About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 11 April 2024

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.72

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.72

ததோ க்³ருத்⁴ரஸ்ய வசநாத் 
ஸம்பாதேர் ஹநுமாந் ப³லீ|
ஸ²த யோஜந விஸ்தீர்ணம் 
புப்லுவே லவணார்ணவம்|| 

  • ததோ - அதன் பிறகு 
  • ப³லீ - பலவானான 
  • ஹநுமாந் - ஹநுமார்
  • க்³ருத்⁴ரஸ் ய - கழுகான 
  • ஸம்பாதேர் - ஸம்பாதியினுடைய 
  • வசநாத் - வார்த்தையில்
  • ஸ²த யோஜந - நூறு யோஜனை 
  • விஸ்தீர்ணம் - விஸ்தாரமான 
  • லவணார்ணவம் - ஸமுத்திரத்தை 
  • புப்லுவே - தாண்டினார் 

அப்போது பலமிக்கவனான ஹநுமார், கழுகான ஸம்பாதியின் சொல்லைக் கேட்டு, நூறு யோஜனைகள் பரந்திருக்கும் லவணச் சமுத்திரத்தின் (உப்புப் பெருங்கடலின்) மேல் கடந்து சென்றார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 114 - பெரியாழ்வார் திருமொழி - 1.9.7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 114 - பாலும் வெண்ணெயும் வயிறார விழுங்கியவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஏழாம் பாசுரம்

பொத்த உரலைக் கவிழ்த்து* அதன் மேல் ஏறி* 
தித்தித்த பாலும்* தடாவினில் வெண்ணெயும்*
மெத்தத் திருவயிறு* ஆர விழுங்கிய*
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான்* 
ஆழியான் என்னைப் புறம் புல்குவான்|

  • பொத்த - அடியில் ஓட்டையாய் போன
  • உரலை - உரலை கொண்டு வந்து
  • கவிழ்த்து - தலை கவிழ்த்துப் போட்டு
  • அதன் மேல் - அதன் மேல்
  • ஏறி - ஏறி நின்று கொண்டு
  • தடாவினில் - உறியில் இருக்கும்
  • தித்தித்த பாலும் - இனிப்பான பாலையும், திரட்டுப் பாலையும்
  • வெண்ணெயும் - வெண்ணெயையும்
  • திரு வயிறு ஆர் - வயிறு நிரம்ப
  • மெத்த விழுங்கிய - மிகுதியாக விழுங்கின
  • அத்தன் - தலைவன்
  • வந்து - ஓடி வந்து
  • என்னை - என்னுடைய
  • புறம் - முதுகை
  • புல்குவான் - கட்டிக் கொள்வான்
  • ஆழியான் - கைகளில் திருச்சக்கரம் ஏந்தியவன்
  • என் புறம் - என்னுடைய 
  • புல்குவான்! - முதுகை கட்டிக் கொள்வான்

ஓட்டையான உரலை தலை கீழாகப் போட்டு அதன் மீதேறி, உயரே வைத்து இருந்த மிடாக்களிலிருந்து சுவையான பாலையும், வெண்ணையையும் எடுத்து வயிறு நிரம்ப நன்றாக உண்ட என் தலைவன் கண்ணன் என் பின்னால் வந்து என்னைக் கட்டிக் கொள்வான்! கைகளில் திருச்சக்கரம் ஏந்தியவன் என்னைப் பின்புறம் வந்து கட்டிக் கொள்வான்! 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Wednesday, 10 April 2024

108 திவ்ய தேசங்கள் - 034 - திருவாலி – திருநகரி 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||034. திருவாலி – திருநகரி||
||திருநாங்கூர்||
||முப்பத்தி நான்காவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 42 - 2

திருமங்கையாழ்வார்
023. திவ்ய ப்ரபந்தம் - 1208 - பெரிய திருமொழி - 3.7.1
கள்வன் கொல்? யான் அறியேன்* கரியான் ஒரு காளை வந்து*
வள்ளி மருங்குல்* என் தன் மட மானினைப் போத என்று*
வெள்ளி வளைக் கை* பற்றப் பெற்ற தாயரை விட்டு அகன்று*
அள்ளல் அம் பூங் கழனி* அணி ஆலி புகுவர்கொலோ?

024. திவ்ய ப்ரபந்தம் - 1209 - பெரிய திருமொழி - 3.7.2
பண்டு இவன் ஆயன் நங்காய்* படிறன் புகுந்து* 
என் மகள் தன் தொண்டை அம் செங் கனி வாய்* நுகர்ந்தானை உகந்து* 
அவன் பின் கெண்டை ஒண் கண் மிளிரக்* கிளிபோல் மிழற்றி நடந்து*
வண்டு அமர் கானல் மல்கும்* வயல் ஆலி புகுவர்கொலோ?

025. திவ்ய ப்ரபந்தம் - 1210 - பெரிய திருமொழி - 3.7.3
அஞ்சுவன் வெம் சொல் நங்காய்* அரக்கர் குலப் பாவை தன்னை*
வெம் சின மூக்கு அரிந்த* விறலோன் திறம் கேட்கில் மெய்யே*
பஞ்சிய மெல் அடி* எம் பணைத் தோளி பரக்கழிந்து*
வஞ்சி அம் தண் பணை சூழ்* வயல் ஆலி புகுவர்கொலோ?

026. திவ்ய ப்ரபந்தம் - 1211 - பெரிய திருமொழி - 3.7.4
ஏது அவன் தொல் பிறப்பு?* இளையவன் வளை ஊதி* 
மன்னர் தூதுவன் ஆயவன் ஊர்* சொல்வீர்கள் சொலீர் அறியேன்*
மாதவன் தன் துணையா நடந்தாள்* தடம் சூழ் புறவில்*
போது வண்டு ஆடு செம்மல்* புனல் ஆலி புகுவர்கொலோ?

027. திவ்ய ப்ரபந்தம் - 1212 - பெரிய திருமொழி - 3.7.5
தாய் எனை என்று இரங்காள்* தடந் தோளி தனக்கு அமைந்த*
மாயனை மாதவனை* மதித்து என்னை அகன்ற இவள்*
வேய் அன தோள் விசிறிப்* பெடை அன்னம் என நடந்து*
போயின பூங் கொடியாள்* புனல் ஆலி புகுவர்கொலோ?

028. திவ்ய ப்ரபந்தம் - 1213 - பெரிய திருமொழி - 3.7.6
என் துணை என்று எடுத்தேற்கு* இறையேனும் இரங்கிற்றிலள்*
தன் துணை ஆய என் தன்* தனிமைக்கும் இரங்கிற்றிலள்*
வன் துணை வானவர்க்கு ஆய்* வரம் செற்று அரங்கத்து உறையும்*
இன் துணைவனொடும் போய்* எழில் ஆலி புகுவர்கொலோ?

029. திவ்ய ப்ரபந்தம் - 1214 - பெரிய திருமொழி - 3.7.7
அன்னையும் அத்தனும் என்று* அடியோமுக்கு இரங்கிற்றிலள்*
பின்னை தன் காதலன் தன்* பெருந் தோள் நலம் பேணினளால்*
மின்னையும் வஞ்சியையும்* வென்று இலங்கும் இடையாள் நடந்து*
புன்னையும் அன்னமும் சூழ்* புனல் ஆலி புகுவர்கொலோ?

030. திவ்ய ப்ரபந்தம் - 1215 - பெரிய திருமொழி - 3.7.8
முற்றிலும் பைங் கிளியும்* பந்தும் ஊசலும் பேசுகின்ற*
சிற்றில் மென் பூவையும்* விட்டு அகன்ற செழுங் கோதை தன்னைப்*
பெற்றிலேன் முற்று இழையை* பிறப்பிலி பின்னே நடந்து*
மற்று எல்லாம் கைதொழப் போய்* வயல் ஆலி புகுவர்கொலோ?

031. திவ்ய ப்ரபந்தம் - 1216 - பெரிய திருமொழி - 3.7.9
காவி அம் கண்ணி எண்ணில்* கடி மா மலர்ப் பாவை ஒப்பாள்*
பாவியேன் பெற்றமையால்* பணைத் தோளி பரக்கழிந்து*
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள்* நெடுமாலொடும் போய்*
வாவி அம் தண் பணை சூழ்* வயல் ஆலி புகுவர்கொலோ?

032. திவ்ய ப்ரபந்தம் - 1217 - பெரிய திருமொழி - 3.7.10
தாய் மனம் நின்று இரங்கத்* தனியே நெடுமால் துணையா*
போயின பூங் கொடியாள்* புனல் ஆலி புகுவர் என்று*
காய் சின வேல் கலியன்* ஒலிசெய் தமிழ் மாலை பத்தும்*
மேவிய நெஞ்சு உடையார்* தஞ்சம் ஆவது விண் உலகே|

033. திவ்ய ப்ரபந்தம் - 1329 - பெரிய திருமொழி - 4.9.2
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே* மருவினிய மைந்தா*
அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே*
நந்தா விளக்கின் சுடரே* நறையூர் நின்ற நம்பீ* 
என் எந்தாய் இந்தளூராய்* அடியேற்கு இறையும் இரங்காயே|

034. திவ்ய ப்ரபந்தம் - 1519 - பெரிய திருமொழி - 6.8.2
முந்நீரை முன் நாள்* கடைந்தானை* 
மூழ்த்த நாள் அந் நீரை மீன் ஆய்* அமைத்த பெருமானை*
தென் ஆலி மேய திருமாலை எம்மானை*
நல் நீர் சூழ்* நறையூரில் கண்டேனே|

035. திவ்ய ப்ரபந்தம் - 1733 - பெரிய திருமொழி - 8.9.6
எஞ்சா வெம் நரகத்து* அழுந்தி நடுங்குகின்றேற்கு*
அஞ்சேல் என்று அடியேனை* ஆட்கொள்ள வல்லானை*
நெஞ்சே நீ நினையாது* இறைப்பொழுதும் இருத்தி கண்டாய்*
மஞ்சு ஆர் மாளிகை சூழ்* வயல் ஆலி மைந்தனையே|

036. திவ்ய ப்ரபந்தம் - 1735 - பெரிய திருமொழி - 8.9.8
கற்றார் பற்று அறுக்கும்* பிறவிப் பெருங் கடலே*
பற்றா வந்து அடியேன்* பிறந்தேன் பிறந்த பின்னை*
வற்றா நீர் வயல் சூழ்* வயல் ஆலி அம்மானைப் பெற்றேன்* 
பெற்றதுவும்* பிறவாமை பெற்றேனே|

037. திவ்ய ப்ரபந்தம் - 1850 - பெரிய திருமொழி - 10.1.3
வேலை ஆல் இலைப்* பள்ளி விரும்பிய*
பாலை ஆர் அமுதத்தினைப்* பைந் துழாய்* 
மாலை ஆலியில்* கண்டு மகிழ்ந்து போய்*
ஞாலம் உன்னியைக் காண்டும்* நாங்கூரிலே|

038. திவ்ய ப்ரபந்தம் - 2014 - பெரிய திருமொழி - 11.7.3
தூயானைத்* தூய மறையானை* தென் ஆலி மேயானை* 
மேவாள் உயிர் உண்டு அமுது உண்ட வாயானை*
மாலை வணங்கி* அவன் பெருமை பேசாதார்* 
பேச்சு என்றும்* பேச்சு அல்ல கேட்டாமே|

039. திவ்ய ப்ரபந்தம் - 2027 - பெரிய திருமொழி - 11.8.6
படை நின்ற* பைந்தாமரையோடு* 
அணி நீலம் மடை நின்று அலரும்* வயல் ஆலி மணாளா* 
இடையன் எறிந்த மரமே* ஒத்து இராமே*
அடைய அருளாய்* எனக்கு உன் தன் அருளே|

040. திவ்ய ப்ரபந்தம் - 2063 - திருநெடுந்தாண்டகம் - 2.2 (12)
நெஞ்சு உருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்* 
நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள்* 
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ! என்னும்* 
வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும்* 
அம் சிறைய புட்கொடியே ஆடும் பாடும்* 
அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும்* 
என் சிறகின் கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன்* 
இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே|

041. திவ்ய ப்ரபந்தம் - 2706 - சிறிய திருமடல் - 4.4 (34)
நான் அவனைக் கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் *
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவலூரே* (2)
மதிள் கச்சி ஊரகமே பேரகமே*
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே* 
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்* 
ஆராமம் சூழ்ந்த அரங்கம்* கணமங்கை| (2)

042. திவ்ய ப்ரபந்தம் - 2773 - பெரிய திருமடல் - 7.1 (61)
மா மலர் மேல் அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி*
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை*
கன்னி மதிள் சூழ் கண மங்கைக் கற்பகத்தை*
மின்னை, இரு சுடரை, வெள்ளறையுள் கல் அறை மேல் பொன்னை* 
மரதகத்தை புட்குழி எம் போர் ஏற்றை* மன்னும் அரங்கத்து எம் மா மணியை|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 81

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 26

ஸ்கந்தம் 03

தாயைப் பார்த்து சாதகனின்‌ தன்னிறைவை விளக்கிய கபிலர் மேற்கொண்டு ஸாதுக்களின்‌ மகிமைகளைக் கூறுகிறார்.

தாயே! உலகியல் இன்பங்களைப் பெரிதென நினைத்து ஒழுகுபவர்களுடனான இணக்கம், என்றும் எதனாலும் அறுக்க இயலாத பாசக்கயிறு.


அதே மன ‌இணக்கம், உத்தம ஸாதுக்களிடம் ஏற்படுமாயின் அது இடையூறு இன்றித் திறந்து வைக்கப்பட்ட முக்தி வாயில் என்றும் அறிஞர்கள்‌ கூறுகிறார்கள். அத்தகைய சாதுக்களைப் பற்றிக் கூறுகிறேன் கேளுங்கள்.

சாதுக்கள் பூமியினும் பொறுமை மிக்கவர். பிறர் துன்பங்கண்டு இரங்கி, பயன் நோக்காது உதவி புரியும் கருணை மிக்கவர். ஆகவே, அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நண்பராவார். பகைவரற்றவர். ஐம்புலன்களையும், மனத்தையும் வெற்றி கொண்டவர். ஒழுக்கமே அவர்க்குப் பொன்னகை. பிறவற்றில் மனத்தை ஓடவிடாது பகவானான என்னிடம்‌ காதல்‌ கொண்டவர். எனக்காக அனைத்து கர்மங்களையும் துறந்தவர். சுற்றம் அனைத்தையும் நீக்கி, என்னையே சுற்றமாய்க் கொண்டவர். எனது திருவிளையாடல்களைக்‌ கேட்டு மகிழ்பவர். அவற்றையே திரும்ப திரும்பக் கேட்பதும் சொல்வதுமாகப் பொழுது போக்குவர். என்னிடமே நிறைந்த மனம் கொண்ட இத்தகைய சாதுக்களை வினைப்பயனால் விளையும்‌ துன்பங்கள் கூட வருந்தச் செய்யாது. 

கற்பின் சிகரமே! இத்தகைய ஸாதுக்களையே ஒருவன் தேடிச் சென்று அடைய வேண்டும். அவர்களுடைய ஒரு தொடர்பினால், செவிக்கும் இதயத்திற்கும்‌ அமுதாய் விளங்கும் எனது திருவிளையாடல்கள் பற்றிய கதைகளை எப்போதும் கேட்கும் வாய்ப்பு கிட்டும்.‌ அக்கதைகளைக் ‌கேட்பதால், முக்தியில் ஈடுபாடும், என்னிடம்‌ அன்பும்‌ தோன்றும். படைத்தல், காத்தல், அழித்தலாகிய எனது திருவிளையாடல்களைக் கேட்டு, அதையே சிந்தனை செய்வதால் என்னிடம்‌ அசைவற்ற பக்தி உண்டாகும். அதனால் ஸ்வர்கம் முதலியவற்றில் இருக்கும் பற்று நீங்கி பக்தி யோகத்தால் மனத்தைத் தனதாக்கிக் கொள்ள இயலும். அப்படிப்பட்ட சாதகன் முடிவில் என்னையே அடைகிறான், என்றார் கபிலர்.

தொடர்ந்து பக்தி யோகம்‌ பற்றி வினவினாள் தேவஹுதி.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்