About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 28 November 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 81

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 

ஸ்லோகம் - 51

த⁴ர்ம கு³ப்³ த⁴ர்ம க்ருத்³ த⁴ர்மீ
ஸத³ க்ஷரம ஸத்க்ஷர மக்ஷரம்|
அவிஜ் ஞாதா ஸஹஸ் ராம் ஸு² ர்
விதா⁴தா க்ருத லஷண:||

  • 476. த⁴ர்ம கு³ப்³ - தர்மத்தைப் பாதுகாப்பவர்.
  • 477. த⁴ர்ம க்ருத்³ - தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்.
  • 478. த⁴ர்மீ - தர்மமே வடிவானவர். தர்மத்தைச் சுமக்கிறார்.
  • 479. ஸத்³ - நல்லதாகவே உள்ளவர். பாராட்டுக்குரியவர். நித்யமானவர்.
  • 480. ஸதக்ஷரம் அக்ஷரம் ஸத் - இருப்பு எந்த வகையிலும் குறையாமலும், அழியாமலும் இருப்பவர். எல்லாக் காலத்தும் நிறைவோடு இருப்பவர். கல்யாண குணங்கள் நிறைந்து இருப்பவர். நல்லதை ஒரு போதும் கைவிடாதவர்.
  • 481. அஸத் - அபரப் பிரம்மம். தர்மத்தைப் பின்பற்றாதவர்களுக்கும், பாவச் செயல்களைச் செய்பவர்களுக்கும் துக்கத்தைக் கொடுப்பவர்.
  • 482. க்ஷரம் - கெட்டதை விட்டு விலகுகிறார். 
  • 483. அவிஜ் ஞாதா - அடியார்களிடம் தவறுகளை அறியாதவர். உண்மையாக ஈடுபடும் பக்தர்களின் குறைகளை அவர் அறிவதில்லை.
  • 484. ஸஹஸ் ராம் ஸு² ர் - எல்லையில் ஞானத்தர். பிரகாசத்தில் சூரியனை மிஞ்சும் எண்ணற்ற கதிர்களை (அறிவு) உடையவர். அவர் சூரியனுக்குப் பின்னால் உள்ள சக்தி.
  • 485. விதா⁴தா - விதிப்பவர். கட்டளையிடுபவர். உச்சக் கட்டுப்பாட்டாளர். 
  • 486. க்ருத லக்ஷணஹ - சங்கு சக்கரம் முதலான அடையாளங்களை உடையவர். பக்திமான்களுக்கான தனித்தன்மைகளை அவர் வகுத்துள்ளார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.18

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.18 

அந்த வந்த இமே தே³ஹா 
நித்யஸ் யோக்தா: ஸ²ரீரிண:|
அநாஸி²நோ ப்ரமே யஸ்ய 
தஸ்மாத்³ யுத்⁴ யஸ்வ பா⁴ரத||

  • அந்த வந்த - அழியக் கூடிய 
  • இமே - இவையெல்லாம் 
  • தே³ஹா - ஜட உடல்கள் 
  • நித்யஸ்ய - நித்தியமான நிலையுடையவை 
  • உக்தாஸ் - என்று கூறப்பட்ட 
  • ஸ²ரீரிணஹ - உடலில் வாழ்பவர்கள் 
  • அநாஸி²நோ - ஒரு போதும் அழிவற்ற 
  • அப்ரமே யஸ்ய - அளவிட முடியாத 
  • தஸ்மாத்³ - எனவே 
  • யுத்⁴ யஸ்வ - போரிடு 
  • பா⁴ரத - பரத குலத் தோன்றலே

பரத குலத்தில் உதித்தவனே! இவையெல்லாம் ஒருபோதும், அழியாதது, அளவிட முடியாதது. மற்றும் நித்யமான நிலை உடையது என்று உடலில் வாழ்பவர்கள், கூறப்படும் ஜட உடல்கள் அழியக்கூடியவை. ஆகையால், போரிடு! 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.16

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.16

ஸுரா ஸுராணாமு த³தி⁴ம் 
மத்²ந தாம் மந்த³ரா சலம்|
த³த்⁴ரே கமட² ரூபேண 
ப்ரு ஷ்ட² ஏகாத³ ஸே² விபு:⁴||

  • விபு⁴ஹு - பகவான்
  • ஏகா த³ஸே² - பதினோராவது அவதாரத்தில்
  • ஸுரா ஸுராணாம் - தேவர்களும் அசுரர்களும்
  • உத³தி⁴ம் மத்²ந தாம் - பாற்கடலை கடைக்கின்ற அளவில்
  • மந்த³ரா சலம் - மந்தர பர்வதத்தை
  • கமட² ரூபேண - ஆமை உருவத்தால்
  • ப்ரு ஷ்ட² த³த்⁴ரே - முதுகில் தரித்தார்

பதினோராவதாக, தேவர்களும் அசுரர்களும் சமுத்திரத்தைக் கடையும் போது, 'கூர்மாவதாரம்' எடுத்து, மத்தாக நின்ற மந்தர மலையை தன் முதுகில் தாங்கினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.16

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.16

ஸர்வ தா³பி⁴க³த: ஸத்³பி⁴:
ஸமுத்³ர இவ ஸிந்து⁴பி⁴:|
ஆர்ய: ஸர்வ ஸமஸ்²சைவ
ஸதை³வ ப்ரிய த³ர்ஸ²ந:||

  • ஸிந்து⁴ பி⁴ஹி - நதிகளால்
  • ஸமுத்³ர இவ - கடல் போல்
  • ஸத்³பி⁴ஹி - நல்லவர்களால்
  • ஸர்வ தா³ - எப்பொழுதும்
  • அபி⁴ க³தஸ் - அடையப் பெற்றவர்
  • ஆர்யஸ் - பூஜ்யர்
  • ஸர்வ ஸமஸ்² -  எல்லோரிடத்திலும் ஸமமாய் இருப்பவர்
  • ச -  மேலும்
  • ஸதா³ ஏவ - எப்பொழுதும்
  • ஏக ப்ரிய த³ர்ஸ²நஹ - ப்ரியமானதாகவே உள்ள பார்வையை உடையவர்

அவர், ஆறுகளால் அடையப்படும் பெரும் கடலைப் போலவே, தெளிந்த மனம் கொண்டவர்களால் எப்போதும் அணுகப்படக் கூடிய ஆரியனாக (உன்னதனாக) இருக்கிறார்; அனைவரையும் சமமாக நடத்தும் அவர், எப்போதும் காண்பதற்கு இனியவனாக இருக்கிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்