About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 25 August 2023

108 திவ்ய தேசங்கள் - 004 - திருவெள்ளறை 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||004. திருவெள்ளறை||
||ஸ்வேதகிரி – திருச்சி||
||நான்காவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
2 ஆழ்வார்கள் – 24 பாசுரங்கள்

001. பெரியாழ்வார் - 11 பாசுரங்கள்
1. பெரியாழ்வார் திருமொழி (முதலாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 71 – முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம் - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 192 - 201 - இரண்டாம் பத்து - எட்டாம் திருமொழி - 10 பாசுரங்கள்

------------
002. திருமங்கையாழ்வார் - 13 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) - 11 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 1368 - 1377 - ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1851 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - நான்காம் பாசுரம் - 1  பாசுரம்                                                                         
2. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம் 

  • திவ்ய ப்ரபந்தம் - 2706 - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)
3. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2773 - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம் - (71)
---------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
கல் இருந்தான் தந்தை கமலத்தோன்* 
அக்கமலத்தில் இருந்தான் தந்தை அரங்கேசன்* 
என்றே தொல்லை மறை உள் அறையா நின்றமையால்* 
உள்ளமே கள்ளம் இன்றி வெள்ளறையான் தானே விரும்பு|

  • உள்ளமே - எனது மனமே! 
  • கல் இருந்தான் தந்தை - கைலாச மலையில் இருப்பவனாகிய சிவபெருமானது திருத்தந்தை
  • கமலத்தோன் - திருமாலினது நாபித் தாமரையில் தோன்றியவனாகிய பிரம்மனாவன்
  • அக் கமலத்தில் இருந்தான் தந்தை - அந்தத் தாமரை மலரில் வாழ்பவனாகிய பிரம்மனது திருத்தந்தை
  • அரங்கேசன் - திருவரங்கநாதனாவன் என்று 
  • தொல்லை மறையுள் அறையா நின்றமையால் - பழமையாகிய வேதங்களில் சொல்வதனால்
  • கள்ளம் இன்றி - கபடம் இல்லாமல்,
  • வெள்ளறையான் தாளே - திருவெள்ளறை என்னும் ஸ்தலத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானது திருவடிகளையே
  • விரும்பு - விரும்பிச் சேர்வாயாக

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 17 - பெரியாழ்வார் திருமொழி - 1.1.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 17 - முல்லை அரும்பு போன்ற பற்களை உடையவர்கள்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - முதலாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்

கொண்ட தாளுறி* கோலக் கொடு மழுத்*
தண்டினர்* பறியோலைச் சயனத்தர்*
விண்ட முல்லை* அரும்பன்ன பல்லினர்*
அண்டர் மிண்டிப்* புகுந்து நெய்யாடினார்|

  • கொண்ட தாள் - நெருங்கிப் பின்னப்பட்ட
  • உறி - உறிகளையும்
  • கோல - அழகிய
  • கொடு - கூர்மையான
  • மழு - மழு மற்றும்
  • தண்டினர் - தடிகளை கொண்டவர்
  • பறியோலை - தாழை மடல் ஓலை
  • சயனத்தர் - படுக்கையில் சயனிப்பவராய்
  • விண்ட - மலர்ந்த
  • முல்லை அரும்பு அன்ன - முல்லை அரும்பு போன்ற
  • பல்லினர் - பற்களை உடையவர்களான
  • அண்டர் - இடையர்கள்
  • மிண்டிப் புகுந்து - நெருங்கிப் புகுந்து
  • நெய்யாடினார் - எண்ணெய் தேய்த்த உடலோடு தழுவினர்

ஆநிரைகளை மேய்ப்பதற்கு நெடுந்தொலைவு சென்ற ஆயர்கள், பாதமளவிற்கு நீண்ட உறியையும், அழகிய, கூரிய மழு என்ற அரிவாளையும் கொண்டவர்கள்; மேலும், ஆநிரைகளை ஒழுங்கு படுத்துவதற்காக நீண்ட, தடித்த குச்சியினை (கோல்) உடையவர்கள்; அவர்கள் ஓய்வெடுக்கவும், உறங்கவும், பனை ஓலையினை படுக்கையாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்; முகிழ்கின்ற முல்லை மலரின் அரும்பினைப் போன்ற வெண்மையான பற்களை உடைய ஆயர்கள், தங்கள் நிரைகளை மேய்க்கச் செல்லும் பாதி வழியிலேயே கண்ணன் பிறந்து விட்ட நல்ல செய்தியைக் கேட்டு, உடனே வீட்டிற்குத் திரும்பினர்; வீட்டிற்கு வந்தவுடன், கண்ணன் பிறந்திருந்த நல்ல நாளினை முன்னிட்டு எண்ணெய்க் குளியலாடினர். ஒருவருக்கொருவர் எண்ணை தேய்த்த உடம்புடன் ஆலிங்கனம் செய்தும், ஆனந்தமாக ஆடியும் பாடியும், ஸ்நானம் செய்தும் மகிழ்ந்தனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.17

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.17

காஸ்²யஸ்²ச பரமேஷ் வாஸ: 
ஸி²க²ண்டீ³ ச மஹாரத²:|
த்⁴ருஷ்டத்³யும் நோ விராடஸ்²ச 
ஸாத்ய கிஸ்²சா பராஜித:||

  • காஸ்²யஸ்² - காசி (வாரணாசி) மன்னன் 
  • ச - மற்றும் 
  • பரமேஷ் வாஸஹ - வில்லாளிகளில் மிகச் சிறந்த 
  • ஸி²க²ண்டீ³ - சிகண்டி 
  • ச - மற்றும் 
  • மஹாரத²ஹ - ஆயிரக்கணக்கானவர்களுடன் தனியாக நின்று போரிடக் கூடியவன் 
  • த்⁴ருஷ்டத்³யும் ந - திருஷ்டத்யும்னன் (துருபத மன்னனின் குமாரன்) 
  • விராடஸ்² - விராடன் (பாண்டவர்கள் மறைந்து வாழ்ந்த போது இடமளித்த மன்னன்) 
  • ச - மற்றும் 
  • ஸாத்யகிஸ்² - சாத்யகி (யுயுதானன், பகவான் கிருஷ்ணனின் தேரோட்டி) 
  • ச - மேலும் 
  • அப ராஜிதஹ - என்றும் வெல்ல முடியாத 

மன்னா! பெரும் வில்லாளி காசிராஜனும், பெரும் வீரரான சிகண்டீயும், ஆயிரக் கணக்கானவர்களுடன் தனியாக போரிடக் கூடிய துருபதனின் குமாரன் த்ருஷ்டத்யுமனும், மறைந்து வாழ உதவிய விராடனும், வெல்ல முடியாதவனான சாத்யகியும் தத்தம் சங்குகளை ஊதினர். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
||ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.1

வ்யாஸ உவாச!
இதி ஸம்ப்ரஸ்²ந ஸம் ஹ்ருஷ்டோ
விப்ராணாம் ரௌம ஹர்ஷணி:।
ப்ரதி பூஜ்ய வசஸ் தேஷாம்
ப்ரவக் துமுப சக்ரமே॥

  • வ்யாஸ உவாச! - வியாஸர் கூறினார்
  • இதி - இவ்வாறாக
  • ஸம்ப்ரஸ்²ந - பக்குவமான கேள்விகளால்
  • ஸம் ஹ்ருஷ்டோ - பூரண திருப்தியடைந்து
  • விப்ராணாம் - அங்குள்ள முனிவர்களின்
  • ரௌம ஹர்ஷணிஹி - உக்ரசிரவஸ் எனும் பெயர் கொண்ட, ரோமஹர்ஷணரின் புதல்வர்
  • ப்ரதி பூஜ்ய - அவர்களுக்கு நன்றி கூறியபின்
  • வசஸ் - வார்த்தைகள்
  • தேஷாம் - அவர்களுடைய
  • ப்ரவக்தும் - அவர்களிடம் பதில் கூற
  • உப சக்ரமே - தொடங்கினார்

இவ்வாறு வேதியர்களது கேள்விகளைக் கேட்டு மனம் மகிழ்ந்த ரோம ஹர்ணருடைய புதல்வரான 'உக்ர சிரவஸ்' என்கிற ஸூத புராணிகர், அவர்களது கேள்விகளைப் புகழ்ந்து மெச்சி பதில் சொல்லத் தொடங்கினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்