About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 20 November 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 78

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 

ஸ்லோகம் - 48

யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்²ச
க்ரது: ஸத்ரம் ஸதாங்க³தி:|
ஸர்வ த³ர்ஸீ² விமுக்தாத்மா
ஸர்வ ஜ்ஞோ ஜ்ஞாந முத்தமம்||

  • 446. யஜ்ஞ - யாகமாக உள்ளவர். அனைத்து வகையான யக்ஞங்களின் உருவகமானவர். அவர் அனைத்து தேவர்களையும் தனது யாகத்தால் மகிழ்வித்து வளர்க்கிறார்.
  • 447. இஜ்யோ - யாகத்தால் வழி படத்தக்கவர். மரியாதைக்குரியவர். 
  • 448. மஹேஜ்யஸ்²ச - பிற தெய்வங்களின் சிறந்த வழிபாட்டையும் ஏற்பவர்.
  • 449. க்ரதுஸ் - செய்யப்படும் அனைத்துக் கர்மாக்களாலும் ஆராதிக்கப்படுபவர். அனைத்து செயல்களுக்கும் பின்னால் உள்ள சக்தி.
  • 450. ஸத்ரம் - ஸ்திரரூபியானவர். ரிஷிகளால் பல யாகங்களால் பல காலங்களில் செய்யப்படும் யாக வடிவானவர். பக்தியுள்ளவர்களையும் நேர்மையாளர்களையும் பாதுகாக்கிறார்.
  • 451. ஸதாம் கதிஹி - சாதுக்களுக்கு அடையத் தக்கவர்.
  • 452. ஸர்வ த³ர்ஸீ² - எல்லாவற்றையும் பார்த்து அறிபவர்.
  • 453. நிவ்ருத்தாத்மா - எந்தப் பொருளிலும் பற்றில்லாத மனமுடையவர். இயற்கையாகவே விடுதலை பெற்றவர். தர்மத்தைப் பின்பற்றுபவர்களின் ஆத்மாவாக இருப்பவர்.
  • 454. ஸர்வஜ்ஞோ - தானே சிறந்த தர்மம், தானே சிறந்த பயன் என்பதை அறிந்தவர். 
  • 455. ஜ்ஞாநம் உத்தமம் - மேலான ஞானமயமானவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.15

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.15 

யம் ஹி ந வ்யத²யந் த்யேதே 
புருஷம் புருஷர் ஷப⁴|
ஸம து³:க² ஸுக²ம் தீ⁴ரம்  
ஸோ ம்ருதத் வாய கல்பதே||

  • யம் - எவனொருவன் 
  • ஹி - ஏனெனில் 
  • ந - என்றுமில்லை 
  • வ்யத²யந்தி - கவலை தருவது 
  • ஏதே - இவையெல்லாம் 
  • புருஷம் - ஒருவனுக்கு 
  • புருஷர்ஷப - புருஷர்களில் சிறந்தவனே 
  • ஸம - மாறாத 
  • து³ஹ்க² - கவலை 
  • ஸுக²ம் - மகிழ்ச்சி 
  • தீ⁴ரம் - பொறுமையாக 
  • ஸ - அவனே 
  • அம்ருதத்வாய - விடுதலைக்கு 
  • கல்பதே - தகுதி பெற்றவனாகக் கருதப் படுகிறான்

புருஷர்களில் சிறந்தவனே, அர்ஜுநா! ஒருவனுக்கு இவையெல்லாம் கவலை தருவதில்லை. எவனொருவன், கவலையிலும் மகிழ்ச்சியிலும் மாறாமல், பொறுமையாக இருக்கிறானோ, அவனே, முக்திக்கு தகுதி பெற்றவனாகக் கருதப்படுகிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.13

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.13

அஷ்டமே மேரு தே³வ்யாம் து 
நாபே⁴ர் ஜாத உருக்ரம:|
த³ர்ஸ²யந் வர்த்ம தீ⁴ராணாம் 
ஸர்வாஸ்²ரம நமஸ்க்ருதம்||

  • அஷ்டமே து - எட்டாவதான அவதாரத்தில்
  • ஸர்வாஸ்²ரம - எல்லா ஆசிரமத்தினராலும்
  • நமஸ்க்ருதம் - வணங்கத்தக்க
  • தீ⁴ராணாம் - வீரர்களின்
  • வர்த்ம - மார்க்கத்தை
  • த³ர்ஸ²யந் - காண்பிக்கின்றவராய்
  • உருக்ரமஹ - உருக்ரமன் என்ற பெயரை உடையவராய்
  • நாபே⁴ர் - நாபியிடத்திலிருந்து
  • மேரு தே³வ்யாம் - மேரு தேவியினிடத்தில் 
  • ஜாத - ரிஷபர் என்ற பெயரை உடையவராய் தோன்றினார்

எட்டவதாக பகவான், நாபியின் மனைவியான மேரு தேவியின் திருவயிற்றில் 'ரிஷப தேவர்' என்ற பெயருடன் திரு அவதாரம் செய்து, நான்கு ஆசிரமத்தில் இருப்பவர்களாலும் கொண்டாடப்படுகின்ற தீரர்களின் மார்க்கமான (பரம ஹம்ஸ) சந்யாஸ தர்மத்தைத் தானே நடத்திக் காட்டினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.13

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.13

ப்ரஜாபதி ஸம: ஸ்²ரீமாந்
தா⁴தா ரிபு நிஷூத³ந:|
ரக்ஷிதா ஜீவ லோகஸ்ய
த⁴ர்மஸ்ய பரி ரக்ஷிதா||

  • ப்ரஜாபதி ஸமஸ் - பிரம்ம தேவருக்கு ஒப்பானவர்
  • ஸ்²ரீமாந் -  ஸ்ரீயை உடையவர்
  • தா⁴தா -  போஷிக்கிறவர்
  • ரிபு நிஷூத³நஹ - சத்ருக்களைத் தோற்கடிப்பவர்
  • ரக்ஷிதா -  ரக்ஷகர்
  • ஜீவ லோகஸ்ய -  ப்ராணி ஸமூஹத்திற்கு
  • த⁴ர்மஸ்ய -  தர்மத்தினுடைய 
  • பரி ரக்ஷிதா - அன்பான ரக்ஷகர்

பிரஜாபதிக்கு (பிரம்மருக்கு) இணையான தாதாவும் (அண்டத்தை ஆதரிக்கும் விஷ்ணுவும்), ஸ்ரீயுடன் கூடியவனுமான ஸ்ரீராமர், பகைவரை அழித்து, உயிரினங்களின் உலகைக் காத்து, அறத்தை முழுமையாகப் பாதுகாக்கிறார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்