About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 8 February 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 108

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 

ஸ்லோகம் - 78

ஏகோ நைகஸ் ஸவ: க: கிம் 
யத்தத் பத³ம நுத்தமம்:|
லோக ப³ந்து⁴ர் லோக நாதோ² 
மாத⁴வோ ப⁴க்த வத்ஸல:||

  • 730. ஏகோ - தனிப்பெருமை உடையவர். எல்லா வகையிலும் தனித்துவமானவர். ஒப்பற்றவர். 
  • 731. நைகஸ் - பலராக இருப்பவர். எல்லை அற்றவர்.
  • 732. ஸ - அறிவைப் பரப்புபவர். எல்லா அறிவுக்கும் இறுதி அதிகாரம் படைத்தவர். தன் பக்தர்களுக்குத் தடைகள் அனைத்தையும் அழிப்பவர். எளிதில் அணுகக் கூடியவர். சோம யாகத்தின் வடிவில் இருப்பவர். அவர் இறுதி அறிவு மற்றும் எங்கும் வாழ்பவர். 
  • 733. வஹ் - மனத்தினுள்ளே வசிப்பவர். 
  • 734. கஹ் - ஒளிர்பவர். ஜொலிபவர்.  பிரகாசிப்பவர். பக்தர்களால் வார்த்தைகளால் அழைக்கப்படுபவர். போற்றப்படுபவர். மகிழ்ச்சியின் உருவமாக இருப்பவர். 'அறிவுத்திறன்' மூலம் அணுகும் போது விடை தெரியாத கேள்விக்குறியாக இருப்பவர்.
  • 735. கிம் - எது பரம் பொருள் என்று ஆராயத் தக்கவனாய் இருப்பவர்.
  • 736. யத் - நம்மைக் காப்பதில் முயற்சியை உடையவர்.
  • 737. தத் - தூண்டி விடுபவர். பக்தர்களிடம் அறிவையும் பக்தியையும் அதிகரிப்பவர். பக்தர்களின் கீர்த்தியை (புகழை) அதிகப்படுத்துபவர். பிரபஞ்சத்தை அதன் நுட்பமான வடிவத்திலிருந்து அதன் உடல் வடிவத்திற்கு விரிவுபடுத்துபவர். புலன்களால் அனுபவிக்கப் படாதவர். 
  • 738. பத³ம் அநுத்தமம் - மேலான அடையத் தக்க பொருளாக இருப்பவர். அவர் உயர்ந்த இலக்கு.
  • 739. லோக ப³ந்து⁴ர் - உலகினர் அனைவர்க்கும் உறவினன். அவர் படைப்பாளர் என்பதால், அனைவரும் அவருடன் தொடர்பு உடையவர்கள். வரையறுக்கப்பட்ட வாழ்க்கை போன்றவற்றின் மூலம் அனைத்தையும் கட்டுப் படுத்துபவர். ஒருவருக்கு எல்லாம் கட்டுப்பட்டவர், ஏனெனில் அவர் அவர்களின் ஆதரவாக இருக்கிறார். வேதம்/சாஸ்திரங்கள் மூலம் எது சரி எது தவறு என்று ஒரு உறவினராக அறிவுரைகளை வழங்குபவர். 
  • 740. லோக நாதோ² - உலகத்துக்குத் தலைவர். உலகத்தை ஆளுபவர். உலகத்தின் பாதுகாவலர். தனது மிகுதியின் விளைவாக அனைவருக்கும் செழிப்பை வழங்குகிறார். அனைவராலும் தேடப்படுகிறார். பிரார்த்தனை செய்யப்படுகிறார். உலகில் பிரகாசிக்கிறார். ஆற்றல் மூலம் உலகத்தை ஒழுங்கு படுத்துகிறார். ஒழுக்கமாக இருக்க வேண்டியவர்களுக்குத் தேவையான தொல்லைகளைக் கொடுக்கிறார்.
  • 741. மாத⁴வோ - இலட்சுமிக்கு அன்பன். தன்னைப் பற்றிய அறிவை வழங்குபவர். ஊக்குவிப்பவர். மது வித்யாவின் மூலம் அடையப்பட்டவர். மௌனம், தியானம் மற்றும் யோகம் மூலம் அடையப்பட்டவர். யாதவரான மது இனத்தில் பிறந்தவர். பிரபஞ்சத்தின் மற்ற பகுதிகளுடன் தாய் மற்றும் தந்தையின் நித்ய உறவு.  
  • 742. ப⁴க்த வத்ஸலஹ - அடியார்களிடம் அன்புடையவர். யக்ஞத்தின் மூலம் தனக்கு காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் செல்பவர். பசுவுக்குக் கன்றினைப் போல தனக்குப் பிரியமான பக்தர்களை தம்மிடம் அழைத்துச் செல்பவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.45

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.45 

த்ரை கு³ண்ய விஷயா வேதா³: 
நிஸ் த்ரை கு³ண்யோ ப⁴வார் ஜுந|
நிர்த்³வந் த்³வோ நித்ய ஸத்த் வஸ்தோ² 
நிர் யோக³ க்ஷேம ஆத்ம வாந்||

  • த்ரை கு³ண்ய - ஜட இயற்கையின் மூன்று குணங்கள் பற்றிய 
  • விஷயா - விஷயங்கள் 
  • வேதா³ஹ - வேத இலக்கியங்கள் 
  • நிஸ் த்ரை கு³ண்யோ - ஜட இயற்கையின் மூன்று குணங்களுக்கு மேற்பட்ட 
  • ப⁴வ - ஆவாய் 
  • அர்ஜுந - அர்ஜுநனே 
  • நிர்த்³ வந் த்³வோ - இருமைகள் அற்ற 
  • நித்ய ஸத்த் வஸ்தோ² - எப்போதும் உண்மையில், தூய ஆன்மீக நிலையில் நின்று
  • நிர் யோக³ க்ஷேம - அடைதல், காத்தல் எனும் எண்ணங்களிலிருந்து விடுபெற்ற 
  • ஆத்ம வாந் - தன்னில் நிலைபெற்ற 

அர்ஜுநா! வேத இலக்கியங்கள், ஜட இயற்கையின் மூன்று குணங்கள் பற்றிய விஷயங்கள் கொண்டுள்ளது. ஜட இயற்கையின், மூன்று குணங்களுக்கு, அப்பாற்பட்டவனாக ஆவாயாக. இருமைகள் அற்ற, தூய ஆன்மீக நிலையில், அடைதல், காத்தல் எனும் எண்ணங்களிலிருந்து விடுபெற்று, தன்னில் நிலைபெறுவாயாக.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.43

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.43

ப்ராயோ பவிஷ்டம் க³ங்கா³ யாம் 
பரீதம் பரமர் ஷிபி⁴:|
க்ருஷ்ணே ஸ்வதா⁴மோ பக³தே 
த⁴ர்மஜ் ஞாநாதி³ பி⁴: ஸஹ||

  • பரமர் ஷிபி⁴ஹி - மஹரிஷிகளால்
  • பரீதம் -  சூழப்பட்டவராயும்
  • க³ங்கா³ யாம் -  கங்கை கரையில்
  • ப்ராயோ பவிஷ்டம் -  ப்ராயோப  வேச  விருதம் உடையவருமான
  • த⁴ர்மஜ் ஞாநாதி³ பி⁴ஸ் ஸஹ - அறுவகை ஐஸ்வர்யங்களோடு
  • க்ருஷ்ணே -  ஸ்ரீ கிருஷ்ணர்
  • ஸ்வதா⁴மோ பக³தே -  தனது இருப்பிடமான வைகுண்டத்தை அடைந்த அளவில்

இந்த ஸ்ரீமத் பாகவதத்தைக் கங்கைக் கரையில் இறக்கும் வரை உண்ணா விரதம் என்கிற பிராயோபவேச விரதத்தை மேற்கொண்ட பரீக்ஷித் மகாராஜனுக்கு, அநேக மகரிஷிகள் சூழ்ந்திருந்த போது ஸ்ரீசுகர் கூறினார். பகவான் ஸ்ரீகிருஷ்ணன் தர்மம், ஞானம் முதலிய அறுவகைச் செல்வங்களுடன் தனது இருப்பிடமான வைகுண்டத்திற்குச் சென்ற பின், 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.43

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.43

க²ட்³க³ம் ச பரம ப்ரீதஸ்
தூணீ சாக்ஷய ஸாய கௌ|
வஸ தஸ்தஸ்ய ராமஸ்ய 
வநே வநசரை: ஸஹ|| 
ருஷயோ ப்⁴யா க³மந் ஸர்வே 
வதா⁴யா ஸுர ரக்ஷஸாம்|

  • க²ட்³க³ம் ச - கட்கத்தையும் 
  • அக்ஷய ஸாய கௌ - அக்ஷயமான பாணங்களை உடைய
  • தூணீ சா - இரண்டு அம்புறாத் தூணிகளையும்
  • பரம ப்ரீதஸ் - மிகச் ஸந்துஷ்டாராக
  • வநசரைஸ் ஸஹ - வனவாஸிகளோடு கூட
  • ருஷயோ - முனிவர்கள்
  • ஸர்வே - எல்லோரும்
  • அஸுர ரக்ஷஸாம் - அசுரர்கள் இராக்ஷஸர்கள் இவர்களுடைய
  • வதா⁴யா - வதத்தின் பொருட்டு
  • வநே - வனத்தில்
  • வஸதஸ் தஸ்ய - வஸித்துக் கொண்டிருக்கிற அந்த
  • ராமஸ்ய - ஸ்ரீராமருக்கு
  • அப்⁴யா க³மந் -  அருகில் வந்தார்கள்

மற்றும் வாள், எப்போதும் வற்றாத கணைகளைக் கொண்ட இரு தூணிகள் ஆகியவற்றை ஸ்ரீராமர் பெரும் மகிழ்ச்சியுடன்  ஸ்வீகரித்தார். ஸ்ரீராமர், அந்த தண்டகாரண்ய வனத்தில் சரபங்க முனிவரின் ஆசிரமத்தில் வசித்த போது, ரிஷிகள் அனைவரும் வனவாசிகளுடன் சேர்ந்து, அசுரர்களையும், இராக்ஷஸர்களையும் கொல்வதற்காக அவரை அணுகினர்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்