About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 6 December 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.19

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.19 

ய ஏநம் வேத்தி ஹந்தாரம் 
யஸ்² சைநம் மந்யதே ஹதம்|
உபௌ⁴ தௌ ந விஜா நீதோ 
நாயம் ஹந்தி ந ஹந்யதே||

  • ய - எவனொருவன் 
  • ஏநம் - இந்த ஆத்மாவை 
  • வேத்தி - அறிபவர் 
  • ஹந்தாரம் - கொல்பவன் 
  • யஸ்² - எவனொருவன் 
  • ச - மேலும் 
  • ஏநம்-இந்த 
  • மந்யதே - எண்ணுகிறான் 
  • ஹதம் - கொல்லப்படுகின்றது 
  • உபௌ⁴ - இருவருமே 
  • தௌ - அந்த 
  • ந - இல்லை 
  • விஜா நீதோ - அறிவு 
  • ந - என்றுமில்லை 
  • அயம் - இந்த ஆத்மா 
  • ஹந்தி - கொலை செய்வதோ 
  • ந - இல்லை 
  • ஹந்யதே - கொல்லப்படுவதோ

எவன் ஓருவன் இந்த ஆத்மாவை கொல்பவனாக அறிகிறானோ, எவன் ஓருவன் இந்த ஆத்மா கொல்லப்படுகின்றது என்று எண்ணுகிறானோ, அந்த இருவருமே, அறிவில்லாதவர்கள். இந்த ஆத்மா கொல்லப்படுவதோ, கொலை செய்வதோ இல்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.17

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.17

தா⁴ந் வந்தரம் த்³வாத³ ஸ²மம் 
த்ரயோ த³ஸ²ம மேவ ச|
அபாய யத் ஸுராநந் யாந் 
மோஹிந்யா மோஹ யந் ஸ்த்ரியா||

  • தா⁴ந் வந்தரம் - தந்வந்தரி ஸ்வரூபம்
  • த்³வாத³ ஸ²மம் - பன்னிரண்டாவதான அவதாரம்
  • மோஹிந்யா - மோஹிநீ என்ற
  • ஸ்த்ரியா - பெண் உருவத்தால்
  • அந்யாந் மோஹ யந் - அசுரர்களை மோஹத்தை அடைந்தவர்களாக செய்து
  • ஸுராந் - தேவர்களை
  • அபாய யத் - அமிர்தத்தை உண்ணச் செய்தார்
  • த்ரயோ த³ஸ²ம் ஏவ ச - என்பது பதிமூன்றாவதான அவதாரம்

பன்னிரண்டாவது திருவவதாரம் 'தந்வந்தரி'. பதிமூன்றாவதாக 'மோஹிநீ' என்ற பெண்ணுரு தாங்கி, அசுரர்களை மயக்கி, அமர்களுக்கு அமுதத்தை வழங்கினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.17

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.17

ஸ ச ஸர்வ கு³ணோ பேத:
கௌஸல்யா நந்த³ வர்த⁴ந:|
ஸமுத்³ர இவ கா³ம்பீ⁴ர்யே
தை⁴ர்யேண ஹிம வாநிவ||

  • ஸ - அவர் 
  • கௌஸல்யா நந்த³ வர்த⁴நஹ - கௌசல்யைக்கு ஆனந்தத்தை வ்ருத்தி செய்பவர்
  • ச -  மேலும்
  • ஸர்வ கு³ணோ பேதஹ -  ஸமஸ்த நற்குணங்களோடு கூடினவர்
  • கா³ம்பீ⁴ர்யே - கம்பீரத்தில்
  • ஸமுத்³ர -  ஸமுத்ரம்
  • இவ -   போன்றவர்
  • தை⁴ர்யேண -  தைரியத்தில்
  • ஹிம வாந் -  இமயமலை
  • இவ -  போன்றவர்

கௌசல்யையின் மகிழ்ச்சியை அதிகரிப்பவரும், உன்னதக் குணங்கள் அனைத்தையும் கொண்டவருமான அவர், அளவற்ற ஆழம் கொண்ட பெரும் கடலைப் போல, கம்பீரமிக்கவராகவும், ஹிமவானை (இமய மலையைப்) போன்ற உறுதி (தைரியம்) கொண்டவராகவும் இருக்கிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - பெரியாழ்வார் திருமொழி - 1 ம் பத்து - 5 ம் திருமொழி அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - 11 பாசுரங்கள்
திவ்ய ப்ரபந்தம் - 64 - 74

தலையை நிமிர்த்தி முகத்தை 
அசைத்து ஆடுதல் - செங்கீரைப் பருவம்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

செங்கீரை பருவம் என்பது குழந்தைகள் ஒரு காலை மடக்கி, மறுகாலை நீட்டி, இரு கைகளையும் தரையில் ஊன்றி, தலையை நிமிர்த்தி, முகத்தை அசைத்து ஆடச் சொல்லும் பருவம். குழந்தைகள் ஐந்து மாத தவழும் பருவத்தில் கை கால்களை அசைத்து ஆடும் ஒரு வகையான நடனம். 


கண்ணன் இரு கைகளையும் இரண்டு முழந்தாள்களையும் தரையில் ஊன்றிக் கொண்டு தலையை நிமிர்த்தி அசைந்து விளையாடுகிறான். இதில் மயங்கினாள் யசோதை!' அழகனே! இன்ப ஊற்றாக அமையும் அமுதே! எனக்காக ஒரே ஒரு முறை தலையசைத்து விளையாடிக் காட்டு' என்று வேண்டுகிறாள் அவள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்