About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 28 December 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 90

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 

ஸ்லோகம் - 60

ப⁴க³வாந் ப⁴க³ஹா நந்தீ³
வநமாலீ ஹலாயுத⁴:|
ஆதி³த்யோ ஜ்யோதி ராதி³த்ய:
ஸஹிஷ்ணுர் க³தி ஸத்தம:||

  • 563. ப⁴க³வாந் - வழிபாட்டுக்கு உரியவர். வணக்கத்திற்கு உரியவர். தெய்வீகம் மற்றும் மங்களகரமான ஆறு குணங்கள் அல்லது ஷட் குணங்கள் நிறைந்தவர். ஞானம் (அறிவு), சக்தி (ஆற்றல்), பலா (வலிமை), ஐஸ்வர்யா (இறையாண்மை அல்லது செல்வம்), வீரியம் (வீரம்), மற்றும் தேஜஸ் (பிரகாசம்). எல்லா உயிர்களின் தோற்றத்தையும் முடிவையும் அறிந்தவர்.
  • 564. ப⁴க³ஹா - நற்குணவான். 
  • 565. நந்தீ³ - நந்த கோபன் குமரன். இயற்கையால் எப்போதும் ஆனந்தமாக இருக்கிறார். எப்பொழுதும் தன் பக்தர்களுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைபவர். தனது பக்தர்களுக்கு பேரின்பம் தருகிறார். 
  • 566. வநமாலீ - வநப் பூக்களால் செய்யப்பட்ட அழகிய வநமாலை  என்னும் திருவாபரணம் அணிந்து, எப்போதும் ஆனந்தமாக இருக்கிறார். 
  • 567. ஹலாயுத⁴ஹ - கலப்பையை ஆயுதமாக உடையவர்.
  • 568. ஆதி³த்யோ - முந்தைய பிறவியில் அதிதியாக இருந்த தேவகியின் புதல்வர். அவரது வாமன அவதாரத்தில் அதிதியின் (மற்றும் காஷ்யபரின்) புதல்வர். மோட்சத்தை வழங்குபவர்.
  • 569. ஜ்யோதிர் ஆதி³த்யஸ் - ஒளி வடிவினன். முழு பிரகாசத்தில் சூரியன். சூரியனின் கோளத்தில் வசிப்பவர். சூரியனைப் போல் ஒளிர்பவர்.
  • 570. ஸஹிஷ்ணுர் - பொறுத்துக் கொள்பவர். அவர் மகத்தான பொறுமையைக் கொண்டவர். மன்னிப்பவர். பரிபூரணமான பற்றின்மையுடன் நமக்காகப் பொறுமையாகத் துன்பப் படுபவர். தன் பக்தர்களின் காணிக்கைகளை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்பவர். வெப்பம் மற்றும் குளிர் போன்ற உச்சக் கட்டங்களை தாங்கக் கூடியவர்.
  • 571. க³தி ஸத்தமஹ - தரும வழியைக் காட்டுபவர். தேடப்பட வேண்டிய புகலிடங்களில் சிறந்வர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.27

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.27 

ஜாதஸ்ய ஹி த்⁴ருவோ ம்ருத்யுர்
த்⁴ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச|
தஸ்மாத³ பரிஹார் யேர்தே² 
ந த்வம் ஸோ²சிது மர்ஹஸி||

  • ஜாதஸ்ய - பிறந்தவன் 
  • ஹி - நிச்சயமாய் 
  • த்⁴ருவோ - உண்மை 
  • ம்ருத்யுர் - மரணம் 
  • த்⁴ருவம் -அதுவும் உண்மை 
  • ஜந்ம - பிறப்பு 
  • ம்ருதஸ்ய - இறந்தவனின் 
  • ச - மேலும் 
  • தஸ்மாத்³ - எனவே 
  • அபரி ஹார்யே - தவிர்க்க முடியாதது 
  • அர்தே² - பற்றிய பொருளில் 
  • ந - வேண்டாம் 
  • த்வம் - நீ 
  • ஸோ²சிதும் - கவலைப்பட 
  • அர்ஹஸி - தகாது

பிறந்தவன் நிச்சயமாய் இறப்பது உண்மை. மேலும் இறந்தவனின் பிறப்பு, அதுவும் உண்மை. எனவே, தவிர்க்க முடியாதது பற்றிய விஷயங்களுக்காக, நீ கவலை கொள்ள வேண்டாம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.25

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.25

அதா² ஸௌ யுக³ ஸந்த்⁴யா யாம் 
த³ஸ்யு ப்ராயேஷு ராஜஸு|
ஜநிதா விஷ்ணு யஸ²ஸோ 
நாம்நா கல்கிர் ஜக³த்பதி:||

  • அத² - பிறகு இருபத்திரண்டாவதாக 
  • ஜக³த்பதிஹி - இந்த லோகபதியான 
  • அஸௌ - ஸ்ரீ பரமாத்மா 
  • யுக³ ஸந்த்⁴யா யாம் - கலியுக முடிவில் 
  • ராஜஸு - அரசர் யாவரும் 
  • த³ஸ்யு ப்ராயேஷு - கொள்ளைக்காரர்களாக ஆகிய அளவில் 
  • நாம்நா கல்கிர் - பெயரால் கல்கி என்றவராய் 
  • விஷ்ணு யஸ²ஸோ - விஷ்ணு யசஸ் என்ற பிராமணனுக்கு 
  • ஜநிதா - பிறக்கப் போகிறார்

கலியுக முடிவில் அரசர்கள் திருடர்கள் போல் கொள்ளையர்களாக ஆகும் போது, உலக நாயகரான பகவான் இருபத்தி இரண்டாவது அவதாரமாக 'விஷ்ணு யசஸ்' என்கிற அந்தணனுக்கு, 'கல்கி' என்ற திருப்பெயருடன் திரு அவதாரம் செய்யப் போகிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.25

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.25

தம் வ்ரஜந்தம் ப்ரியோ ப்⁴ராதா 
லக்ஷ்மணோ நுஜ கா³மஹ|
ஸ்நேஹாத்³ விநய ஸம்பந்ந: 
ஸுமித்ரா நந்த³வர்த⁴ந:|| 

  • விநய ஸம்பந்நஹ - மேன் மக்களுக்கு ஏற்ற ஒழுக்கத்தில் முழு தேர்ச்சி அடைந்தவரான
  • ஸுமித்ரா நந்த³ - ஸுமித்திரைக்கு ஆனந்தத்தை
  • வர்த⁴நஹ - பெருக்குகிறவரான
  • ப்ரியோ - இஷ்டரான
  • ப்⁴ராதா - உடன் பிறந்தவரான
  • லக்ஷ்மணோ - லக்ஷ்மணர்
  • வ்ரஜந்தம் - புறப்பட்டு போகிற
  • தம் - அவரை
  • ஸ்நேஹாத்³ - ஸ்நேஹத்தால் 
  • அநு ஜகா³ம ஹ - பின் தொடர்ந்தார்

ஸுமித்ரையின் ஆனந்தத்தை அதிகரிப்பவரும், பணிவுள்ளவரும், அன்புக்குரிய தம்பியும், தமையனின் அன்புக்குரியவருமான லக்ஷ்மணன், தன் தமையன் ஸ்ரீராமர் நாட்டை விட்டுச் செல்லும் போது, அன்பு மிக்கவராக அவரைப் பின் தொடர்ந்து சென்றார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்