About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 2 November 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 68

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 

ஸ்லோகம் - 38

பத்³ம நாபோ⁴ ரவிந்தா³க்ஷ: 
பத்³ம க³ர்ப்ப⁴ஸ்² ஸ²ரீர ப்⁴ருத்:|
மஹர்தி⁴ர் ருத்³தோ⁴ வ்ருத்³தா⁴த்மா 
மஹாக்ஷோ க³ருட³த்⁴ வஜ:||

  • 347. பத்³ம நாபோ⁴ - தாமரை மலரை உந்தியில் பெற்ற தனிப்பெரும் நாயகன்.
  • 348. அரவிந்தா³க்ஷஃ - செந்தாமரைக் கண்ணன்.
  • 349. பத்³ம க³ர்ப்ப⁴ஸ்² - தாமரையை ஆசனமாக உடையவன். இதயக் கமலத்தில் எழுந்தருளியிருப்பவன்.
  • 350. ஸ²ரீர ப்⁴ருத்து - சரீரத்தைத் தாங்குபவன்.
  • 351. மஹர்தி⁴ர் - பெருஞ்செல்வம் உடையவன்.
  • 352. ருத்³தோ⁴ - விருத்தியடைபவன்.
  • 353. வ்ருத்³தா⁴த்மா - நிறைவுற்ற ஆத்ம வடிவினன்.
  • 354. மஹாக்ஷோ - சிறந்த அச்சினை உடைய வாகனமுடையவன்.
  • 355. க³ருட³த்⁴ வஜஹ - கருடக்கொடி உடையவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.5
 
கு³ரூ நஹத்வா ஹி மஹாநு பா⁴வாந்
ஸ்²ரேயோ போ⁴க்தும் பை⁴க்ஷ்யம பீஹ லோகே|
ஹத்வார் த²காமாந் ஸ்து கு³ரூ நிஹைவ 
பு⁴ஞ்ஜீய போ⁴கா³ந் ருதி⁴ர ப் ரதி³க்³தா⁴ந்||

  • கு³ரூந் - பெரியோர் 
  • அஹத்வா - கொல்லாமல் 
  • ஹி - உறுதியாக 
  • மஹாநு பா⁴வாந் - மகாத்மாக்கள் (குருக்கள்)
  • ஸ்²ரேயோ - சிறந்தது 
  • போ⁴க்தும் - வாழ்வை அனுபவித்தல் 
  • பை⁴க்ஷ்யம் - பிச்சையெடுத்து 
  • அபி - கூட 
  • இஹ - இவ்வாழ்வில் 
  • லோகே - இவ்வுலகில் 
  • ஹத்வா - கொன்று 
  • அர்த² - இலாபம் 
  • காமாந் - ஆசைப்பட்டு 
  • து - ஆனால் 
  • கு³ரூந் - பெரியோர் 
  • இஹ - இவ்வுலகில் 
  • ஏவ - நிச்சயமாக 
  • பு⁴ஞ்ஜீய - அனுபவிக்க வேண்டிய 
  • போ⁴கா³ந் - இன்பங்கள் 
  • ருதி⁴ர - இரத்தம் 
  • ப்ரதி³க்³தா⁴ந் - கறை படிந்து

மஹாத்மாக்களான பெரியோர்களை கொல்லாமல், இவ்வுலகில், இவ்வாழ்வில், உறுதியாக பிச்சை எடுத்து கூட, வாழ்வை அனுபவித்தலே, சிறந்தது. இலாபங்களை விரும்பிய போதிலும், அவர்கள் பெரியோர்களே. ஆனால், நான், இவ்வுலகில் அனுபவிக்க வேண்டிய, இன்பங்களுக்காக ஆசைப்பட்டு, அவர்களை கொன்றால், , அனைத்திலும் இரத்தக் கறையே படிந்திருக்கும். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.3

யஸ்யா வய வஸம் ஸ்தா²நை: 
கல்பிதோ லோக விஸ்தர:|
தத்³வை ப⁴க³வதோ ரூபம் 
விஸு²த்³த⁴ம் ஸத்த்வ மூர்ஜிதம்||

  • யஸ்ய - எந்த விராட் சுரூபனின் அவையவங்களின்
  • அவய வஸம் ஸ்தா² நைஹி - கை கால் முதலிய அமைப்பால்
  • லோக விஸ்தரஹ கல்பிதோ - உலகங்களில் விஸ்தாரம் கற்பிக்கப்பட்டதோ
  • ப⁴க³வதோ தத்³வை ரூபம் - அப்படிப்பட்ட புருஷனுடைய அந்த உருவமானது
  • ஊர்ஜிதம் - பலத்தோடு கூடியது
  • விஸு²த்³த⁴ம் - ஸுத்த ஸ்வரூபமானது 
  • ஸத்த்வம் - ஸத்வ குணம் நிறைந்தது

அந்த விராட் புருஷனுடைய அங்க அமைப்பிலிருந்து பலபடியான உலகங்கள் உண்டுபண்ணப்பட்டன. பகவானுடைய அந்த விராட் திருவுருவம் தூய்மையான சத்வ குணம் நிறைந்தது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.3

சாரித்ரேண ச கோ யுக்த: 
ஸர்வ பூ⁴தேஷு கோ ஹித:।
வித்³வாந் க: க: ஸமர்த²ஸ்² ச 
கஸ்² சைக ப்ரிய த³ர்ஸ²ந:॥ 

  • சாரித்ரேண - குல ஆச்சாரத்துடன்
  • யுக்தஹ ச -  கூடியவனும்
  • கோ -   எவன்
  • ஸர்வ பூ⁴தேஷு -  அனைத்து உயிரினங்களின்
  • ஹிதஹ கோ -   நலனில் அக்கறை கொண்டவன்
  • வித்³வாந் - வித்யா நிபுணன் 
  • கஹ -  எவன்
  • ஸமர்த²ஸ்² ச -  வல்லவனும்
  • கஸ் -  எவன்
  • ஏக ப்ரிய த³ர்ஸ²நஹ கஸ்²: -  பார்ப்பதற்கு தனித்தன்மை வாய்ந்த இனிமையானவன் எவன்

நல்லொழுக்கம் கொண்டவனும், அனைத்து உயிரினங்களின் நன்மையில் விருப்பம் கொண்டவனும், திறன் மிக்கவனும், எதையும் செய்ய இயன்றவனும், வித்தையில் வல்லவனும், தனித்த எழில் கொண்டவனும் எவன்? 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்