About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 24 January 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 97

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 

ஸ்லோகம் - 67

உதீ³ர்ண: ஸர்வதஸ்² சக்ஷுர் 
அநீஸ²ஸ்² ஸா²ஸ்²வத ஸ்தி²ர:|
பூ⁴ஸ²யோ பூ⁴ஷணோ பூ⁴திர் 
விஸோ²கஸ்² ஸோ²க நாஸ²ந:||

  • 630. உதீர்ணஸ் - தன் திருமேனியை நன்றாக வெளிப்படுத்துபவர். எல்லா உயிரினங்களுக்கும் மேலானவர்.
  • 631. ஸர்வதஸ்² சக்ஷு - யாவரும் தன் கண்ணால் காணும் படியானவர். எங்கும் கண்களை உடையவர். எல்லாவற்றையும் பார்ப்பவர்.
  • 632. அநீஸ²ஸ்² - தலைவன் இல்லாதவர். பரதந்த்ரன்
  • 633. ஸா²ஸ்²வத ஸ்திரஹ - எப்பொழுதும் நிலையாய் இருப்பவர். நித்யமாக இருப்பவர்.
  • 634. பூஸ²யோ - பூமியில் சயனித்து அருள் புரிபவர். வெறுமையான பூமியில் தூங்குபவர்.
  • 635.  பூஷணோ - அலங்கரிக்கப்பட்டவர்.
  • 636. பூதிர் - பக்தர்களுக்கு செல்வமாக இருப்பவர்.
  • 637. விஸோ²கஸ்² - சோகம் இல்லாதவர்.
  • 638. ஸோ²க நாஸ²நஹ - சோகத்தை ஒழிப்பவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.34

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.34
 
அகீர் திம் சாபி பூ⁴தாநி 
கத²யிஷ் யந்தி தேவ் யயாம்|
ஸம்பா⁴ விதஸ்ய சாகீர் திர்
மரணா த³தி ரிச்யதே||

  • அகீர் திம் - இகழ்ச்சி 
  • ச - மேலும் 
  • அபி - அதற்கு மேலாக 
  • பூ⁴தாநி - மக்களெல்லாம் 
  • கத²யிஷ் யந்தி - பேசுவர் 
  • தே - உன்னைப்பற்றி 
  • அவ்யயாம்- என்றென்றும் 
  • ஸம்பா⁴ விதஸ்ய - மதிக்கத்தக்க ஒருவனுக்கு 
  • ச - மற்றும் 
  • அகீர்திர் - அவமானம் 
  • மரணாத் - மரணத்தை விட 
  • அதி ரிச்யதே - மேற்பட்டது கொடியது

அதற்கும் மேலாக, மக்கள் எல்லாம் உன்னைப் பற்றி, இகழ்ச்சியாக பேசுவர். மதிக்கத்தக்க ஒருவனுக்கு, அவமானம் என்றென்றும் மரணத்தை விட கொடியது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.32

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.32

அத: பரம் யத³வ் யக்தம்
அவ்யூட⁴ கு³ண வ்யூஹிதம்|
அத்³ருஷ் டாஸ்² ருத வஸ்துத் வாத்
ஸ ஜீவோ யத் புநர் ப⁴வ:||

  • அதஃ பரம் - இந்த ஸ்தூல ரூபத்தை காட்டிலும் வேறானது
  • அத்³ருஷ் டாஸ்² ருத - பார்க்கப்படாததும் கேட்கப்படாததும் வஸ்து
  • வஸ்துத் வாத்து - ஸத்தா ஸ்வரூபம் ஆனதும்
  • அவ்யூட⁴ கு³ண வ்யூஹிதம் - கர சரணாகதிகளில் இல்லாததும் ப்ருதிவியாதிகளால் செய்யப்பட்டதும்
  • அவ் யக்தம் - அதி ஸூக்ஷமமாகவும்
  • யத்³ - யாதொரு ஸூக்ஷ்ம ஸரீரம் உண்டோ
  • யத் - யாதொரு ஸூக்ஷ்ம ஸரீரத்தில் இருந்து
  • புநர் ப⁴வஹ - மறுபடியும் உற்பத்தி உண்டாகிறதோ
  • ஸ ஜீவோ - அதுவே ஜீவோ பாதியாக கல்பிக்கப்படுகிறது

வெளியில் தெரியக்கூடிய ஸ்தூல ஸரீரத்திலிருந்து வேறுபட்டதும், கை, கால் முதலிய அவயவங்களற்றதும், ஆகவே, பார்கவோ கேட்கவோ முடியாததும், மிகவும் ஸூக்ஷ்மமாகவும் உள்ள இந்த லிங்க சரீரமே (மாயையோடு கூடியதுமே) ஜீவன் என்று அழைக்கப் படுகிறது. இதுவே பிறப்பிறப்பிற்குக் காரணமாகிறது. அதாவது பிறவி எடுக்கிறது. இந்த (ஸூக்ஷ்மமான) லிங்க ஸரீரமும் முன் கூறியது போல, பகவான் மேல் ஏற்றிக் கூறப்படுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.32

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.32

தே³வ க³ந்த⁴ர்வ ஸங்கா ஸா²ஸ்
தத்ர தே ந்ய வஸந் ஸுக²ம்|
சித்ரகூடம் க³தே ராமே 
புத்ர ஸோ²காது ரஸ்ததா²|| 

  • தே - அந்த 
  • தே³வக³ந்த⁴ர்வ - தேவ கந்தர்வர்களுக்கு
  • ஸங்காஸா²ஸ் -  சமமாக
  • தத்ர  - வனத்தில்
  • ஸுக²ம் - சுகமாக
  • ந்யவஸந் -  வஸித்தார்கள் 
  • ராமே - ஸ்ரீராமர்
  • சித்ரகூடம்  - சித்ர கூடத்தை
  • க³தே -   அடைந்த அளவில்
  • புத்ர ஸோ²காதுரஸ் - புத்ர சோகத்தால் பீடிக்கப்பட்டவரான
  • ததா²  - அப்படியே

அந்த தேவர்களைப் போலவும், கந்தர்வர்களைப் போலவும்  மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். இவ்வாறு ஸ்ரீராமர் சித்ர கூடத்திற்குச் சென்றதும், புத்திர சோகத்தால் அப்படியே, 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்