About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 13 August 2023

திவ்ய ப்ரபந்தம் - 9 - திருப்பல்லாண்டு 9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 9 - நாகணையானைப் பாடு
திருப்பல்லாண்டு - ஒண்பதாம் பாசுரம்

உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை* 
உடுத்து கலத்தது உண்டு*
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன* 
சூடும் இத்தொண்டர்களோம்*
விடுத்த திசைக் கருமம் திருத்தித்* 
திருவோணத் திருவிழவில்*
படுத்த பைந் நாகணைப் பள்ளி கொண்டானுக்குப்* 
பல்லாண்டு கூறுதுமே|


இதில் வாழாட்பட்டு பாசுரத்திலே அழைத்து எந்தை தந்தை பாசுரத்திலே வந்து சேர்ந்த பகவத் கைங்கர்யார்த்தியுடன் கூடித் திருப்பல்லாண்டு பாடுகிறார்.

  • உடுத்து - தேவரீர் அரையில் சாத்திக் கொண்டு
  • களைந்த - கழித்து விட்ட
  • நின் பீதக ஆடை - தேவரீருடைய பீதாம்பரத்தை
  • உடுத்து - உடுத்திக் கொண்டும்
  • கலத்தது - தேவர் அமுது செய்த பாத்திரத்தில் மிகுந்திருப்பதை
  • உண்டு - புசித்தும்
  • தொடுத்த - தொடுக்கப்பட்டுள்ள
  • துழாய் மலர் - திருத்துழாய் மலர் மாலைகளை
  • சூடி களைந்தன - தேவர் சாத்திக் கொண்டு களைந்தவைகளான
  • சூடும் - சூட்டிக் கொள்ளுகிறவர்களான
  • இத்தொண்டர்களோம் - இப்படிப்பட்ட தாஸர்களான நாங்கள்
  • விடுத்த திசை - தேவரீர் ஏவியனுப்பிய திசையிலுள்ள; 
  • கருமம் - ஆக வேண்டிய காரியங்களை 
  • திருத்தி - ஒழுங்காகச் செய்து;
  • திரு ஓணம் திருவிழவில் - ச்ரவணம் என்னும் திருநாளிலே
  • படுத்த - கீழே பரப்பிய
  • பை நாகம் அணை - படத்தையுடைய பாம்பாகிற படுக்கையில்
  • பள்ளி கொண்டானுக்கு - சயனித்திருக்கிற தேவரீருக்கு
  • பல்லாண்டு கூறுதுமே - மங்களாசாஸநம் செய்வோம்

இப்பாசுரம் பன்மை சொல்லில் அமைந்துள்ளது. எம்பெருமானிடம் கைங்கர்யம் செய்பவர்கள் எல்லாம் சேர்ந்து எம்பெருமானை குறித்து பல்லாண்டு பாடுகிறார்கள். நாங்கள் உன்னுடைய திருவரையில் உடுத்திக் களைந்த திருப்பீதாம்பரத்தை உடுத்தும், நீ அமுது செய்து மீதம் இருக்கும் உன் ப்ரஸாதத்தை உண்டும், உன்னால் சூடிக் களையப்பட்ட திருத்துழாய் மாலையைச் சூடியும், அடியார்களாக இருப்போம். ஏவின திசையில் உள்ள கார்யங்களை நன்றாகச் செய்யகூடிய, பணைத்த பணங்களை உடைய ஆதிசேஷன் என்னும் படுக்கையிலே சயனித்துக் கொண்டிருக்கும் உனக்கு, திருவோணம் என்னும் திருநாளில் திருப்பல்லாண்டு பாடுவோம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் – 1.7
 
அஸ்மாகம் து விஸி²ஷ்டா யே
தாந் நிபோ³த⁴ த்³விஜோத்தம|
நாயகா மம ஸைந்யஸ்ய
ஸஞ்ஜ் ஞார்த²ம் தாந் ப்³ரவீமி தே||

  • அஸ்மாகம் - நம்முடைய 
  • து - ஆனால் 
  • விஸி²ஷ்டா - விசேஷ பலமுள்ள 
  • யே - யார் 
  • தாந் - அவர்களை 
  • நிபோ³த⁴ - கவனியுங்கள் 
  • த்³விஜோத்தம - பிராமணரில் சிறந்தவரே 
  • நாயகா - நாயகர்கள் 
  • மம - என்னுடைய 
  • ஸைந்யஸ்ய - படை வீரர்களின் 
  • ஸஞ்ஜ் ஞார்த²ம் - அறிவதற்காக 
  • தாந் - அவர்கள் 
  • ப்³ரவீமி - கூறுகிறேன் 
  • தே – உங்களிடம்

அந்தணரில் சிறந்தவரே, தாங்கள் தெரிந்து கொள்வதற்காக, இனி நம்முள்ளே சிறந்தோரை, எனது சேனையை வழிநடத்தும் தகுதி வாய்ந்த நாயகர்களைப் பற்றியும் தங்களிடம் கூறுகிறேன் கேளுங்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.1.14

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே  
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்|| 
||ஞானிகளின் கேள்விகள்||

ஸ்லோகம் - 1.1.14

ஆபந்ந: ஸம்ஸ்ருதிம் கோ⁴ராம் 
யந்நாம விவஸோ² க்³ருணந்|
தத꞉ ஸத்³யோ விமுச்யேத 
யத்³பி³பே⁴தி ஸ்வயம் ப⁴யம்||

  • கோ⁴ராம் ஸம்ஸ்ருதிம் - மிக பயங்கரமான சம்சார பந்தத்தில்
  • ஆபந்நஸ் - ஈடுபட்டும்
  • விவஸோ² - எவன் ஒருவன் காலவசத்தை அடைந்தவனாய் கொண்டும்
  • யந்நாம க்³ருணந்நு - எந்த மகாவிஷ்ணுவின் நாமாவை சொல்கிறவனாய் கொண்டு
  • ததஸ் - அந்த சம்சார பந்தத்திலிருந்து
  • ஸத்³யோ - உடனேயே
  • விமுச்யேத - விடுபடுகிறானோ
  • யத்³ - யாதொரு நாமாவிடமிருந்து
  • ப⁴யம் ஸ்வயம் - பயமானது தானே
  • பி³பே⁴தி – பயப்படுகிறதோ

மிகவும் பயங்கரமான பிறப்பு இறப்பு என்னும் உலகியலான சம்சாரக் கடலில் மூழ்கித் தவிப்பவன், வேறு வழியின்றி தன்னிச்சையில்லாமல் பகவானது திருநாமங்களை உச்சரிப்பானேயானால், அக்கணமே அவன் இந்தப் பிறவிக் கடலிலிருந்து விடுபடுகிறான். ஏனென்றால், பகவானது திருநாமத்தின் முன் பயம் என்பது விலகிப் போகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 22

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய|| 
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்||

விஷ்ணும் ஜிஷ்ணும் மஹா விஷ்ணும் 
ப்ரப⁴ விஷ்ணும் மஹேஸ்²வரம்|
அநேக ரூப தைத்³யாந்தம் 
நமாமி புருஷோத்தமம்||

  • விஷ்ணும் - எங்கும் நிறைந்தவரை, விஷ்ணுவை
  • ஜிஷ்ணும் - வெற்றி உடையவரை, வெற்றி பெறுபவரை
  • மஹா விஷ்ணும் - மகா விஷ்ணுவை, பெரிய விஷ்ணுவை
  • ப்ரப⁴ விஷ்ணும் - பிரகாசம் உடைய விஷ்ணுவை
  • மஹேஸ்²வரம் - மகேஸ்வரனை, பேரிறைவனை
  • அநேக ரூப - பல வடிவங்கள் கொண்ட
  • தைத்³யாந்தம் - அசுரர்களை அழிப்பவரை
  • நமாமி - நான் வணங்குகிறேன்
  • புருஷோத்தமம் - உயர்ந்த பரம புருஷனை, எல்லாவற்றிலும் உயர்ந்த இறைவனை


மந்திர ஜபம் சாந்தியின் பொருட்டுப் பயன்படுகிறது. இதனால் எல்லாக் குற்றங்களும் நீங்கப் பெறுகிறது. அங்கே எங்கே என்று இல்லாத படி எங்கும் நிறைந்துள்ளவரும், எப்போதும் வெற்றியையே உடையவரும், எல்லாவற்றிலும் உறைபவரும், பல வடிவங்களைக் கொண்டவரும், அரக்கர்களுக்குப் பகைவரும், புருஷோத்தமராகவும் உள்ள மஹா விஷ்ணுவை வணங்குகிறேன். இந்த மூன்றாம் பகுதி பாரதத்திலும் இல்லை; பாஷ்யங்களிலும் இல்லை. நடைமுறையில் மட்டுமே உள்ளது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்