About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 13 March 2024

ஸ்ரீமத் பாகவத புராணம் - 66

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 11

ஸ்கந்தம் 03

வராக அவதாரம் - 1

எவ்வளவு விஷயங்களைப் படைத்திருந்தபோதும், ஜீவன்களின் படைப்பு, பெருகவே இல்லை. மிகுந்த ஆயாசத்துடன் ப்ரும்மா தன் உடலை விட்டார். அவரது சரீரம் நான்கு திக்குகளாலும் ஆகர்ஷிக்கப்பட்டு புகை மூட்டமாயிற்று. புதிய சரீரம் கொண்ட அவர், தன் செய்கையில் பிழைகள் உள்ளதா என்று ஆராய்ந்தார். ஒன்றும் புரியாமல் பகவானை சிந்தனை செய்யத் துவங்கினார். அப்போது அவரிடமிருந்து ஆண், பெண் என்று இரண்டு உடல்கள் ஏற்பட்டன. 'க' எனில் ப்ரும்ம தேவர். அதிலிருந்து உண்டானது காயம். அவ்வாறு பிரிந்ததில் ஆண் உருவம் ஸ்வயம்புவ மனு என்று பெயர் பெற்று முதல் மனுவாயிற்று. பெண் பகுதி சதரூபா என்ற பெயரில் ஸ்வாயம்புவ மனுவின் ராணியானார்.


அது முதல் ஆண், பெண் உடலுறவால் ப்ரஜைகள் தோன்றலாயினர். சக்ரவர்த்தியான ஸ்வாயம்புவமனுவிற்கும், சதரூபைக்கும் ஐந்து குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் ப்ரியவ்ரதன், உத்தானபாதன் என்ற இரு ஆண் குழந்தைகளும், ஆகூதி, தேவஹூதி, ப்ரஸூதி ஆகிய மூன்று பெண் குழந்தைகளும் ஆவார்கள்.

ஸ்வாயம்புவ மனு ஆகூதியை ருசி என்பவருக்கும், தேவஹூதியை கர்தமருக்கும், ப்ரஸூதியை தக்ஷனுக்கும் திருமணம் செய்துகொடுத்தார். அவர்களது சந்ததியால் இவ்வுலகம் நிறைந்தது.

விதுரர் கேட்டார். "ரிஷியே, பகவானின் சரண கமலங்களைத் தனது இதயத் தாமரையில் வைத்து வழிபடும் அடியார்களின் குணங்களைக் கேட்பதே கற்ற கல்வியின் பயன் என்று சான்றோர்கள் கூறுகின்றனர். எனவே, அந்த ஸ்வாயம்புவ மனுவின் சரித்திரத்தைக் கூறுங்கள்" என்றார்.

இவ்வார்த்தைகளால் மைத்ரேயர் மகிழ்ச்சியால் மேனிசிலிர்த்தார். பின்னர் கூறத் துவங்கினார்.

ஸ்வாயம்புவ மனு சதரூபையுடன் வந்து ப்ரும்மாவிடம் கூறினார். பகவானே, நீங்களே படைப்பு அத்தனைக்கும் காரணம். நாங்கள் தங்களுக்குச் செய்ய வேண்டிய சேவை என்ன என்று கூறியருளுங்கள் என்றார்.

ப்ரும்மா, பெற்றோரின் கட்டளையை விநயத்துடனும் ஈடுபாட்டுடனும் தன் திறமைக்கேற்பச் செய்வதே தனயனின் முதற் கடைமை. நீ சத ரூபையுடன் இல்லறம் நடத்தி குழந்தைகளைத் தோற்றுவித்து, அறநெறி வழுவாமல் இவ்வுலகைக் காத்து வா. பரம புருஷனை வேள்விகளால் ஆராதனம் செய். என்றார்.

மனு மீண்டும் கேட்டார். "தாங்கள் கூறியபடி செய்து பகவானை மகிழ்விக்கிறேன். ஆனால், நானும் என் மக்களும் வசிக்க ஒரு இடம் காட்டுங்கள். அனைத்து ஜீவராசிகளுக்கும் இருப்பிடமான பூமி ப்ரளய நீரில் மூழ்கி விட்டது. அதை மேலே கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்" என்றார்.  ப்ரும்மா பூமியை எவ்வாறு மேலே கொண்டு வருவது என்று யோசனையில் ஆழ்ந்தார்.

வழி எதுவும் புலப்படாததால் எந்த பகவானின் ஹ்ருதயத்தில் இருந்து நான் படைக்கப்பட்டேனோ, எவர் இவ்வுலகைப் படைக்கச் சொல்லி என்னை நியமித்திருக்கிறாரோ அந்த பகவானே இதற்கும் வழி காட்டட்டும் என்று நினைத்து, , பகவானை மனத்தால் துதித்தார்.

அப்போது, மிகவும் ஆச்சரியமாக, ப்ரும்மாவின் மூக்குத் துவாரத்திலிருந்து கட்டை விரல் அளவுள்ள ஒரு வெண்மை நிற வராகம் வெளி வந்தது. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஆகாயத்தில் ஒரு யோஜனை தூரத்திற்கு வளர்ந்தது.

மரீசி முதலிய அந்தணர்கள், ஸனகாதி முனிவர்கள், மனு, ப்ரும்மா அனைவரும்‌ பெருகிய வராக உருவத்தைக் கண்டு யாராயிருக்கும் என்று தீவிரமாகச் சிந்தித்தனர். இந்த ப்ராணி யார்? எதற்காக வந்தது? என்றெல்லாம் யோசித்தனர்.

ப்ரும்மாவின் முகத்திலிருந்தே வேதங்கள் தோன்றின. அவ்ரது முகத்திலிருந்து தோன்றிய வராகமும் வேத ஸ்வரூபமான இறைவனே.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Tuesday, 12 March 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 121

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 

ஸ்லோகம் - 91

பா⁴ர ப்⁴ருத் கதி²தோ யோகீ³ 
யோகீ³ஸ²ஸ் ஸர்வ காமத³:|
ஆஸ்²ரமஸ் ஸ்²ரமண: க்ஷாமஸ் 
ஸுபர்ணோ வாயு வாஹந:||

  • 851. பா⁴ர ப்⁴ருத் - பாரத்தை, சுமையைத் தாங்குபவர். ஆதிசேஷா எனப்படும் பாம்பின் வடிவில் பூமியின் பாரத்தை சுமந்தவர். பகவான் பூமியின் உடல் எடையை வெறுமனே சுமக்காமல், பிரபஞ்சத்தின் செயல்களை திறமையாக, ஒழுங்கான முறையில், பொருத்தமான இயற்கை விதிகளை நிறுவி பராமரிப்பதன் மூலம் முழு சுமையையும் சுமக்கிறார்.
  • 852. கதி²தோ -  வேதங்களில் சொல்லப்பட்டவர். அனைவராலும் விவரிக்கப்படுபவர். வேதம் போன்ற அனைத்து சாஸ்திரங்களாலும் அவர் ஒருவரே இறுதியான பரமாத்மாவாக அறிவிக்கப்படுகிறார். அனைத்து வேதங்களாலும் அவர் விவரிக்கப்பட்டு நீண்ட காலமாகப் பேசப்படுகிறார்.
  • 853. யோகீ³ - சாமர்த்தியம் படைத்தவர். அனைத்து உயிரினங்களுடனும் முழுமையான ஒற்றுமையுடன் இருப்பவர். ஒன்றாகச் செல்லாத விஷயங்களை ஒன்றிணைப்பதில் அவர் ஒரு தனித்துவமான மகத்துவம் பெற்றவர். ஞானம் அல்லது அறிவின் மூலம் மட்டுமே பெறக்கூடியவர். சுயக்கட்டுப்பாட்டை தனக்குள் எப்பொழுதும் பராமரித்து வருகிறார்.
  • 854. யோகீ³ஸ²ஸ் - யோகியர் தலைவர். எல்லா யோகிகளிலும் முதன்மையானவர்.
  • 855. ஸர்வ காமத³ஹ - எல்லா விருப்பங்களையும் தருபவர். அனைத்து செயல்களுக்கும் அனுசரிப்புகளுக்கும் பலனைத் தரக்கூடியவர். தனது பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் எல்லா நேரங்களிலும் நிறைவேற்றுகிறார்.
  • 856. ஆஸ்²ரமஸ் - அடியார்களின் நினைவு பிறவிதோறும் தொடர்ந்து இருந்து வருமாறு செய்பவர். வனத்தின் நடுவில் உள்ள துறவு இல்லம் போல, சம்சார வனத்தில் அலைந்து திரியும் சிரமத்திற்கு ஆளான பயணிகளுக்கு அமைதியும் ஆறுதலும் அளிக்கும் இடமாக அவர் இருக்கிறார். 
  • 857. ஸ்²ரமண - யோகத்தின் நினைவு பிறவிதோறும் தொடர்ந்து இருந்து வருமாறு செய்பவர். பாகுபாடான ஞானத்தைப் பயன்படுத்தாத அனைவரையும் அவர் துன்புறுத்துகிறார். விவேகமற்றவர்களை துன்புறுத்துகிறார்.
  • 858. க்ஷாமஸ் - திறமையுள்ளவனாகச் செய்பவர். அவர் அனைத்து உயிரினங்களின் வீழ்ச்சியையும் கொண்டு வருகிறார். அனைத்து உயிரினங்களையும் அவற்றின் தற்போதைய வடிவத்திற்கு முன்பு இருந்த நிலைக்குக் குறைக்கிறார். 
  • 859. ஸுபர்ணோ - தாண்ட உதவுபவர். அழகான இறக்கைகளை உடையவர். யோகினருக்கு சம்சாரக் கடலைக் கடக்க உதவுபவர். எல்லாவற்றையும் சுற்றிச் செல்லும் திறனைக் கொடுப்பவர். எல்லாவற்றையும் வாழவும் செழிக்கவும் செய்பவர். பச்சை துளசி, இலைகள் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்டவர்.
  • 860. வாயு வாஹநஹ - மேல் எழச் செய்பவர். வாயுவை இயக்குவிப்பவர். காற்றை ஓட்டவும், அனைத்து உயிரினங்களையும் சுமந்து, அனைத்து உயிர் சக்திகளையும் தாங்குகிறார். வாயுவை உயிர் வாழும் வேலையைச் செய்ய வைக்கிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.58

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.58
 
யதா³ ஸம் ஹரதே சாயம் 
கூர்மோங்கா³ நீவ ஸர்வஸ²:|
இந்த்³ரியாணீந் த்³ரியார் தே²ப்⁴யஸ்
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா||

  • யதா³ - எப்போது 
  • ஸம் ஹரதே - இழுத்துக் கொள்கிறது 
  • ச - மேலும்  
  • அயம் - அது 
  • கூர்ம - ஆமை  
  • அங்கானி - அங்கங்கள் 
  • இவ - போல  
  • ஸர்வஸ²ஹ - சேர்த்து 
  • இந்த்ரியாணி - புலன்கள் 
  • இந்த்³ரிய அர்தே²ப்⁴யஸ் - புலனுகர்ச்சிப் பொருட்களிலிருந்து  
  • தஸ்ய - அவனது 
  • ப்ரஜ்ஞா - உணர்வு 
  • ப்ரதிஷ்டி²தா - நிலைபெற்றது

ஆமையானது, அங்கங்களை சேர்த்து இழுத்துக் கொள்கிறதை போல, எவனொருவன், புலனுகர்ச்சிப் பொருட்களிலிருந்து, புலன்களை அடக்கிக் கொள்கிறானோ, அவன் பக்குவ உணர்வில், நிலை பெற்றவனாவான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.11

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.11

நமந்தி யத் பாத³ நிகேத மாத்மந:
ஸி²வாய ஹாநீய த⁴நாநி ஸ²த்ரவ:|
கத²ம் ஸ வீர: ஸ்²ரிய மங்க³ து³ஸ்த் யஜாம்
யுவை ஷதோத் ஸ்ரஷ்டு மஹோ ஸஹா ஸுபி⁴:||

  • ஸ²த்ரவ - விரோதிகள்
  • ஆத்மநஹ -  தங்களுடைய
  • ஸி²வாய - நன்மையின் பொருட்டு
  • த⁴நாநி - பெரும் ஸம்பத்தை
  • ஹாநீய - கொணர்ந்து
  • யத் பாத³ நிகேதம் - எந்த பரீக்ஷித்தின் பாதங்களில் அர்ப்பணம் செய்து
  • நமந்தி - வணங்குகிறார்களோ
  • ஹ - ஆச்சரியம்
  • வீரஸ் யுவை - வீரனும், யௌவனத்தை உடையவனுமான
  • ஸ - பரீக்ஷித் என்ற அரசன்
  • அங்க³ - ஹே சூத மஹரிஷே!
  • கத²ம் - ஏன்
  • து³ஸ்த் யஜாம் ஸ்²ரியம் - எளிதில் விடுவதற்கு முடியாததான ஐஸ்வர்யத்தை
  • அஸுபி⁴ஹி ஸஹ - தனது பிராணன்களோடு கூட
  • உஸ்ரஷ்டும் ஏவத - விடுவதற்கு இச்சித்தானே
  • அஹோ - அது ஆச்சரியம் அன்றோ!

ஸூத புராணிகரே! பகைவர்களும் தங்கள் தங்கள் நலனைக் கருத்தில் கொண்டு, உயர்ந்த பொருட்களைக் காணிக்கையாகக் கொணர்ந்து, பரீக்ஷித்தின் திருவடிகளில் வைத்து வணங்குகிறார்கள். அவன் வீரம் நிறைந்தவன், இளைஞனும்கூட! அவ்வாறிருக்க, துறத்தற்கரிதான பொன்னாசையையும், தனது உயிரையும் கூட விட்டொழிக்க எண்ணினானே. இதுவன்றோ வியப்பு?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்