About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 24 September 2023

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - அறிமுகம் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

இராமாயணம் என்னும் பெயர் இராமன், அயனம் என்னும் சொற்களின் கூட்டாகும். காவியத்தின் மையப் பாத்திரத்தின் பெயரான இராம, இரண்டு சூழ்நிலை அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அதர்வவேதத்தில், இது 'அடர், அடர் நிறம், கருப்பு' என்று பொருள்படும் மற்றும் 'இரவின் இருள் அல்லது அமைதி' என்று பொருள்படும் இராத்திரி என்ற வார்த்தையுடன் தொடர்புடையது. அயனம் என்னும் சொல் ஸமஸ்க்ருதத்தில் பயணம் என்னும் பொருளுடையது. இதனால், இராமாயணம் என்பது "இராமனின் பயணம்" என்று பொருள்படும்.

தமிழில் கம்பரும், வடமொழியில் வால்மீகியும், இந்தியில் துளசி தாசரும், மலையாளத்தில் எழுத்தச்சனும், அசாமியில் மாதவ் கங்குனியும், ஒரியாவில் பலராம்தாசுவும் இயற்றியுள்ளனர்.

இராமாயணத்தின் கதை பல மட்டங்களில் தொழிற்படுகின்றது. ஒரு மட்டத்தில் இது அக்காலத்துச் சமூகத்தை விவரிக்கின்றது. பரந்த பேரரசுகள், அடுத்த அரசர்களாக வரவிருக்கும் இளவரசர்களின் வாழ்க்கை, தாய்மாருக்கும் மாற்றாந் தாய்களுக்கும் இடையிலான போட்டி, உடன் பிறந்தோருக்கு இடையிலான அன்புப் பிணைப்பும் விசுவாசமும், இளவரசிகளை மணம் முடிப்பதற்கான போட்டிகள் போன்றவை இவற்றுள் அடக்கம். இன்னொரு மட்டத்தில் இது, நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு மனிதன், ஒரு தலைவனாக எவ்வாறு நடந்துகொள்கிறான் என்பதையும், நிலைமைகளை ஒன்று போல எதிர்கொண்டு, சமயத்துக்குத் தக்கபடி நடந்து, தனது சொந்தத் துன்பங்கள் முதலியனவற்றுக்கும் அப்பால் குடிமக்களை எவ்வாறு வழிநடத்துகிறான் என்பதையும் காட்டுகிறது. வேறொரு மட்டத்தில் இது, தீமையை ஒழித்து நீதியை நிலை நாட்டுவதற்காக மனிதனாகத் தனது ஏழாவது அவதாரத்தை எடுத்த விஷ்ணுவின் கதையும் ஆகும்.

வால்மீகி இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்டது. இவை மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை இராமரின் பிறப்பில் இருந்து இறப்பு வரை விளக்குகின்றன. அவை:

பால காண்டம்
ராமன் மற்றும் அவன் சகோதரர்களின் பிறப்பு. ராமனது குழந்தைப் பருவம், அவனது குறும்பான விளையாட்டுக்கள், திருமணம். எதிர்காலத்தில் அவன் சந்திக்க போகும் சோதனைகளின் அடிப்படை போன்றவை இந்த பாலகாண்டத்தில் இருந்துதான் தொடங்குகிறது.

  • ராமாயணத்தின் உருவாக்கம்
  • ராம் பிறப்பு
  • விஸ்வாமித்திரரின் யாகத்தைப் பாதுகாத்தல்
  • ஜனக்புரியில் ராமரும் லட்சுமணனும்
  • ராம் - திருமணம்

அயோத்தியா காண்டம்
ராமாயணத்தின் இரண்டாம் பாகம். ராமன் சீதையை கண்டது. சீதையுடன் திருமணம். இளவரசனாக அயோத்தியில் வாழ்ந்த காலத்தின் சம்பவங்களை ஸ்ரீராமரின் முடிசூட்டுக்கான ஏற்பாடுகள், அரச குடும்பத்தில் ஒருத்தியாக மரியாதை தரப்பட்ட கூனி, அதே அரச குடும்பத்தை பாதகத்தில் தள்ளி, ராமன் காட்டுக்குச் அனுப்பப்பட்ட சம்பவங்ககள் அடங்கும்.

  • ராமர் பிரதிஷ்டை மற்றும் கைகேயியின் இரண்டு ஆசீர்வாதங்களுக்கான ஏற்பாடுகள்
  • ராமரின் வன நடை
  • வன பயணம்
  • அயோத்தியில் கூச்சல்
  • சித்ரகூடத்திற்கு பாரதத்தின் வருகை

ஆரண்ய காண்டம்
ராமாயணத்தின் மூன்றாம் பகுதி. ராமனது வனவாசத்தை காட்டுகிற பகுதி. ராமர், சீதை மற்றும் லட்சுமணன் தண்டகாரண்யத்திற்குள் நுழைகின்றனர்.

  • முனிவர்களுடன் சந்திப்பு
  • களை மாசுபாட்டிற்கு எதிரான போர்
  • மாரிச் மாயை மற்றும் தங்க மான்
  • ராமனிடமிருந்து பிரிந்து சீதையைத் தேடுதல்

கிஷ்கிந்தா காண்டம்
ராமாயணத்தின் நான்காம் பகுதி. ராமனது வனவாசத்தின் போது கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடி போக, வானரப் படை உருவானதையும், ஸ்ரீ அநுமான் என்கிற மகிமை பொருந்திய வானரரின் நட்பு ராமனுக்கு அமைந்த சம்பவத்தையும்,  வானரர் நாட்டில் இராமன் வாழ்ந்ததையும் சொல்கிற பகுதி. ஸ்ரீ ராமர் - அனுமன் மற்றும் சுக்ரீவரின் சந்திப்பு, சுக்ரீவரின் துக்கத்தைக் கேட்பது, பாலியின் முக்தி, சீதையைத் தேடி அனைவரும் புறப்படுவது மற்றும் ஹனுமானின் வலிமையை நினைவுபடுத்தும் ஜம்வந்த் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

  • ராமர் மற்றும் சுக்ரீவரின் நட்பு
  • குழந்தை படுகொலை
  • குரங்குகளால் சீதையைத் தேடுதல்

சுந்தர காண்டம்
ராமாயணத்தின் ஐந்தாம் பகுதி. சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்குப் புறப்பட்டது, சுர்சாவின் சந்திப்பு, லங்கானி கொலை, சீதா மற்றும் அனுமன் உரையாடல், இலங்காவை எரித்தல், ஹனுமான் திரும்புதல், ராவணன் - விபீஷண உரையாடல், விபீஷணன் ஸ்ரீ ராமரிடம் தஞ்சம் புகுந்தது மற்றும் கடல் மீது கோபம் வரையிலான நிகழ்வுகள். 

  • அனுமனின் இலங்கைப் பிரவேசம்
  • லங்கா - தஹான்
  • அனுமன் இலங்கையிலிருந்து திரும்புதல்

யுத்த காண்டம்
ராமாயணத்தின் ஆறாம் பகுதி. ராமனுக்கும் ராவணனுக்கும் இடையே நடந்த கடுமையான யுத்தத்தை சொல்கிற பகுதி யுத்தகாண்டம். இலங்கை சம்பவத்தில், நல் நீல் கடலில் பாலம் கட்டியது, அனைவரும் கடல் கடந்தது, அங்கத் - ராவணன் உரையாடல், லக்ஷ்மணன் - மேகநாதர் போர், சஞ்சீவனியை கொண்டுவர செல்லும் அனுமன், கும்பகர்ணனின் எழுச்சி மற்றும் அவரது இறுதி பாதை, மேகநாத் போர், ராமர் - ராவண போர், சீதாவின் அக்னிச் சோதனை, விபீஷணனின் முடிசூட்டு விழா மற்றும் ஸ்ரீ சீதா ராம் அவத் புறப்பாடு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

  • போர் அணிவகுப்பு மற்றும் பாலம் கட்டுமானம்
  • போருக்கான ஆயத்தங்கள் மற்றும் அங்கத் இலங்கைக்கு புறப்பட்டது
  • கடுமையான முன்
  • கும்பகர்ண போர்
  • லட்சுமணன் - மேகநாத் போர்
  • ராமர் - ராவணன் போர்
  • அயோத்தியில் ராமருக்கு முடிசூட்டு விழா

உத்தர காண்டம்
இலங்கை போரில் ராவணன் வீழ்ந்து, ராமன் வெற்றி பெற்று, ராமன் அயோத்திக்கு மீண்டும் அரசனானதும், சீதை மீண்டும் காட்டுக்கு அனுப்பப்பட்டதையும் சொல்கிற சம்பவ பகுதி இது. இப்படியாக ஏழு காண்டங்களை கொண்டது வால்மீகி ராமாயண காவியம்.

இராமாயணத்தின் முக்கிய கதை மாந்தனான இராமன், இந்துக்களின் முதன்மைக் கடவுளரில் ஒருவர். மும்மூர்த்திகளுள் ஒருவரான திருமாலின் 10 அவதாரங்களுள் ஒருவராகப் போற்றி வழிபடப்படுபவர். உலகில் தீமையை ஒழித்து அறத்தை நிலைநாட்டுவதற்காக திருமால் இப் புவியில் தோன்றியதாக இந்துக்கள் நம்புகின்றனர். ஆண்டு தோறும் பலர் இராமர் பயணம் செய்த பாதையைப் பின்பற்றி யாத்திரை செய்கின்றனர். இந்த இதிகாசம், ஒரு இலக்கியமாக மட்டுமன்றி, இந்து சமயத்துடன் இரண்டறக் கலந்துள்ளது. இதனைப் படிப்பவர்களதும், படிக்கக் கேட்பவர்களதும் பாவங்கள் நீங்கி, இறைவன் அருள் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

வால்மீகியினால் இயற்றபட்ட ராமாயணந்தான் சமஸ்கிருத பாஷையின் முதல் இலக்கியமாகும். ஆகவே அது ஆதி காவியம் என்ற புகழையடைந்தது. 
வால்மீகி ராமாயணம் நவாஹ பாராயண முறை.
04-05-14, 15:05 ராமாயண நவாஹ பாராயண விதி.

ஶ்ரீ ராம நவமி புண்ய காலத்தில் ஶ்ரீ மத் ராமாயணத்தை நவாஹ க்ரமத்தில் அதாவது ஒன்பது நாட்கள் , தானோ அல்லது தகுந்த நபர்கள் மூலமாகவோ வீட்டில் பராயணம் செய்யலாம். அல்லது காதால் கேட்கலாம். ஒவ்வொரு நாளும் எந்த கட்டம் வரை பாராயனம் செய்ய வேண்டும்.

  • 1. பாலகாண்டம் ஒன்று முதல் 70 ஆவது ஸர்க்கம் வரை
  • 2. பாலகாண்டம் 71 முதல் அயோத்யா காண்டம் -  64 ஆவது ஸர்க்கம் வரை
  • 3. அயோத்யா கான்டம் 65 முதல் 119 ஆவது ஸர்க்கம் வரை
  • 4. ஆரண்ய கான்டம் ஒன்று முதல் 68 ஆவது ஸர்க்கம் வரை
  • 5. ஆரண்ய காண்டம் 69 முதல் கிஷ்கிந்தா காண்டம் 49 ஆவது ஸர்க்கம் வரை
  • 6. கிஷ்கிந்தா காண்டம் 50 முதல் சுந்தர காண்டம் 57 ஆவது ஸர்க்கம் வரை
  • 7. சுந்தர காண்டம் 58 முதல் யுத்த காண்டம் 50 ஆவது ஸர்க்கம் வரை
  • 8 . யுத்த காண்டம் 51 முதல் 111 ஆவது ஸர்க்கம் வரை
  • 9. யுத்த காண்டம் 112 முதல் 131 ஆவது ஸர்க்கம் வரை

இம்மாதிரி பாராயணம் செய்ய வேண்டும்.

ஶ்ரீ ராம பக்தி கல்பலதா என்னும் நூலில் சிற்சில ஸர்க்க பாரயணத்தின் முடிவில் விசேஷ பொருட்கள் நிவேதனம் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. 

ஸர்க்கம் எண் முடிவில் செய்ய வேண்டிய நிவேதனம். காண்டம். ஸர்க்கம் எண்.
பால காண்டம்

  • 1. மூன்று தேங்காய்
  • 16. வெல்ல பாயாசம்
  • 18. பால், கல்கண்டு, சுக்கு பொடி போட்டு
  • 30. குங்குப்பூ கலந்த திரட்டுப்பால்
  • 73. ஏதோ ஒன்று சித்ரான்னத்தில்

அயோத்யா காண்டம்

  • 40. வெண்ணை, சக்கரை, கொழுக்கட்டை
  • 50. பல வித பழங்கள்
  • 56. எள்ளு சாதம்
  • 99. நெய் கொழுக்கட்டை
  • 112. பலா. மாதுளை, வாழைப்பழம்
  • 117. நெய் பாயஸம்

ஆரண்ய காண்டம்

  • 30. தேங்காய் சாதத்தில் சக்கரை சேர்த்து
  • 68. திராக்ஷை, தேன்
  • 74. வேக வைத்த கிழங்கு, மாதுளம் பழம்

கிஷ்கிந்தா காண்டம்

  • 3. நெய் வடை
  • 16. பானகம்
  • 22. பயறு சுண்டல்
  • 26. மாம்பழம், எண்ணையில் வறுத்த கடலை

ஸுந்தர காண்டம்

  • 1. தயிரன்னம், ஊறுகாய், வெண்ணை
  • 15. புளி அன்னம், ஊறுகாய், தாம்பூலம்
  • 36, விசேஷ பக்ஷணம், சக்கரை பொங்கல்
  • 66. பயத்தம் பருப்பு பால் பாயஸம்

யுத்த காண்டம்

  • 16. தேங்காய் துருவல் சக்கரை கலந்து
  • 19. நெய்யில் செய்த முறுக்கு
  • 50 . பசும்பால்
  • 67. இளநீர், நாகப்பழம்
  • 74. பால் போளி
  • 91. எள்ளு சாதம், தயிர்
  • 94. சித்ரான்னங்கள்
  • 107. கரும்பு, தேங்காய், நெய் பாயசம்
  • 111. நெய்யில் செய்த அதிரசம்
  • 121. பால் பாயசம் வெண்ணையுடன்

ஶ்ரீ ராமாவதாரம் கர்போத்சவம், ஜனனோத்சவம் என இரு வகையாக கொண்டாடபடுகிறது.

கர்போத்சவம்: அமவாசைக்கு அடுத்த ப்ரதமை முதல் ராம நாமி முடிய கொன்டாடுவது. மஹா விஷ்ணு ஶ்ரீ ராமராக தோன்றி எல்லா அரக்கர்களையும் அழிக்க போகிறார் என அறிந்த ரிஷிகள் கெளசல்யையின் கர்ப வாசத்தை கொண்டாடினார்கள்.

ஜனனோத்ஸவம்: ஶ்ரீ ராமர் பிறந்த நவமி முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடுவது.. ஶ்ரீ ராமாயண பாராயணம், ப்ரவசனத்துடன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்


Saturday, 23 September 2023

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - அறிமுகம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

சில காலம் கழித்து, அதே சப்த ரிஷிகள் அந்த பக்கம் வரும் போது, “இங்கே மிக ரம்மியமாக, ஆசிரமம் போல் உள்ளதே! ஓ… இங்கே தானே ‘ராம’ நாம ஜபம் செய்ய ஒருவர் உட்கார்ந்தார்” என்று அந்த எறும்புப் புற்றைப் பார்த்தனர். அதைப் பார்த்து, ‘வால்மீகி!’ என்று அழைத்தனர். புற்றுக்கு ‘வால்மீகி’ என்றுப் பெயர். புற்றிலிருந்து மகரிஷி வெளியே வந்தார்.

“இன்றிலிருந்து உமக்கு ‘வால்மீகி’ என்று பெயர். நீங்கள் மகரிஷியாகி விட்டீர்கள். இந்த ராம நாம மகிமையை உங்கள் மூலமாக இந்த உலகம் தெரிந்துக் கொள்ளும்“, என்று கூறினர்.


அவரும் ரிஷிகளை பல முறை நமஸ்கரித்து, பின் ராம நாமத்தையே ஜபித்துக் கொண்டு, ஒரு ஆசிரமத்தை அந்த தமஸா நதிக் கரையில் கட்டிக் கொண்டு இருந்து வருகிறார். அவரிடம் சிஷ்யர்கள் எல்லாம் வந்து சேர்கிறார்கள்.

பிறகு, நாரத மகரிஷி ஸ்ரீ ராம சரித்திரத்தை வால்மீகி பகவானுக்கு உபதேசம் செய்தார்.

இந்த உலகில் ‘சத்யம், தர்மம், அழகு, படிப்பு, வீரம், ஒழுக்கம் என்று எல்லாநல்ல குணங்கள் கொண்ட மனிதன் யாரேனும் உண்டா?’ என்று வால்மீகிமுனிவர் கேட்க, நாரத பகவான் ‘உண்டு. அவர் தான் இக்ஷ்வாகு வம்சத்தில்வந்த தசரத குமாரர் ஸ்ரீராமர்’ என்று கூறி வால்மீகி முனிவருக்கு ராமசரித்திரத்தை சுருக்கமாக நூறு சுலோகங்களில் உபதேசித்தார். இது ஸங்க்ஷேப ராமாயணம் எனப்படும் வால்மீகி ராமாயணத்தின் முதல் ஸர்கம்.

வால்மீகி பகவான், நாரத மகரிஷி கூறிய இந்த இராமச் சரித்திரத்தை கேட்டு பரமானந்தம் அடைந்தார். நாரதரை வெகுவாக கொண்டாடினார். இந்த இராம சரித்திரத்தையும் போற்றினார். பின், நாரத பகவான் த்ரிலோக சஞ்சாரியாக பக்தியை பரப்புபவர் ஆதலால் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டார். அதிலிருந்து வால்மீகி பகவானின் மனதில் இந்த ஸ்ரீ ராமச்சரித்திரமே ஓடிக் கொண்டிருந்தது.

வால்மீகி முனிவர் தமஸா நதியில் ஸ்நானத்திற்கு செல்கிறார். வழியில் வேடன்ஒருவன் அம்பால் ஒரு பக்ஷியை அடித்ததைப் பார்த்து சோகத்தால் அவர் சொன்ன வார்த்தைகள் அனுஷ்டுப் சந்தத்தில் ஒரு ஸ்லோகமாக வெளிப்படுகிறது. வியப்படைந்த முனிவருக்கு பிரம்ம தேவர் தர்சனம் தந்து, நாரதர் சொன்ன ராம சரிதத்தை, அனுஷ்டுப் சந்தத்தில் ஸ்லோகங்களாக இயற்றி விஸ்தாரமாக, ஒரு காவியமாக பாடும்படி அநுக்ரகம் செய்தார்.

ஸ்ரீ ராமாயணத்தை இயற்றிய ஸ்ரீ வால்மீகி முனிவரின் அவதார தினம் வட இந்தியாவில் இந்த தினத்தை ‘பர்கத் திவாஸ்’ எனும் பெயரில் சிறப்புடன் கொண்டாடுவார்கள். ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திர தினத்தன்று இந்த நாள் கொண்டாடப் படுகிறது. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - அறிமுகம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

வால்மீகி ராமாயணத்தை ஏன் அடிக்கடி கேட்க வேண்டும்? காதுகள் என்கிற மடல்களில், வால்மீகி முனிவரின் முகம் என்கிற தாமரையில் இருந்து வெளிப்பட்ட ராமாயணம் என்னும் தேனை அடிக்கடி வாங்கி, விருப்பத்தோடு குடிப்பவர்கள், உபத்ரவம் மிகுந்த ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு சாஸ்வதமான விஷ்ணு பகவானின் பதத்தை அடைவார்கள்.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்றிரண்டு எழுத்தினால்

வேத வேத்யே பரே பும்சி ஜாதே தசரதாத்மஜே |
வேத ப்ரசேதஸா தாசீத் சாக்ஷாத் ராமாயணாத்மனா ||

பகவான்னு ஒருத்தர் இருக்கார்!  என்று வேதம் நமக்கு காட்டிக் கொடுத்திருக்கு. அந்த வேதம் கூறிய பரம் பொருளானது, பூமியிலே ஸ்ரீ தசரத குமாரனாய், ஸ்ரீராமராக அவதாரம் செய்தவுடனே, அந்த வேதம் பார்த்தது. “இந்த பகவானே ஸ்ரீராமராய் அவதாரம் செய்து விட்டார். இனி நாம் என்ன செய்ய வெண்டும்?”, என்று எண்ணி வேதமானது ஸ்ரீ வால்மீகி முனிவரின் வாயிலாக ஸ்ரீமத் ராமாயணமாக வெளிப்பட்டு விட்டது. இது தான் இந்த ஸ்லோகத்துக்கு பொருள்.


வேதம் தான் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்! அதை வெளிப்படுத்தின முனிவர், மகரிஷி வால்மீகி பகவான். அந்த வால்மீகி முனிவரின் பூர்வ சரித்திரம் என்ன?

முன்னொரு காலத்தில், ரத்னாகரன் என்ற ஒருவன் குடும்பத்தோடு காட்டில் வாழ்ந்து வந்தான். குடும்ப வறுமை காரணமாக கொள்ளை அடிக்கும் தொழிலை மேற்கொண்டான்.யாராவது, அந்த காட்டின் வழியே போனால் அவர்களுடைய பொருட்களை அபகரித்து, அதில் வாழ்ந்து வந்தான்.

ஒரு முறை அவனுடைய பூர்வ ஜென்ம புண்ணியத்தினால், சப்த ரிஷிகள் அந்த வழியே வந்தார்கள். எப்போதுமே கத்தியை எடுத்துக் கொண்டு போகும் அவன், அவர்களைப் பார்ததுமே மனதில் சிறிது சாந்தம் ஏற்பட, ஆனாலும் அவர்களிடம் போய், “யார் நீங்கள்? எங்கு வந்தீர்கள்? இருப்பதெல்லாம் கீழே வையுங்கள். வைத்து விட்டு, பேசாமல் ஓடிப் போங்கள்!”, என்றான்.

அதற்கு அவர்கள், “எங்கக் கிட்ட ஒண்ணுமே இல்லயே, அப்பா!” என்றார்கள்.

“ஒண்ணுமே இல்லையா? அப்போ என்ன செய்வீர்கள்?”

“நாங்க பகவானை ஸ்மரித்துக் கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு எதுவும் தேவை இல்லை. சதா பகவத் த்யானத்திலே இருக்கோம். அதனால் ஆனந்தமாக இருக்கிறோம்.”

“ஆமா! பார்த்தாலே தெரிகிறது நீங்கள் சாந்தமாக, ஆனந்தமாக இருக்கிரீர்கள். ஆனால், உங்களிடம் ஒன்றும் இல்லை! எங்கிட்ட எவ்வளவு இருக்கு தெரியுமா? நிறைய இருக்கு. கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கிறேன்.”

“ஆனால், நீ இப்படி சேர்த்து வைத்த பணமெல்லாம், பண மூட்டை இல்லை! இதெல்லாம் பாவ மூட்டை! இதற்காக நரகத்தில் கஷ்டப்படுவாயே” என்று கருணையினால் பதில் கூறினார்கள்.

“ஏன்? என்னக் கஷ்டம்?”

“இந்த உலக வாழ்க்கைக்குப் பிறகு சுவர்க்கம், நரகம் என்று உள்ளது. இங்கே நல்ல வாழ்க்கை வாழ்ந்தால், அதாவது புண்ணிய காரியங்கள் செய்தால், சுவர்க்கம் செல்வார்கள். பாவச் செயல்கள் செய்தால் நரகத்திற்கு செல்வார்கள். நரகத்தில், பலவிதமான தண்டனைகளை பெற்று அவதிப் பட வேண்டி இருக்கும்.”

“அப்படியா? இதெல்லாம் நான் என் மனைவி குழந்தைகளுக்காகத் தானே செய்கிறேன். அவர்கள் எல்லோரும் அதை பகிர்ந்துக் கொள்வார்கள்”.

அப்போது அந்த முனிவர், 'எதற்காகத் திருடுகிறாய்?’ உன் குடும்பத்தை வாழ வைக்க தானே? என்று கேட்டார். 'ஆமாம்’ என்றார் வால்மீகி.  'அப்படியானால் இந்த பாவங்களுக்கு உனது குடும்பத்தினரும் பங்கு ஏற்றுக் கொள்வார்கள் தானே?’ என்று கேட்டார் முனிவர். 'ஆமாம்’ என்றார் வால்மீகி. 'இதை உன் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்கிறார்களா என்று கேட்டு வா’ என்றார் முனிவர்.

உடனே முனிவரைக் கட்டிப் போட்டுவிட்டு தனது வீட்டுக்கு வால்மீகி போனார். குடும்பத்தினரிடம் இந்தக் கேள்வியை கேட்டார். 

உடனே ரத்னாகரன் வீட்டுக்கு வந்து தன் மனைவி, அப்பா, அம்மா, குழந்தைகளிடம், “நான் நிறைய பாவம் செய்துவிட்டதாக சொல்கிறார்கள். அதையெல்லாம் நீங்கள் வாங்கிக் கொள்வீர்களா?  பகிர்ந்துக் கொள்ளுகிறீர்களா?”என்று கேட்டான். அதற்கு அவர்கள் “அதை எதுக்கு நாங்க பகிர்ந்து கொள்ளணும்? எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். நீங்கள் நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டியது தானே? நீங்கள் பாவ வழியில் சம்பாதித்தால், அதற்காக நாங்கள் அந்த பாவத்தை வாங்கிக் கொள்ள மாட்டோம்! பெற்றவர்களை காப்பாத்த வேண்டியது உங்கள் கடமை. மனைவி குழந்தைகளை காப்பாத்த வேண்டியது உங்கள் கடமை. அதற்கு நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டியது உங்கள்கடமை. அதை விட்டு விட்டு தப்பு வழியில் சம்பாதித்தது உங்கள் தவறு.”

இதைக் கேட்டவுடன், இரத்னாகரனுக்கு அகக்கண் திறந்து விட்டது. அவர் உடனே திரும்பி வந்து, ரிஷிகளையெல்லாம் நமஸ்காரம் செய்து, “அறியாமல் இது போன்ற தப்பு வழிகளில்  இவ்வளவு நாள் இருந்து விட்டேன். மிகவும் கடுமையான பாவங்களை எல்லாம் செய்திருக்கிறேன். எனக்கு ஏதாவது கதி இருக்கிறதா? வழி இருக்கிறதா? நீங்கள் கூற வேண்டும்”  என்று வேண்டிக் கொண்டான்.

“நீ, ‘ராம! ராம! ராம!’ என்று ராம நாமத்தை நாமத்தை சொல்லுப்பா. ராம நாமம் ஜபம் எல்லாப் பாவத்தையும் போக்கும்!” என்று அவர்கள் பதில் உரைத்தனர்.

ஆனால், இவருக்கோ, ‘ராம’ என்று கூட சொல்ல வரவில்லை. உடன் அருகில் இருந்த மரா மரத்தை காட்டி, “இது என்ன?” என்றனர்.

“இது, மரா மரம்.” “மரா, மரா என்று சொல்!”

“மரா!” “ஹ்ம்ம்.. இதையே நீ திருப்பிப் திருப்பி சொல்லிக் கொண்டிரு!” என்று கூறி அவர்கள் சென்று விட்டனர்.

இப்படி ‘மரா மரா மரா’ என்று கூறினால் ‘ராம ராம ராம’ என்று வரும். இரத்னாகரனாய் இருந்த அவரும் இப்படியாக ‘ராம ராம ராம’ என்று சொல்லி, அவருக்கு ‘ராம’ நாமத்தில் ருசி வந்து விட்டது. ஜென்ம ஜென்மாவாக புண்ணியம் செய்திருந்தால் தான் ‘ராம’ நாமத்தில் ருசி வரும்.

வேடனாய் இருந்த அவருக்கு, ரிஷிகளின் போதனையால், ‘ராம’ நாம ருசி வந்து விட்டது. அவர் ராப்பகலாய் பசி தாகத்தை மறந்து, ‘ராம ராம ராம’ என்று சமாதி எனும் நிஷ்டையில் இருந்தார்.

அசையாமல் அப்படி அவர் இருந்ததால், அவர் மேல் எறும்புகள் எல்லாம் புற்றுக் கட்டி விட்டது. ஆனால், அவருக்கு அது கூட தெரியவில்லை. இப்படி அவரிடம் இருந்த எல்லா பாவங்களும் நீங்கி, பரம புண்ணிய பாவனனாய், ஒரு மகரிஷியாக ஆகி விட்டார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - அறிமுகம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் இந்தியாவின் ஒரு காவியக் கவிதையாகும், இது தீமையை அழிக்க அறத்தின் பயணத்தை விவரிக்கிறது. ஸ்ரீ ராமர் மற்றும் அயனா அவரது பயணம். இந்தியாவில் ஸ்ரீராமர் த்ரேதா யுகத்தில் வாழ்ந்தார் என்று நம்புகிறோம், கிமு ஆயிரம் ஆண்டுகள், ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் எப்போது சொல்லப்பட்டது என்பதை விட, தற்போது நமக்கு என்ன சொல்கிறது என்பதில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்.


ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் சமஸ்கிருத மொழியில் ஸ்லோகம் எனப்படும் வசனங்களால் ஆனது, இது இந்தியாவில் இருந்து ஒரு பழமையான மொழி மற்றும் அனுஸ்துப் எனப்படும் சிக்கலான மீட்டர். இந்த வசனங்கள் சர்காஸ் எனப்படும் தனிப்பட்ட அத்யாயங்களாக தொகுக்கப்பட்டுள்ளன, இதில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அல்லது நோக்கம் கூறப்பட்டுள்ளது. இந்த அத்யாயங்கள் அல்லது சர்காக்கள் காண்டாஸ் எனப்படும் புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன, அங்கு காண்டா என்றால் கரும்புகளின் இடை முனை தண்டு அல்லது கதையின் ஒரு குறிப்பிட்ட கட்டம் அல்லது கதை சொல்லும் போக்கில் ஒரு நிகழ்வு.

இவ்வாறு ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் அமைப்பு ஆறு காண்டங்களாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது, அவை:

ஸ்ரீ வால்மீகி ராமாயணம்

  • பால காண்டம் - 77 சர்க்கங்கள் - 2266 ஸ்லோகங்கள்
  • அயோத்யா காண்டம் - 119 சர்க்கங்கள் - 4185 ஸ்லோகங்கள்
  • ஆரண்ய காண்டம் - 75 சர்க்கங்கள் - 2441 ஸ்லோகங்கள்
  • கிஷ்கிந்தா காண்டம் - 67 சர்க்கங்கள் - 2453 ஸ்லோகங்கள்
  • ஸூ ந்தர காண்டம் - 68 சர்க்கங்கள் - 2807 ஸ்லோகங்கள்
  • யுத்த காண்டம் - 128 சர்க்கங்கள் - 5675 ஸ்லோகங்கள்
  • உத்தர காண்டம் -111 சர்க்கங்கள் -3373 ஸ்லோகங்கள்
  • மொத்தம் - 645 சர்க்கங்கள் - 23200 ஸ்லோகங்கள்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்