About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 3 April 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 133

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 

ஸ்லோகம் - 103

ப்ரமாணம் ப்ராண நிலய: 
ப்ராண ப்⁴ருத் ப்ராண ஜீவந:|
தத்வம் தத்வ விதே³காத்மா 
ஜந்ம ம்ருத்யு ஜராதிக³:||

  • 959. ப்ரமாணம் - பிரமாணமாய் இருப்பவர். அவர் எல்லாவற்றிற்கும் உண்மையான ஆதாரம்.
  • 960. ப்ராண நிலயஃ - அனைத்து ஆன்மாக்களுக்கும் வாழ்விடமானவர். எல்லா உயிர்களுக்கும் இருப்பிடமாக இருப்பவர்.
  • 961. ப்ராண ப்⁴ருத் - உயிரினங்களைத் தரிப்பவர். அவர் அனைத்து உயிரினங்களையும் தாங்குகிறார்.
  • 962. ப்ராண ஜீவநஹ - உயிரினங்களுக்கு வாழ்வாக இருப்பவர்.
  • 963. தத்வம் - சாரமாக, தத்துவமாக உள்ளவர்.
  • 964. தத்வ வித்³ - தத்துவத்தை அறிந்தவர். உண்மையை அறிந்தவர்.
  • 965. ஏகாத்மா - உலகங்கட்கெல்லாம் ஓருயிராய் இருப்பவர். ஒரே ஒரு உயர்ந்த ஆத்மா.
  • 966. ஜந்ம ம்ருத்யு ஜராதிக³ஹ - பிறப்பு, இறப்பு, மூப்புகட்கு அப்பாற்பட்டவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.70

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.70 

ஆபூர்ய மாணம் அசல ப்ரதிஷ்ட²ம் 
ஸமுத்³ர மாப: ப்ரவி ஸ²ந்தி யத்³வத்|
தத்³வத் காமா யம் ப்ரவி ஸ²ந்தி ஸர்வே 
ஸ ஸா²ந்திம் ஆப்நோதி ந காம காமீ||

  • ஆபூர்ய மாணம் - என்றும் நிறைந்த 
  • அசல ப்ரதிஷ்ட²ம் - உறுதியாக நிலைத்த 
  • ஸமுத்³ரம் - கடல் 
  • ஆபஃ - நீர் 
  • ப்ரவி ஸ²ந்தி - புகுந்து 
  • யத்³ வத்து - உள்ளபடி 
  • தத்³வத் - அது போல 
  • காமா - ஆசைகள் 
  • யம் - எவரிடம் 
  • ப்ரவி ஸ²ந்தி - புகுந்து 
  • ஸர்வே - எல்லா 
  • ஸ - அம்மனிதன் 
  • ஸா²ந்திம் - அமைதி 
  • ஆப்நோதி - அடைகிறான்  
  • ந - அல்ல 
  • காம காமீ - ஆசைகளை பூர்த்தி செய்ய விரும்புபவன்

கடலில், நதிகள் வந்து விழுந்து கலக்கும் போது, அது மேன்மேலும் நிரப்புதற்குரியதாய் அசையா நிலை கொண்டிருப்பது போலே விருப்பங்கள் தன்னுள்ளே புகுந்து தாக்கும் போதுஅமைதியாய் இருப்பவன் எவனோ அவன் சாந்தி அடைகிறான். விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.23

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.23

த ஏத ருஷயோ வேத³ம் 
ஸ்வம் ஸ்வம் வ்யஸ் யந் அநே கதா⁴|
ஸி²ஷ்யை: ப்ரஸி²ஷ்யைஸ் தச் ஸி²ஷ்யைர்
வேதா³ஸ்தே ஸா²கி² நோ ப⁴வந்|| 

  • தே ஏதே -  அப்படிப்பட்ட இந்த 
  • ருஷயோ -  பைலாதி மஹரிஷிகள் 
  • ஸ்வம் ஸ்வம் வேத³ம் - தங்கள் தங்கள் வேதத்தை 
  • அநே கதா⁴ வ்யஸ் யந் - பலவிதமாக பிரித்தார்கள் 
  • தே வேதா³ஸ் -  அவ்வேதங்கள் 
  • ஸி²ஷ்யைஃ -  அவரது சீடர்களாலும் 
  • ப்ர ஸி²ஷ்யைஸ் -  சீடரது சீடர்களாலும்
  • தச் ஸி²ஷ்யைர் - அவர்களுடைய சிஷ்யர்களாலும் 
  • ஸா²கி² ந அப⁴வந்நு -  சாகைகள் உள்ளவர்களாக ஆயின 

பிறகு, அந்த ரிஷிகள் தத்தம் வேதத்தைப் பல பிரிவுகளாக வகுத்தனர். பின்னர், அவர்களுடைய சீடர்கர்கள் என்று வழி வழியாக வேதங்கள் பல கிளைகள் உள்ளனவாகப் பிரிக்கப்  பட்டன. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.68

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.68

ததோ க³ர்ஜத்³ த⁴ரிவர: 
ஸுக்³ரீவோ ஹேம பிங்க³ள:|
தேந நாதே³ந மஹதா 
நிர் ஜகா³ம ஹரீஸ்²வர:|| 

  • தத⁴ - அங்கிருந்து 
  • ஹரிவரஹ - வாநர ஸ்ரேஷ்டரான 
  • ஹேம பிங்க³ளஹ - ஸ்வர்ணம் போல் மஞ்சள் வர்ணரான 
  • ஸுக்³ரீவோ - ஸுக்³ரீவன் 
  • அக³ர்ஜத்³ - கர்ஜித்தார் 
  • மஹதா தேந - அந்த பெரிய 
  • நாதே³ந - த்வனியால் 
  • ஹரீஸ்² வரஹ - வாநரர்களின் ஈசனான வாலி 
  • நிர் ஜகா³ம - வெளிக் கிளம்பினான்

அதன் பிறகு, வாநரர்களில் சிறந்தவனும், பொன்னிறம் கொண்டவனுமான ஸுக்ரீவன் பெரு முழக்கம் செய்தான். அந்தப் பேரொலியால் வாநரர்களின் மன்னன் வாலி வெளியே வந்தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்