About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 18 February 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 113

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 

ஸ்லோகம் - 83

ஸமா வர்த்தோ நிவ்ருத் தாத்மா 
து³ர்ஜயோ து³ரதி க்ரம:|
து³ர்லபோ⁴ து³ர்க³மோ து³ர்கோ³ 
து³ரா வாஸோ து³ராரிஹா||

  • 779. ஸமா வர்த்தோ - திரும்பத் திரும்ப அவதரிப்பவர். தனது படைப்பின் செயல்பாட்டை சுழற்சியில் மீண்டும் மீண்டும் செய்கிறார். அவருடைய  எண்ணங்கள், எப்பொழுதும் தன் பக்தர்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதைச் சுற்றியே சுழல்கின்றன.
  • 780. நிவ்ருத் தாத்மா - ஒன்றிலும் சேராத தனித்த திருப்பப்பட்ட மனதை உடையவர். முதன்மையானவர், ஒப்பற்றவர். உயர்ந்தவர். பெரியவர்களை விட பெரியவர்.  உலகப் பற்றுகளிலிருந்து மனம் திரும்பியவர்.  நிவிருத்தி தர்மத்தை கடைப்பிடிப்பவர்களின் ஆத்மாவாக இருப்பவர்.  கர்மாவின்படி பலன்களை வழங்குபவர்.தனது அவதாரங்களை நம்மிடையே எடுத்துக் கொண்டாலும், அவர் சம்சாரத்தின் பந்தங்களிலிருந்து விடுபட்டவர். எங்கும் நிறைந்திருப்பதால் எதையும் விட்டு எங்கும் விலகாதவர். பிரளய காலத்தில் ஜீவாத்மாக்களை தன்னுள் இழுத்துக் கொண்டவர். அனைத்தையும் முழுமையாக ஊடுருவியவர். சிருஷ்டியின் (படைப்பு) பிரளய (அழித்தல்) விளைவுகளால் பாதிக்கப்படாதவர்.
  • 781. து³ர்ஜயோ - வெற்றி கொள்ள முடியாதவர். அன்பாலும் பக்தியாலும் தவிர  கட்டுப்படுத்த முடியாதவர்.
  • 782. து³ரதி க்ரமஹ - மீற முடியாதவர். மோட்சத்தை நாடுபவர்களால் அவருக்கு கீழ்ப்படியவோ அல்லது புறக்கணிக்கவோ முடியாது.
  • 783. து³ர்லபோ⁴ - அடைவதற்கு அரியவர். ஒரே மனப்பான்மையின் மூலம் மட்டுமே அடைய முடியும்.
  • 784. து³ர்க³மோ - நெருங்க முடியாத ஒளியை உடையவர். அவரது பிரகாசத்தால் அவரை அடைவது கடினம்.
  • 785. து³ர்கோ³ - அடைய முடியாதவர். பெரும் தடைகள் காரணமாக அவர் எளிதில் உணரப்படுவதில்லை.
  • 786. து³ரா வாஸோ - நெருங்க முடியாத இருப்பிடத்தை உடையவர். அவரது இருப்பிடமான ஸ்ரீ வைகுந்தம் அடைவது எளிதல்ல.
  • 787. து³ராரிஹா - தன்னை அடைய ஓட்டாமல் தீயவரை விலக்கி வைப்பவர். தீய எண்ணம் கொண்ட எதிரிகளை விரட்டுபவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.50

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.50 

பு³த்³தி⁴ யுக்தோ ஜஹாதீஹ 
உபே⁴ ஸுக்ருத து³ஷ் க்ருதே|
தஸ்மாத்³ யோகா³ய யுஜ் யஸ்வ 
யோக³: கர்மஸு கௌஸ²லம்||

  • பு³த்³தி⁴ யுக்தோ - புத்தியுடையவன்
  • ஜஹாதி - தப்ப இயலும் 
  • இஹ - இவ்வாழ்வில் 
  • உபே⁴ - இரண்டிலும் 
  • ஸுக்ருத து³ஷ்க்ருதே - நற்செய்கை தீச்செய்கை 
  • தஸ்மாத்³ - எனவே 
  • யோகா³ய - பக்தித் தொண்டிற்காக 
  • யுஜ் யஸ்வ - ஈடுபடு 
  • யோக³ஹ் - யோக உணர்வு 
  • கர்மஸு - எல்லாச் செயல்களிலும் 
  • கௌஸ²லம் - திறமையாம் (விடுபட உபாயமாகும்)

புத்தியுடையவன் இங்கு நற்செய்கை தீச்செய்கை இரண்டையும் துறக்கிறான். ஆதலால் நீ யோகத்திலே பொருந்தி விடு. யோகம் செயல்களில் ஈடுபடுவாயாக.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.3

கஸ்மிந் யுகே³ ப்ரவ்ருத் தேயம் 
ஸ்தா²நே வா கேந ஹேதுநா|
குத: ஸஞ்சோதி³த: க்ருஷ்ண: 
க்ருதவாந் ஸம்ஹிதாம் முநி:|| 

  • கஸ்மிந் யுகே³ - எந்த யுகத்தில்
  • இயம் ப்ரவ்ருத்தா -  இக்கதை நடந்தது
  • ஸ்தா²நே வா - எந்த இடத்தில் ஏற்பட்டது
  • கேந ஹேதுநா - என்ன காரணத்தால் ஏற்பட்டது
  • குதஸ் - என்ன காரணம் கொண்டு
  • ஸஞ்சோதி³தஹ் - தூண்டப்பட்டவராய்
  • முநிஹி - மஹரிஷியான
  • க்ருஷ்ணஹ - வியாஸ பகவான்
  • ஸம்ஹிதாம் - இந்த ஸ்ரீமத் பாகவதத்தை
  • க்ருதவாந் - செய்தார்

இது எந்த காலகட்டத்தில் மற்றும் எந்த இடத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்டது, இது ஏன் எடுக்கப்பட்டது? மகா முனிவரான கிருஷ்ண த்வைபாயன வியாசர் இந்த இலக்கியத்தைத் தொகுக்க எங்கிருந்து உத்வேகம் பெற்றார்?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.48

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.48

நிஜகா⁴ந ரணே ராமஸ் 
தேஷாம் சைவ பதா³நு கா³ந்|
வநே தஸ்மிந் நிவஸதா 
ஜநஸ் தா²ந நிவாஸி நாம்|| 

  • தேஷாம் - அவர்களுடைய
  • பதா³நு கா³ந் -  கூட்டாளிகளையும்
  • ராமஸ் ஏவ - ஸ்ரீராமரே
  • ரணே - போரில்
  • நிஜகா⁴ந - கொன்றார்
  • தஸ்மிந் வநே - அந்த வனத்தில்
  • நிவஸதா - வஸித்து வந்தவராலே
  • ஜநஸ் தா²ந நிவாஸி நாம் - ஜன ஸ்தானத்தில் வஸித்து வந்த

மற்றும் அவர்களுடைய கூட்டாளிகள் அனைவரையும், அவர்களின் தொண்டர்களையும் ஸ்ரீராமரே போரில் கொன்றார். அந்த வனத்தில் அவர் வசித்திருந்த போது, ஜன ஸ்தானத்தில் வஸித்து வந்த, 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்