About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 11 February 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 111

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 

ஸ்லோகம் - 81

தேஜோ வ்ருஸோ² த்³யுதி தரஸ் 
ஸர்வ ஸ²ஸ்த்ர ப்ருதாம் வர:|
ப்ரக்³ரஹோ நிக்³ரஹோ வ்யக்³ரோ 
நைக ஸ்²ருங்கோ³ க³தா³க்³ரஜ:||

  • 763. தேஜோ வ்ருஸோ² - ஒளியைப் பொழிபவர். நல்ல உள்ளம் கொண்டவர்களின் பாதுகாப்பு வடிவில் மகிமையையும் அருளையும் பொழிகிறார். பக்தர்களைப் பாதுகாப்பவர். சூரியனின் ஊடாக பூமியில் மழை பொழியச் செய்கிறார். 
  • 764. த்³யுதி தரஸ் - ஒளி வீசும் அங்கங்களை உடையவர்.  புத்திசாலித்தனமாகவும் பிரகாசமாகவும் இருக்கிறார்.
  • 765. ஸர்வ ஸ²ஸ்த்ர ப்ருதாம் வரஹ - ஆயுத பாணிகளில் மிகவும் சிறந்தவர். ஆயுதம் ஏந்துபவர்களில் சிறந்தவர்.
  • 766. ப்ரக்³ரஹோ - அடக்கி நடத்துபவர். கட்டுப்படுத்துபவர். தனது பக்தர்கள் அளிக்கும் மலர்கள், இலைகள் போன்ற எந்தவொரு பிரசாதத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறார்.
  • 767. நிக்³ரஹோ - எதிரிகளை மாளச் செய்பவர். அனைத்து படைப்புகளின் மீதும் அவருக்கு உறுதியான கட்டுப்பாடு உள்ளது.
  • 768. வ்யக்³ரோ - பகைவரை அழிப்பதில் பரபரப்புள்ளவர். முடிவில்லாதவர். முடிவில்லாதவர். அழியாதவர். நித்யமானவர். அவர் தனது பக்தர்களின் மீது பொழியும் அவரது அருளுக்கு முடிவே இல்லை.
  • 769. நைக ஸ்²ருங்கோ³ - பல்வேறு உபாயங்களால் பகைவரை அழித்தவர். தனது பக்தர்களின் எதிரிகளைக் கட்டுப்படுத்த பல்வேறு யுக்திகளைக் கையாள்கிறார். அவரிடம் நான்கு சிகரங்கள், வேதங்கள் உள்ளன.
  • 770. க³தா³க்³ரஜஹ - கதன் என்பவருக்கு முன் பிறந்தவர். மந்திரம் அல்லது பிரார்த்தனையின் போது அவர் வெளிப்படுகிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.48

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.48
 
யோக³ஸ்த²: குரு கர்மாணி 
ஸங்க³ம் த்யக்த்வா த⁴நஞ்ஜய|
ஸித்³த்⁴ய ஸித்³த்⁴யோ: ஸமோ பூ⁴த்வா 
ஸமத்வம் யோக³ உச்யதே||

  • யோக³ஸ்  த²ஹ் - யோகத்தில் நிலைபெற்று 
  • குரு - செயலாற்று 
  • கர்மாணி - உன்னுடைய கடமைகள் 
  • ஸங்க³ம் - பற்றுதல் 
  • த்யக்த்வா - கைவிட்டு 
  • த⁴நஞ்ஜய - அர்ஜுநனே
  • ஸித்³தி⁴ - வெற்றி 
  • அஸித்³த⁴யோஹோ - தோல்வியில் 
  • ஸமோ - சமமாக 
  • பூ⁴த்வா - ஆகி 
  • ஸமத்வம் - நடுநிலையே 
  • யோக³ - யோகம் 
  • உச்யதே - கூறப்படுகின்றது

தனஞ்ஜயனே, வெற்றி தோல்வியில் பற்றுதலை கைவிட்டு, யோகத்தில் நிலைபெற்று உன்னுடைய கடமைகளை, சம நிலையுடன் செயலாற்று. இந்த சமத்துவமே யோகம் என்று கூறப்படுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.1

வ்யாஸ உவாச
இதி ப்³ருவாணம் ஸம்ஸ் தூய 
முநீநாம் தீ³ர்க⁴ ஸத்ரிணாம்|
வ்ருத்³த:⁴ குலபதி: ஸூதம் 
ப³ஹ் வ்ருச: ஸொ²நகோ ப்³ரவீத்||

  • வ்யாஸ உவாச - வ்யாஸர் கூறுகிறார் 
  • இதி ப்³ருவாணம் - இவ்வாறு சொல்லிய
  • ஸூதம் - ஸூத மஹரிஷியை
  • ஸம்ஸ் தூய - ஸ்தோத்திரங்கள் செய்து
  • ப³ஹ் வ்ருசஸ் - ரிக்வேதியும்
  • தீ³ர்க⁴ ஸத்ரிணாம் - தீர்க்க ஸத்ரம் என்ற யாகம் செய்த 
  • முநீநாம் - மஹரிஷிகளுக்கு எல்லாம்
  • குலபதிஸ் - முக்கியமானவரும்
  • வ்ருத்³த⁴ஹ் -  பெரியோராயும் உள்ள
  • ஸொ²நக - சௌநகர் என்றவர்
  • ப்³ரவீத் - சொன்னார்

வியாசர் கூறுகிறார் - ஆயிரம் வருடம் வரையில் செய்யப்படும் 'ஸத்ரம்' என்னும் வேள்வியை செய்து கொண்டிருக்கும் முனிவர்களுள் குலபதியாய் விளங்குபவரும்,  ஞானத்தில்  தலைசிறந்தவரும், ருக்வேதம் அத்யயனம் (மறையோதுதல்) செய்தவருமாகிய சௌனக முனிவர், ஸூத புராணிகர் சொன்னதைக் கேட்டு, அவரை வாழ்த்தி  பின்வருமாறு கூறலானார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.46

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.46

தேந தத்ரைவ வஸதா 
ஜநஸ் தா²ந நிவாஸிநீ|
விரூ பிதா ஸூ²ர்பணகா² 
ராக்ஷஸீ காம ரூபிணீ|| 

  • தத்ர - அங்கே
  • வஸதா - வஸிக்கிறவரான
  • தேந -  அவராலே
  • ஜநஸ் தா²ந -  ஜனஸ்தானம் என்னும் காட்டில்
  • நிவாஸிநீ - வஸிப்பவளான
  • காம ரூபிணீ - வேண்டியபடி வடிவம் கொள்ள வல்லவளான
  • ஸூ²ர்பணகா² - சூர்ப்பணகை என்கிற
  • ராக்ஷஸீ -  இராக்ஷஸீ
  • விரூ பிதா - அங்க பங்கம் மட்டும்
  • ஏவ - பண்ணப் பட்டாள்

ஸ்ரீராமர் அங்கே வசித்து வந்த போது,  தண்டகாரண்யத்தின் ஒரு பகுதியான ஜனஸ்தானம் என்னும் காட்டில் வசிப்பவளும், விரும்பிய வடிவை ஏற்கவல்ல காம ரூபிணியும், இராக்ஷசியுமான சூர்ப்பணகை அவரால் வடிவம் குலைக்கப் பட்டாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்