About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 1 August 2024

ஸ்ரீமத் பாகவத புராணம் - 87

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 32

ஸ்கந்தம் 03

ப்ரக்ருதியின் குணங்களுடன் தொடர்பு கொள்ளும் ஜீவன் அஹங்காரத்தால் 'நானே செய்பவன்' என்று எண்ணுகிறான்.

இதனால் தன் இயல்பான சுதந்திரத்தை இழந்து, ஆனந்தத்தை மறந்து, பாவ புண்யங்களுக்குத் தக்கவாறு, பற்பல வகையான பிறவிகளை அடைகிறான். பிறப்பு இறப்புச் சுழலில் மாட்டிக்கொள்கிறான்.

கனவில் தோன்றும் அச்சம், சோகம் முதலியவற்றுக்குக் காரணம் ஏதுமில்லை. ஆனால், கனவு இருக்கும்வரை அவற்றை அனுபவிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

அது போலவே, அச்சம், துயரம், நான், எனது, பிறப்பு, இறப்பு முதலியவற்றுக்கு எந்த ஆதாரமும்‌ இல்லை.

எனினும், அஞ்ஞானத்தின் காரணமாக புலன் நுகர் பொருள்களில் கவனம் செலுத்துவதால் ஜீவனுக்கு பிறப்பு இறப்புச் சுழலிலிருந்து விடுதலை கிடைப்பதில்லை.

உலகியல் பற்று கொண்ட மனத்தை இடைவிடாத பக்தி யோகத்தாலும், வைராக்யத்தாலும் மெல்ல மெல்லத் தன்வயப்படுத்தவேண்டும்.


மிகவும்‌ ஈடுபாட்டுடன் அப்யாசம் செய்து, சித்தத்தை ஒரு நிலைப்படுத்தி, ஆன்மா வேறு, ப்ரக்ருதியின் உருவான உடல் வேறு என்று அறியவேண்டும். பக்தியுடன் தேனினும்‌ இனிய திருக்கதைகளைச் செவியாரப் பருக வேண்டும். எல்லா ஜீவராசிகளிடமும் பகைமை பாராட்டாமல் அன்புடன்‌ பழக வேண்டும். புலனடக்கத்துடன் இறைச் சிந்தனை தவிர மற்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பகவத் அர்ப்பணமாக உறுதியுடன் தன் கடைமைகளைச் செய்ய வேண்டும். மிதமான ஆகாரம் ஏற்று ஸாது சங்கத்தில் எப்போதும்‌ இருக்க வேண்டும். மற்ற சேர்க்கையைத் தவிர்க்க வேண்டும். தேகத்திலோ, அதைச் சார்ந்திருக்கும் மனைவி, மக்களிடமோ, நான் எனது என்ற வீண் அபிமானம் கொள்ளாதிருக்க வேண்டும்.

ப்ரக்ருதி வேறு புருஷன் வேறு என்ற அறிவால் ஜாக்ரத்(விழிப்பு), ஸ்வப்ன (கனவு), ஸுஷுப்தி (தூக்கம்) முதலிய நிலைகளைக் கடக்கவேண்டும். இவ்வாறு செய்பவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ப்ரும்மத்தையே அடைகிறான்.

நீர் நிலைகளில் நீரில் தோன்றும் சூரியனின் ப்ரதிபிம்பம், அருகிலிருக்கும் சுவற்றில் பரதிபலிக்கும். அதைப் பார்த்தாலும், நாம் அறிவது என்ன? ஆகாயத்தில் சூரியன் இருக்கிறான் என்பதேயாம்.

அதுபோல், ஆழ்ந்த உறக்கத்தில் அனைத்துப் புலன்களும் அஹங்காரத்தில் ஒடுங்கி விடுகின்றன. அப்போது விழிப்பு, உறக்கம், கனவு மூன்று நிலைகளிலும் சாட்சியாக விளங்கும் ஜீவாத்மா விழிப்புடன் இருக்கிறது. அதனால்தான், உறங்கி எழுந்ததும் 'நான் நன்றாகத் தூங்கினேன்' என்று சொல்லமுடிகிறது.

மற்ற புலன்கள் செயலற்றுக் கிடப்பினும் ஜீவன் விழிப்புடன் இருப்பதாலேயே உடலில் உயிர்ப்புத்தன்மை இருக்கிறது. இல்லையெனில் உடலின் பெயர் வேறாகிவிடும்.

விழித்துக்கொண்டிருக்கும்போது இந்திரியங்கள் செயல்படக் காரணம் அந்தர்யாமியான பகவான் என்று புரிந்துவிடும். உறங்கும்போது புலன்கள் செயலற்றிருப்பதால் அந்தர்யாமி இல்லை என்றாகிவிடாது.

உண்மையில் ஆழ்ந்த உறக்கத்தில் இல்லாமல் போவது அஹங்காரமும் புலன்களின் உணர்வும் மட்டுமே. உறக்கத்தில் அஹங்காரம் செயலற்றுப் போவதால் தானே இல்லாமல் போய்விட்டதாக நினைக்கிறான்.

உறக்கத்தில் அஹங்காரம் தொலைந்து ஜீவன் விழிப்புடன்தான் இருக்கிறது. அம்மா, மேற்கூறிய அனைத்தையும்‌ ஆராய்ந்து விவேகத்துடன் பரமாத்மாவை அறிந்து கொள்ள வேண்டும், என்றார் கபிலர்.

மிகவும்‌ மகிழ்ந்த தேவஹூதி, நம் பொருட்டு, மேலும் கேள்விகள் கேட்கத் துவங்கினாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Tuesday, 30 July 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 142

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 142

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 4

||உத்தர பீடி²கா||
உத்தர பாகம்
பலஸ்²ருதி

த⁴ர்மார்தீ² ப்ராப்நுயாத்³ த⁴ர்ம
மர்த்தா²ர்த்தீ² சார்த்த² மாப்நுயாத்|
காமாந வாப்நுயாத் காமீ 
ப்ரஜார்தீ² சாப்னுயாத் ப்ரஜா꞉||

  • த⁴ர்மார்தீ² - தர்மத்தை விரும்புபவன்
  • ப்ராப்நுயாத்³ - அடைவான்
  • த⁴ர்மம் - தர்மத்தை
  • அர்த்தா²ர்த்தீ² - செல்வத்தை விரும்புபவன்
  • ச - மேலும்
  • அர்த்த²ம் - செல்வத்தை
  • ஆப்நுயாத் - அடைவான்
  • காமாந் - விரும்பிய இன்பங்களை
  • ஆப்நுயாத் - அடைவான்
  • காமீ - ஆசை உடையவன்
  • ப்ரஜார்த்தீ² - சந்ததியை விரும்புபவன்
  • ச - மேலும்
  • ஆப்நுயாத் - அடைவான்
  • ப்ரஜாஹ - சந்ததியை

இந்தப் பெயர்களைக் கேட்பதாலோ, உரைப்பதாலோ, ஒருவன் அறத்தகுதியீட்ட விரும்பினால் தருமத்தை அடைகிறான். ஒருவன் செல்வத்தை விரும்பினால், அவன் இவ்வழியில் செயல்பட்டு செல்வத்தை ஈட்டுவதில் வெல்வான். புலனின்பங்களில் ஆசை கொண்ட மனிதனும் அனைத்து வகை இன்பங்களையும் அனுபவிப்பதில் வெல்கிறான். சந்ததியை விரும்பும் மனிதன் இவ்வொழுக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் சந்ததியை அடைகிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.6 

கர்மேந்த்³ரியாணி ஸம்யம்ய 
ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்|
இந்த்³ரியார் தா²ந் விமூடா⁴த்மா 
மித்²யா சார: ஸ உச்யதே||

  • கர்மேந்த்³ரியாணி - ஐந்து செயற் புலன்களை 
  • ஸம்யம்ய - கட்டுப்படுத்தி  
  • ய - எவனொருவன் 
  • ஆஸ்தே - இருக்கிறானோ 
  • மநஸா - மனதால் 
  • ஸ்மரந்- எண்ணிக் கொண்டு  
  • இந்த்³ரியார் தா²ந் - புலனுகர்ச்சிப் பொருட்கள் 
  • விமூட⁴ - முட்டாள் 
  • ஆத்மா - ஆத்மா 
  • மித்²யா சாரஸ் - பொய்யான நடத்தையுடையவன் (போலி மனிதன்) 
  • ஸ - அவன் 
  • உச்யதே - அழைக்கப்படுகின்றான்

எவனோருவன், ஐந்து செயற் புலன்களை கட்டுப்படுத்தி, மனதால் புலனுகர்ச்சிப் பொருட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறானோ, அவன் தன்னையே முட்டாளாக்கிக் கொள்கிறான். அவன் போலி மனிதன் என்று அழைக்கப்படுகிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.32

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.32

தஸ்யை வம் கி²லமாத் மாநம் 
மந்ய மாநஸ்ய கி²த்³யத:|
க்ருஷ்ணஸ்ய நாரதோ³ப்⁴ யாகா³த்³
ஆஸ்²ரமம் ப்ராகு³தா³ ஹ்ருதம்|| 

  • ஏவம் ஆத்மாநம் - இவ்வாறு தன்னை 
  • கி²லம் மந்ய மாநஸ்ய - குறை உள்ளவராக எண்ணுகின்றவரும் 
  • கி²த்³யதஹ - அதனால் வருந்துகின்றவருமான 
  • தஸ்யை க்ருஷ்ணஸ்ய - அந்த வியாஸருடைய 
  • ப்ராக்³ உதா³ ஹ்ருதம் - முன்பு கூறப்பட்ட ஸரஸ்வதீ நதிக் கரையில் இருக்கும் 
  • ஆஸ்²ரமம் - ஆஸ்ரமத்திற்கு 
  • நாரத³ - நாரத மஹரிஷி 
  • அப்⁴யாகா³த்³ - வந்தார் 

இவ்வாறு அமைதியின்றித் தம்மைச் சூன்யமாகக் கருதி, வருத்தமுறும் வியாஸ முனிவரது ஆசிரமத்திற்கு நாரத முனிவர் வந்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்