About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 17 October 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 62

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 

ஸ்லோகம் - 32

பூ⁴த ப⁴வ்ய ப⁴வந் நாத²: 
பவந: பாவநோ நல:|
காமஹா காம க்ருத் காந்த: 
காம: காம ப்ரத³ ப்ரபு⁴:||

  • 291. பூ⁴த ப⁴வ்ய ப⁴வந் நாத²ஃ - முக்காலங்களிலும் உள்ளவற்றுக்குத் தலைவன்.
  • 292. பவநஃ - சஞ்சரிப்பவன்.
  • 293. பாவநோ - தூய்மை அளிப்பவன்.
  • 294. நலஹ - அருள் புரிவதில் திருப்தி அடையாதவன்.
  • 295. காமஹா - ஆசைகளைப் போக்குபவன்.
  • 296. காம க்ருத் - ஆசைகளை பக்தர்களுக்கு வளர்ப்பவன்.
  • 297. காந்தஹ் - விரும்பப் படுபவன்.
  • 298. காமஹ் - ஆசைப்படத்தகுந்தவன்.
  • 299. காம ப்ரத³ - விருப்பங்களைக் கொடுப்பவன்.
  • 300. ப்ரபு⁴ஹு - பிரபுவாய் இருப்பவன்

மூன்றாம் நூறு திரு நாமங்கள் நிறைவு

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.47

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.47 

ஸஞ்ஜய உவாச|
ஏவ முக்த் வார்ஜுந: ஸங்க்²யே 
ரதோ² பஸ்த² உபா விஸ²த்|
விஸ்ரு ஜ்ய ஸஸ²ரம் சாபம் 
ஸோ²க ஸம் விக்³ந மாநஸ:||

  • ஸஞ்ஜய: உவாச - ஸஞ்ஜயன் கூறினான் 
  • ஏவம் - இவ்வாறாக
  • உக்த்வா - சொல்லி 
  • அர்ஜுநஸ் - அர்ஜுநன்
  • ஸங்க்²யே - போர்க்களத்தில்
  • ரதோ² - ரதத்தின் 
  • பஸ்த² - இருக்கையில் 
  • உபா விஸ²த்து - மீண்டும் அமர்ந்தான் 
  • விஸ்ரு ஜ்ய - தனியே எறிந்து விட்டு 
  • ஸஸ²ரம் - அம்பையும் 
  • சாபம் - வில்லையும் 
  • ஸோ²க - சோகத்தால்
  • ஸம் விக்³ந - துன்பப்பட்டு 
  • மாநஸஹ - மனதிற்குள்
ஸஞ்ஜயன் கூறுகிறார்: இவ்வாறாக சொல்லிய அர்ஜுநன், போர்க்களத்தில் அம்புகளுடன் வில்லையும் தனியே எறிந்து விட்டு, ரதத்தின் இருக்கையில் மீண்டும் அமர்ந்து விட்டு சோகத்தால் மனதிற்குள் துன்பப்பட்டான்.

||ஓம் தத் ஸதி³தி ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா ஸூப நிஷத்ஸு
ப்³ரஹ்ம வித்³யாயாம் யோக³ ஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுந 
ஸம்வாதே³
அர்ஜுந விஷாத³ யோகோ³ நாம ப்ரத²மோ அத்⁴யாய꞉|| - 1

ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'அர்ஜுந விஷாத யோகம்' எனப் பெயர் படைத்த முதல் அத்தியாயம் நிறைவுற்றது. 

பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுநன் யுத்தகளத்தை கண்ட உடன் பதற்றம் அடைந்தான்.  அந்த பதற்றத்திற்கு காரணம் அவனுக்கு இந்த உலகத்தின் (அல்லது ) பிரபஞ்சத்தின் பூரண உண்மை தெரியாததால் அவன் அவ்வாறு பதற்றத்துக்கு உள்ளானான். தர்மதிற்கான யுத்தத்தில் தனது உறவினர்களும் கொல்லபடுவார்களே என்று அஞ்சினான். இவ்வாறு அஞ்சி நடுங்கி கொண்டு இருந்த அர்ஜுநனுக்கு பகவான் கிருஷ்ணர் பூரண உண்மையை கூறி அவனது புத்தியை விழித்தெழ செய்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.31

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
||ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.31

தயா விலஸி தேஷ் வேஷு 
கு³ணேஷு கு³ணவாந் இவ|
அந்த: ப்ரவிஷ்ட ஆபா⁴தி 
விஜ்ஞா நேந விஜ்ரும் பி⁴த:||

  • தயா - அந்த மாயையால் 
  • விலஸி தேஷ் - உண்டாகிய
  • வேஷு கு³ணேஷு - ஆகாசம் முதலியவைகளில்
  • அந்தஃ ப்ரவிஷ்ட - உட் புகுந்தவராய்க் கொண்டு
  • கு³ணவாந் இவ - எனக்குள் அடங்கியவையே இவை என்று எண்ணுகிறவர் போல்
  • விஜ்ஞா நேந - சித் என்னும் சக்தி ஸ்வரூபத்தால்
  • விஜ்ரும் பி⁴தஹ - உயர்ந்தவராகக் கொண்டு
  • ஆபா⁴தி - விளங்குகிறார்  

அந்த மாயையால் உண்டான எல்லாப் பொருள்களிலும் பகவானே உட்புகுந்து நிறைந்து விளங்குவதால் குணமுள்ளவன் போல் தோற்றமளிக்கிறான். உண்மையில், அவன் முற்றிலும் நிறைவான ஞானானந்தச் செறிவானவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - த்யான ஸ்லோகம் 10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான மங்க³ல ஸ²லோகா꞉ 10
ஶ்ரீ வால்மீகி நமஸ்க்ரியா:

ஶ்ரீராம த்⁴யானம்

வைதே³ஹீ ஸஹிதம் ஸுரத்³ரு
மதலே ஹைமே மஹா மண்ட³பே
மத்⁴யே புஷ்பக மாஸனே மணி
மயே வீராஸனே ஸுஸ்தி²தம்|
அக்³ரே வாசயதி ப்ரப⁴ஞ்ஜந
ஸுதே தத் த்வம் முநிப்⁴ய꞉ பரம்
வ்யாக்²யாந்தம் ப⁴ரதாதி³பி⁴꞉ 
பரி வ்ருதம் ராமம் ப⁴ஜே ஸ்²யாமளம்||

  • வைதே³ஹீ ஸஹிதம் - சீதையுடன் கூட
  • ஸுரத்³ரு மதலே - கல்பக வனத்தில்
  • ஹைமே - தங்க மயமான
  • மஹா மண்ட³பே- மண்டபத்தில்
  • மணி மயே- ரத்தினங்கள் பதித்த
  • புஷ்பக மாஸனே - புஷ்பக விமானத்தின்
  • மத்⁴யே - நடுவில்
  • வீராஸனே - வீராசனத்தில்
  • ஸுஸ்தி²தம் - நன்கு அமர்ந்து இருப்பவரும்
  • அக்³ரே - முன்னால்
  • ப்ரப⁴ஞ்ஜந ஸுதே - ஹனுமனுடனும்
  • முநிப்⁴யஃ - முனிவர்களுக்கு
  • தத் த்வம்- தத்துவத்தை
  • வாசயதி - கூறி
  • வ்யாக்²யாந்தம் - விளக்குபவரும்
  • ப⁴ரதாதி³பி⁴ஃ - பரதன் முதலியவர்களால்
  • பரி வ்ருதம் - சூழப்பட்டவரும் ஆன
  • ஸ்²யாமளம் - நீலநிறம் கொண்ட
  • ராமம் - ராமனைத்
  • ப⁴ஜே - தொழுகிறேன்

சீதையுடன் கூட கல்பக வனத்தில் தங்க மயமான மண்டபத்தில் ரத்தினங்கள் பதித்த புஷ்பக விமானத்தின் நடுவில் வீராசனத்தில் நன்கு அமர்ந்து இருப்பவரும் முன்னால் ஹனுமனுடனும் முனிவர்களுக்கு தத்துவத்தை கூறி விளக்குபவரும் பரதன் முதலியவர்களால் சூழப்பட்டவரும் ஆன நீல நிறம் கொண்ட ராமனைத் தொழுகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்