About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 14 August 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.11

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் – 1.11
 
அயநேஷு ச ஸர்வேஷு
யதா² பா⁴க³ மவஸ்தி²தா:|
பீ⁴ஷ்ம மேவாபி⁴ ரக்ஷந்து
ப⁴வந்த: ஸர்வே ஏவ ஹி|

  • அயநேஷு - முக்கியப் போர் முனைகளில்
  • ச - மேலும்
  • ஸர்வேஷு - எங்கும்
  • யதா² பா⁴க³ம் - பலவிதங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளபடி
  • அவஸ்த²தா - இருந்தபடியே
  • பீ⁴ஷ்மம் - பாட்டனார் பீஷ்மருக்கு
  • ஏவ - நிச்சயமாக
  • அபி⁴ரக்ஷந்து - பாதுகாப்பளிக்க வேண்டும்
  • ப⁴வந்த: - நீங்கள்
  • ஸர்வே - அனைவரும்
  • ஏவ ஹி – நிச்சயமாக

படை அணிவகுப்பின் நுழைவாயிலில் தத்தமது போர் முனைகளில் இருந்தபடியே நீங்கள் அனைவரும் பாட்டனார் பீஷ்மருக்கு முழுப் பாதுகாப்பளிக்க வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.1.18

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே  
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்|| 
||ஞானிகளின் கேள்விகள்||

ஸ்லோகம் - 1.1.18

அதா²க்² யாஹி ஹரேர் தீ⁴மந்
அவதார கதா²꞉ ஸு²பா⁴꞉|
லீலா வித³ த⁴த꞉ ஸ்வைரம் 
ஈஸ்²வரஸ் ஆத்ம மாயயா||

  • தீ⁴மந்நு - அறிவில் சிறந்தவரே!
  • ஈஸ்²வரஸ் ஆத்ம மாயயா - ஈஸ்வரன் தனது லீலா வினோதத்தால்
  • ஸ்வைரம் - இஷ்டப்படி
  • லீலா - பல்வேறு லீலைகளை
  • வித³ த⁴தஸ் - செய்பவரான
  • ஹரேர் - மகாவிஷ்ணுவின்
  • ஸு²பா⁴ஹ - நன்மையை தரத் தக்க
  • அவதார கதா²ஸ் - மத்ஸ்யாதி அவதார கதைகளை
  • அத² ஆக்²யாஹி - பிறகு சொல்லும்

அறிவிற் சிறந்தவரே! தனது மாயையால் தன்னிச்சையாக பற்பல வினோத லீலைகளைச் செய்யும் பகவான் ஸ்ரீ ஹரியின் நன்மை தரத்தக்க பற்பல அவதாரக் கதைகளை சொல்லுங்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 26

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய|| 
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்|| 

||த்யான ஸ்லோகம் - 3||

||ஓம் நமோ பகவதே வாஸுதேவாய||

ஸா²ந்தா காரம் பு⁴ஜக³ ஸ²யநம் 
பத்³மநாப⁴ம் ஸுரேஸ²ம்
விஸ்²வாதாரம் க³க³ந ஸத்³ருஸ²ம் 
மேக⁴ வர்ணம் ஸு²பா⁴ங்க³ம்|

  • ஸா²ந்தா காரம் - சாந்தத்தின் உருவம்
  • பு⁴ஜக³ - பாம்பு
  • ஸ²யநம் - படுக்கை
  • பத்³மநாப⁴ம் - தொப்புளில் தாமரையை உடையவர்
  • ஸுரேஸ²ம் - தேவர்களின் இறைவன்
  • விஸ்²வாதாரம் - பிரபஞ்சத்தின் உருவம்
  • க³க³ந - வானம்
  • ஸத்³ருஸ²ம் - ஒப்பிடத்தக்கது
  • மேக⁴ வர்ணம் - மேகம் போன்ற கரு நீல நிறம்
  • ஸு²ப⁴ - அழகான, மங்களகரமான
  • அங்க³ம் - உடல் உறுப்புகள்


லக்ஷ்மீ காந்தம் கமல நயநம் 
யோகி³ ஹ்ருத்³ த்⁴யாந க³ம்யம்
வந்தே³ விஷ்ணும் ப⁴வ ப⁴ய ஹரம் 
ஸர்வ லோகைக நாத²ம்||

  • லக்ஷ்மீ காந்தம் - லட்சுமி தேவியை கவர்ந்திழுப்பவர்
  • கமல - தாமரை
  • நயநம் - கண்
  • யோகி³ - பகவானின் மீது முழு கவனம் செலுத்துபவர்
  • ஹ்ருத்³ - இதயம்
  • த்⁴யாந - தியாநம்
  • க³ம்யம் - அடையக் கூடியது
  • வந்தே³ - வணங்குகிறேன்
  • விஷ்ணும் - விஷ்ணுவை
  • ப⁴வ - உலக இருப்பு
  • ப⁴ய - பயம்
  • ஹரம் - அழிப்பார்
  • ஸர்வ - அனைத்தும்
  • லோக - உலகம்
  • ஏகா - மட்டும், என்றும்
  • நாத²ம் - தலைவர்


பெருமான் சாந்தமே வடிவானவர்; திருவனந்தாழ்வானாகிற திருவணை மேல் பள்ளி கொள்பவர்; நாபியில் தாமரைப் பூவை அழகாகப் பெற்றிருப்பவர்; தேவர்களின் தலைவர்; உலகுக்கு ஆதாரமாய் இருப்பவர். ஆகாயம் போல் பரந்துள்ளவர்; மேக வண்ணர்; அனைத்து லக்ஷணங்களும் பொருந்திய திருமேனி உடையவர்; திருமகளின் உள்ளத்தைக் கவர்ந்தவர்; செந்தாமரைக் கண்ணர்; யோகத்தில் இருந்து கொண்டு தியானிக்கும் ரிஷிகளின் இதயத்தை இருப்பிடமாகக் கொண்டவர்; பிறவிப் பிணியைப் போக்குபவர்; அனைத்துலகுக்கும் தலைவர். இத்தகைய மகா விஷ்ணுவை வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - 23

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

இருபத்தி மூன்றாவது வார்த்தை

023. ஆழி மறை என்றேனோ வசுதேவரைப் போலே|

வசுதேவர் - தேவகிக்கு கிருஷ்ணர் பிறந்தார் சிறைச்சாலையில். நான்கு புஜங்கள். அவற்றுள் கதை, சங்கு, சக்கரம், தாமரை மலர், மார்பில் மருவாக ஸ்ரீவத்சம், பட்டுப் பீதாம்பரம், கழுத்தில் மாலை, வைர மணிமுடி, காதில் மின்னும் குண்டலங்கள். கண்ணன் அலங்காரப் புருஷனாகக் காட்சியளித்தார்.


வசுதேவர், குழந்தையைப் பார்த்துக் கொண்டே இருந்தார். இந்த அவதாரப் புருஷன் மூலம் கம்சன் வதம் நடக்கப் போகிறதே! ஆனால் குழந்தை இப்படி இருந்தால் என பதபதைப்புடன் ஆழியை மறைத்துக் கொள் என்று கண்ணனிடத்தில் வசுதேவர் பிரார்த்திக்கிறார். இந்த அலௌகிகமான ரூபத்தை கண்ணனே நீ மறைத்து கொள் என்று பிரார்த்திக்கிறார். கம்சன் காதுக்கு செய்தி போய்விட்டால் என்ன ஆகுமோ தெரியலையே! என்று பயந்தார் வசுதேவர். அதனால் கண்ணனை பார்த்து "நீயே மூவுலகை ரட்சிக்கும் நாராயணன் என நான் அறிவேன், ஆனால், இந்தக் கோலம் உனக்கு இப்போது உசிதமல்ல. 


உனது தெய்வ அம்சங்களான நான்கு தோள்கள், சங்கு, சக்கரத்தை மறைத்துக் கொள். இந்த உலகத்து குழந்தை போல இல்லாமல் தெய்வக் குழந்தை போன்ற ரூபத்தில் இருக்கிறாயே! இதை மறைத்துக் கொள்." என்று பிரார்த்தித்த மறு நிமிஷமே கண்ணன் எல்லாவற்றையும் மறைத்துவிட்டு மானிடக் குழந்தை ஆனார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “அப்படி வசுதேவரை போல அனைத்தையும் மறைத்துக் கொள் என்று நான் பிரார்த்திக்க வில்லையே! பயமே தெரியாத எம்பெருமானுக்காக பரிவோடு பயந்து சொன்னாரே! அந்த பரிவு என்னிடம் இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்