் ஸ்ரீமந்சரி சரி  நாராயணன் என்னை காக்க வேண்டும். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.2 

வ்யாமிஸ்² ரேணேவ வாக்யேந 
பு³த்³தி⁴ம் மோஹய ஸீவ மே|
ததே³கம் வத³ நிஸ்² சித்ய 
யேந ஸ்²ரேயோ அஹ மாப்நுயாம்||

  • வ்யாமிஸ்²ரேண - இரு பொருள்படும்  
  • இவ - போன்ற 
  • வாக்யேந - வாக்கியங்கள் 
  • பு³த்³தி⁴ம் - புத்தி  
  • மோஹயஸி - தாங்கள் மயக்குகின்றீர்  
  • இவ - நிச்சயமாக 
  • மே - என்னுடைய  
  • தத் - எனவே 
  • ஏகம் - ஒன்றை 
  • வத³ - தயவு செய்து கூறுவீர் 
  • நிஸ்²சித்ய - நிச்சயமாக 
  • யேந - எதனால்  
  • ஸ்²ரேயோ - உண்மைப் பலன் 
  • அஹம் - நான் 
  • ஆப்நுயாம் - அடையலாம்

இரு பொருள்படும் வாக்கியங்களால் என்னுடைய புத்தியை தாங்கள் மயக்குகின்றீர். எனவே, நான் எதனால் நன்மை அடையலாம் என்ற ஒன்றை, தயவுசெய்து கூறுவீர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.28

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.28

த்⁴ருத வ்ரதே ந ஹி மயா 
ச²ந்தா³ம் ஸி கு³ரவோ க்³நய:|
மாநிதா நிர்வ்யலீ கேந 
க்³ருஹீதம் சாநு ஸா²ஸநம்|| 

  • த்⁴ருத வ்ரதே ந - விரதங்களை தரித்தவனும்
  • நிர்வ்யலீ கேந -  கபடம் அற்றவனுமான
  • மயா -  என்னால்
  • ச²ந்தா³ம் ஸி -  வேதங்களும்
  • கு³ரவ - பெரியோர்களும் 
  • அக்³நயஹ - அக்னிகளும்  
  • மாநிதா - பூஜிக்கப்பட்டன
  • அநு ஸா²ஸநம் ச - அவர்களின் கட்டளையும்
  • க்³ருஹீதம் ஹி - ஸ்வீகரிக்கப் பட்டது அன்றோ

பிரம்மசரிய விரதத்தைக் கைக்கொண்டு வேதங்களைக் கற்றேன். குருமார்களையும் அக்னியையும் வணங்கினேன். அவர்களது ஆணையைக் கபடமின்றித் தலைமேற் கொண்டேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.73

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.73

தத்ர லங்காம் ஸமா ஸாத்³ய 
புரீம் ராவண பாலிதாம்|
த³த³ர்ஸ² ஸீதாம் த்⁴யா யந்தீம்
அஸோ²க வநி காம் க³தாம்|| 

  • ராவண பாலிதாம் - ராவணனால் அரசாளப்பட்ட 
  • லங்காம் - இலங்கை என்கிற
  • புரீம் - பட்டணத்தை
  • ஸமா ஸாத்³ய -  அடைந்து
  • தத்ர - அங்கு 
  • அஸோ²க வநி காம் - அசோக வனத்தை 
  • க³தாம் - அடைந்து
  • த்⁴யா யந்தீம் - தியானித்துக் கொண்டு இருக்கிற
  • ஸீதாம் - ஸீதையை
  • த³த³ர்ஸ² - கண்டார்

அவர் ராவணனால் ஆளப்படும் லங்கா புரியை அடைந்து, அசோக வனத்தில் தியானித்துக் கொண்டிருக்கும் ஸீதையைக் கண்டார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்