About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 15 October 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 61

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 

ஸ்லோகம் - 31

அம்ருதாம் ஸூ²த்³ப⁴வோ பா⁴நு: 
ஸ²ஸ²பி³ந்து³: ஸுரேஸ்²வர:|
ஒளஷத⁴ம் ஜக³த: ஸேது: 
ஸத்ய த⁴ர்ம பராக்ரம:||

  • 284. அம்ருதாம் ஸூ²த்³ப⁴வோ - அமுத மயமான கிரணங்களுடன் சந்திரனுக்குப் பிறப்பிடமாக உள்ளவன்.
  • 285. பா⁴நுஸ்² - சூரியன்.
  • 286. ஸ²ஸ²பி³ந்து³ஸ் - தீயவர்களை அழிப்பவன்.
  • 287. ஸுரேஸ்²வரஹ - இமையோர் தலைவன்.
  • 288. ஒளஷத⁴ம் - மருந்தாயிருப்பவன்.
  • 289. ஜக³தஸ் ஸேது: - அணையாயிருப்பவன்.
  • 290. ஸத்ய த⁴ர்ம பராக்ரமஹ - கல்யாண குணங்களும், பராக்ரமும் என்றும் கொண்டிருப்பவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.46

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.46 

யதி³ மாம ப்ரதீ காரம்
அஸ²ஸ் த்ரம் ஸ²ஸ்த்ர பாணய:|
தா⁴ர்தராஷ்ட்ரா ரணே ஹந்யு
தந்மே க்ஷேம தரம் ப⁴வேத்|| 

  • யதி³ - இருப்பினும் 
  • மாம் - என்னிடம் 
  • அப்ரதீ காரம் - எதிர்த்து போரிடாமல் 
  • அஸ²ஸ் த்ரம் - ஆயுதம் இன்றி 
  • ஸ²ஸ்த்ர பாணயஹ - ஆயுதம் தாங்கிய
  • தா⁴ர்தராஷ்ட்ரா - திருதராஷ்டிரரின் மகன்கள் 
  • ரணே - போர்க் களத்தில் 
  • ஹந்யு - கொன்று விடினும்
  • தத்-அது 
  • மே - எனக்கு 
  • க்ஷேம தரம் - அதிக நன்மை பயப்பதாக 
  • ப⁴வேத் - ஆகி விடும்

எதிர்க்காமலும் ஆயுதமில்லாமலும் இருக்கின்ற என்னை, கையில் ஆயுதம் உடைய திருதராஷ்டிரரின் மகன்கள் போரில் கொல்வார்களேயானால் கூட அது எனக்கு மிகுந்த நன்மை செய்வதே ஆகும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.30

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
||ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.30

ஸ ஏவேத³ம் ஸஸர் ஜாக்³ரே 
ப⁴க³வாந் ஆத்ம மாயயா|
ஸத³ ஸத்³ ரூபயா சாஸௌ 
கு³ணமய்யா கு³ணோ விபு:||

  • விபுஹு - விச்வ வியாபியானவரும்
  • ப⁴க³வாந் - இறைவனாகவும் உள்ள
  • ஸ அஸௌ ச ஏவ - அந்த வாஸுதேவனே
  • அ கு³ண - தான் நிர்குண ஸ்வரூபியாக இருந்த போதிலும்
  • ஸத³ ஸத்³ ரூபயா - கார்ய காரண ரூபமான
  • கு³ணோ மய்யா - மூன்று குணமயமான
  • ஆத்ம மாயயா - தனது மாயையால்
  • அக்³ரே இத³ம் - முதலில் இந்த உலகத்தை
  • ஸஸர்ஜ - ஸ்ருஷ்டி செய்தார்

எங்கும் பரவி நிறைந்து விளங்கும் பகவானான வாஸுதேவன், முக்குணங்களுக்கு ஆட்படாதவராக தனித்து இருந்த போதிலும், முக்குண வடிவமானதும், காரிய காரண வடிவானதுமான தன்னுடைய மாயையினால் முதலில் இவ்வுலகத்தைப் படைத்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - த்யான ஸ்லோகம் 9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான மங்க³ல ஸ²லோகா꞉ 9
ஶ்ரீ வால்மீகி நமஸ்க்ரியா:

ஸ்²லோக ஸார ஸமா கீர்ணம் 
ஸர்க³ கல்லோல ஸங்குலம்| 
காண்ட³ க்³ராஹ மஹாமீனம் 
வந்தே³ ராமாய ணார்ணவம்||

  • ஸ்²லோக ஸார ஸமா கீர்ணம் - ஸ்லோகங்களாகிற ஸாரம் நிரம்பியதும் ( ஸாரம் என்றால் உப்பு என்றும் பொருள்)
  • ஸர்க³ கல்லோல ஸங்குலம் - ஸர்கங்களாகிற அலைகளுடன் கூடியதும்
  • காண்ட³ க்³ரஹ மஹாமீனம் - காண்டங்கள் என்கிற முதலைகள் சுறா மீன்கள் இவற்றோடு கூடியதும் ஆன
  • ராமாயணார்ணவம் - ராமாயணம் என்னும் கடலை
  • வந்தே³ - வணங்குகிறேன்

ஸ்லோகங்களாகிற ஸாரம் நிரம்பியதும், ஸர்கங்களாகிற அலைகளுடன் கூடியதும், காண்டங்கள் என்கிற முதலைகள் சுறா மீன்கள் இவற்றோடு கூடியதும் ஆன ராமாயணம் என்னும் கடலை வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்