About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 2 February 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 104

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 

ஸ்லோகம் - 74

மநோ ஜவஸ் தீர்த்த² கரோ 
வஸு ரேதா வஸு ப்ரத³:|
வஸு ப்ரதோ³ வாஸு தே³வோ 
வஸுர் வஸுமநா ஹவி:||

  • 695. மநோ ஜவஸ் - மனோபாவத்தில் செயல்படுபவர். சிந்தனையில் வேகமானவர்.
  • 696. தீர்த்த² கரோ - தூய்மைப் படுத்துபவர். புனித நீரின் ஆதாரம். ஸம்சாரப் பெருங்கடலைக் கடக்க உதவுகிறார். அவருடைய கரத்தின் ஸ்பரிசமே தூய்மையாக்கும். 
  • 697. வஸு ரேதா - ஒளியையே கருவாகப் பெற்றிருப்பவர். 
  • 698. வஸு ப்ரத³ஹ - நிதியாக உள்ள தன்னையே தருபவர். பெருமை, கண்ணியம் கொடுப்பவர். எல்லா உயிர்களுக்கும் இருப்பிடம் தருபவர்.
  • 699. வஸு ப்ரதோ³ - பெருமதிப்பை அளிப்பவர். மோக்ஷம் அளிப்பவர். 
  • 700. வாஸு தே³வோ - வசுதேவருடைய மகன். வியாபித்து விளையாடுபவர். நன்கு அறியப்பட்ட 12 எழுத்துக்கள் கொண்ட வாசு தேவா மந்திரத்தின் அதிபதி. பக்தர்களால் போற்றப்படுபவர். எல்லாவற்றிலும் வாழ்பவர், அவர்களைச் சுற்றிச் செல்ல வைப்பவர்.

ஏழாம் நூறு திரு நாமங்கள் நிறைவு

  • 701. வஸுர் - வசிப்பவர். தேடப்படும் சிறந்த செல்வம். பாற்கடலில் வசிப்பவர். வசுவின் வடிவில் இருப்பவர். எல்லாவற்றிலும் வாழ்பவர். பக்தி இல்லாதவர்களிடமிருந்து தன்னை மறைத்துக் கொள்பவர். அனைவருக்கும் இறுதி வாசஸ்தலம்.
  • 702. வஸுமநா - வசுதேவரிடத்தில் மனம் வைத்தவர். பொன் மனம் கொண்டவர். தூய்மையானவர். தூய்மையான மனம் உடையவர். துன்பங்கள் இல்லாதவர். அனைத்தும் வேறுபாடு இன்றி வசிப்பவர். தன் பக்தர்களிடம் வாத்சல்யம் (பாசம்) நிறைந்த மனம் கொண்டவர். தன் பக்தர்களின் இடையூறுகளை நீக்கும் மனம் கொண்டவர். எல்லா உயிர்களின் தேவைகளையும் முழுமையாக அறிந்தவர். 
  • 703. ஹவிஹி - பெற்றுக் கொள்ளப்பட்டவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.41

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.41 

வ்யவஸா யாத்மிகா பு³த்³தி⁴ர்
ஏகேஹ குரு நந்த³ந|
ப³ஹு ஸா²கா² ஹ்ய நந்தாஸ்² ச 
பு³த்³த⁴யோ வ்யவ ஸாயி நாம்||

  • வ்யவஸாயாத்மிகா - கிருஷ்ண உணர்வில் திடமான உறுதி 
  • பு³த்³தி⁴ர் - உறுதியுடைய புத்தி 
  • ஏகா - ஒன்றே 
  • இஹ - இந்த உலகத்தில் 
  • குரு நந்த³ந - குருகுலத் தோன்றலே! 
  • ப³ஹு ஸா²கா² - பல கிளைகளைக் கொண்ட 
  • ஹி - நிச்சயமாக 
  • அநந்தாஸ்² - எல்லையற்ற 
  • ச - மேலும் 
  • பு³த்³த⁴யோ - புத்திகள் 
  • அவ்யவ ஸாயி நாம் - கிருஷ்ண உணர்வில்லாதவர்களின்

குரு வம்சத்தில் பிறந்தவனே! இவ்வுலகத்தில், திடமான உறுதியுடையோரின் புத்தி ஒருமை உடையது. உறுதி இல்லாதவர்களின் புத்தியோ பல கிளைகளைக் கொண்டது, மேலும் எல்லையற்றது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.39

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.39

அதே² ஹத⁴ந்யா ப⁴க³வந்த இத்த²ம்
யத்³ வாஸுதே³வே கி²ல லோக நாதே²|
குர்வந்தி ஸர்வாத்ம கமாத்ம பா⁴வம்
ந யத்ர பூ⁴ய: பரிவர்த உக்³ர:||

  • அகி²ல லோக நாதே² - எல்லா உலகிற்கும் சரண்யனான
  • வாஸுதே³வே - வாசுதேவன் இடத்தில்
  • இத்த²ம் - இவ்வாறாக உள்ள கேள்விகளால்
  • ஸர்வாத் மகம் - ஏகாந்தமான
  • ஆத்ம பா⁴வம் - ஆத்ம பாவத்தையும்
  • ப⁴க³வந்த - சர்வக்ஞர்களான நீங்கள்
  • குர்வந்தி யத்³ - செய்கிறீர்களோ
  • அதே² ஹத⁴ந்யா -  இவ்வுலகில் அது காரணமாக நீங்கள் யாவரும்  க்ருதார்த்தர்களாவீர்
  • யத்ர -  எந்த ஆத்ம தத்வம் ஏற்பட்ட அளவில்
  • பூ⁴யஃ  உக்³ரஹ பரிவர்த ந - மறுபடியும்  பயங்கரமான ஜனன மரணாதியான சுழல் இல்லை

சௌநகாதி மகரிஷிகளே! நீங்களன்றோ உண்மையை அறிந்தவர்கள்! பெரும் புண்ணியப் பேறு பெற்றவர்கள்! ஏனெனில், அகில உலகத்திற்கும் ஒப்பற்ற தலைவராகிய பகவானிடம் இவ்வாறு பக்தி தத்துவத்தைத் தெரிந்து கொண்டு, இடையூறின்றி மனத்தைச் செலுத்தி வருகிறீர்கள். ஆகவே, துயரமான கர்ப்ப வாஸத்தை மீண்டும் மீண்டும் தோற்றுவிக்கும் பிறப்பிறப்பு என்ற சூழலில் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.39

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.39

நந்தி³ க்³ராமே கரோத்³ ராஜ்யம் 
ராமா க³மந காங்க்ஷயா|
க³தே து பர⁴தே ஸ்ரீமாந் 
ஸத்ய ஸந்தோ⁴ ஜிதேந்த்³ரிய:|| 

  • ராமா க³மந காங்க்ஷயா - ஸ்ரீராமர் திரும்பி வருவதிலேயே ஆவல் கொண்டு
  • நந்தி³ க்³ராமே - நந்தி கிராமத்தில்
  • ராஜ்யம் -  ராஜ்யப் பரிபாலனத்தை
  • அகரோத்³ -  செய்தார்
  • பர⁴தே - பரதன்
  • க³தே து - போன பின்
  • ஸ்ரீமாந் -  ஸ்ரீமனாய்
  • து - இருந்தும்
  • ஸத்ய ஸந்த⁴ - ஸத்ய ஸந்தரான
  • ஜிதேந்த்³ரியஹ -  இந்த்ரியங்களை ஜெயித்தவரான

ஸ்ரீராமரின் வரவை எதிர்பார்த்து, நந்திக் கிராமத்தில் இருந்து, அந்தக் கோசல ராஜ்யத்தை ஆண்டார். வாய்மைக்குக் கட்டுப்பட்டவரும், புலன்களை வென்றவரும், அற்புதனுமான,

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்