About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 13 November 2023

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.9

பு³த்³தி⁴மாந் நீதிமாந் வாக்³மீ 
ஸ்²ரீமாந் ஸ²த்ரு நிப³ர் ஹண:।
விபுலாம் ஸோ மஹாபா³ஹு: 
கம்பு³ க்³ரீவோ மஹா ஹநு:॥ 

  • பு³த்³தி⁴மாந் - புத்திமான்
  • நீதிமாந் - நீதி உடையவர்
  • வாக்³மீ - வாக்கு சாமர்த்தியம் உள்ளவர்
  • ஸ்²ரீமாந் - ஐஸ்வர்யம் உடையவர்
  • ஸ²த்ரு நிப³ர் ஹணஹ - சத்துருக்களை அழிப்பவர்
  • விபுலாம் ஸோ - உயர்ந்த தோள்களை உடையவர்
  • மஹாபா³ஹுஹு - நீண்ட கைகளை உடையவர்
  • கம்பு³ க்³ரீவோ - சங்கு போன்ற கழுத்தை உடையவர்
  • மஹா ஹநுஹு - தசைப்பற்று உள்ள கன்னங்கள் உள்ளவர்

அவர் புத்திமானாகவும், நீதிமானாகவும், நா நயம் மிக்கவராகவும், எதிரிகளை அழிப்பவராகவும், விரிந்த தோள்களையும், நீண்ட கைகளையும், கழுத்தில் மூன்று சுருக்கங்களையும் (ரேகைகளையும்), உயர்ந்த தாடைகளையும் (பருத்த கன்னங்களையும்) கொண்டவராகவும் இருக்கிறார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 56 - பெரியாழ்வார் திருமொழி - 1.4.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் – 56 - வித்தகன் வேங்கட வாணன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - நான்காம் திருமொழி - மூன்றாம் பாசுரம்

சுற்றும் ஒளி வட்டம்* சூழ்ந்து சோதி பரந்தெங்கும்*
எத்தனை செய்யிலும்* என் மகன் முகம் நேரொவ்வாய்*
வித்தகன் வேங்கட வாணன்* உன்னை விளிக்கின்ற*
கைத்தலம் நோவாமே* அம்புலீ! கடிதோடி வா!

  • சுற்றும் - நாற்புறமும்
  • ஒளி - ஒளி பொருந்திய 
  • வட்டம் - மண்டலமானது எப்போதும்
  • சூழ்ந்து - சுழன்று
  • எங்கும் - எல்லாத் திசைகளிலும்
  • சோதி பரந்து - ஒளி நிரம்பி இருக்குமாறு
  • எத்தனை செய்யிலும் - உன்னை எவ்வளவு அழகு செய்து கொண்டாலும்
  • என் மகன் - என் மகனான கண்ணபிரானுடைய 
  • முகம் - திருமுக மண்டலத்துக்கு
  • நேர் ஒவ்வாய் - பூர்ணமாக ஒப்பாக மாட்டாய்
  • வித்தகன் - ஆச்சர்யப்படத் தக்கவனாய் 
  • வேங்கடம் - திருவேங்கட மலையிலே 
  • வாணன் - நின்று கொண்டிருக்கும் இக்கண்ணபிரான்
  • உன்னை விளிக்கின்ற - உன்னை அழைக்கின்றான்
  • கை தலம் - அவன் திருக்கைகள்
  • நோவாமே - நோகாதபடி
  • அம்புலி - சந்திரனே!
  • கடிது ஓடி வா - சீக்கிரமா ஓடி வா

சந்திரனே! உன் வட்டமான அழகிய முகத்திலிருந்து சிதறுகின்ற குளிர்ந்த வெண்கதிர்களின் ஒளியானது, இவ்வுலகம் முழுதும் விரவி ஒளி வீசுபவனாய் எத்தனை அழகாக நீ இருக்க முயன்றாலும் அவை எல்லாம் என் மகனின் அழகிய திருமுகத்திற்கு முன் எக்காலத்திலும் ஈடாக முடியாது. வித்தகர்க்கு எல்லாம் வித்தகன், தூய ஞானத்தின் வடிவானவன்; மலைகளிலே புனிதமான ஆச்சர்யமான வேங்கடமலையில் நிற்கின்ற திருக்கோலத்துடன் வாழ்கின்ற வேங்கடவன் உன்னை எத்துனை காலமாய் அழைக்கின்றான். அச்சிறு பாலகனின் பச்சிளங்கைகளில் வலி தோன்றும் முன்னே விரைந்தோடி வந்து அவனுடன் விளையாடுவாயாக', என்று யசோதை அன்னை நிலவிடம் கூறுகிறாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 015 - திருச்சேறை 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:||  

||015. திருச்சேறை|| 
||பஞ்ச ஸார க்ஷேத்ரம் - கும்பகோணம்||
||பதினைந்தாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 13 பாசுரங்கள்

001. திருமங்கையாழ்வார் - 13 பாசுரங்கள் 
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) - 11 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 1578 - 1587 - ஏழாம் பத்து - நான்காம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1853 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - 1 பாசுரம்

2. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2707 - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (35)

3. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2772 - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (60)

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி 

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
சென்று சென்று செல்வம் செருக்குவார் வாயில் தொறும்*
நின்று நின்று தூங்கும் மட நெஞ்சமே இன் தமிழைக்*
கூறைக்கும் சோற்றுக்கும் கூறாதே பேறு ஆகச்*
சேறைக்கு நாயகன் பேர் செப்பு|

  • செல்வம் செருக்குவார் வாயில்தொறும் - செல்வத்தினால் இறுமாப்புக் கொண்டவரது வீட்டு வாசல்கள் தோறும்
  • சென்று சென்று - போய்ப் போய்
  • நின்று நின்று - அங்கங்கே நெடு நேரம் நின்று
  • தூங்கும் - சோர்வை அடைகின்ற
  • மடம் - அறியாமையை உடைய
  • நெஞ்சமே - எனது மனமே!  நீ
  • இன் தமிழை - இனிய தமிழ்ப் பாடலை
  • கூறைக்கும் - வஸ்திரத்தின் பொருட்டும்
  • சோற்றுக்கும் - சோற்றின் பொருட்டும்
  • கூறாது - மநுஷ்யரைப் பாடாமல்
  • பேறு ஆக - முத்திப் பயன் கை கூடும்படி
  • சேறைக்கு நாயகன் பேர் செப்பு - திருச்சேறை என்னும் திவ்ய ஸ்தலத்திற்குத் தலைவனான எம்பெருமானது திருநாமத்தைப் பாடுவாயாக

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 65

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:||  

கிருஷ்ணருக்கு ருக்மிணியின் தூது|

நடந்ததைக் கேட்டு ருக்மிணி மனம் நொந்தாள். அல்லும் பகலும் அவள் கிருஷ்ணனைப் பற்றிய கனவு கண்டு கொண்டு இருந்தாள். நாரதர் விவரித்த கிருஷ்ணரின் அழகு, குழந்தையாக இருக்கும் போதே அவர் செய்த பல வீரச் செயல்கள், எல்லாரையும் அடிமை கொண்ட அவருடைய மோகனச் சிரிப்பு, தன்னை அடிமை கொண்ட அவருடைய பல சிறந்த பண்புகள் இவற்றை எல்லாம் அவள் நினைவு கூர்ந்தாள். இப்பொழுது என்ன செய்வது? இரவெல்லாம் தூங்காமல் இதைப் பற்றி சிந்தனையாகவே இருந்தாள். காலையில் ஒரு முடிவுக்கு வந்தாள். 


"எனக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. நான் அவரை நேசிக்கிறேன். அவரே என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று அவருக்குச் செய்தி அனுப்ப வேண்டும். அவரிடம் சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றும் கை விடுவதில்லை என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். வெட்கப்பட்டுப் பலன் இல்லை. இந்த ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்படி அவருக்கு நான் செய்தி சொல்லி அனுப்புவேன். அப்படி அவர் என்னைக் காப்பாற்றா விட்டால் நான் என்னை மாய்த்துக் கொள்வேன். வேறு யாரையும் திருமணம் செய்த கொள்ள ஒருகாலும் இணங்க மாட்டேன்" என்று முடிவுக்கு வந்தாள்.

தனக்கு தெரிந்த நம்பகமான வயது முதிர்ந்த அந்தணருக்கு சொல்லி அனுப்பினாள். தன் துன்பங்களை அவரிடம் சொன்னாள். அந்த அந்தணர் ருக்மிணியைத் தன் மகளைப் போல நேசித்தார். அவர் உடனேயே துவாரகை செல்ல ஒப்புக் கொண்டார். துவாரகை அடைந்ததும் அவர் வாயில் காவலர்களிடம் தான் விதர்ப்ப தேசத்திலிருந்து ஒரு முக்கியமான காரியமாக வந்திருப்பதாக சொன்னார். உடனயே அவர்கள் அவனைக் கிருஷ்ணனின் மாளிகைக்கு அழைத்துச் சென்றார்கள். கிருஷ்ணர் ஒரு தங்கச் சிம்மாசனத்தில் வீற்றிருந்தார்.

பகவனைப் பார்த்த ஆனந்தத்தில் அந்தணரின் வாயிலிருந்து ஒரு வார்த்தைக் கூட வரவில்லை. கிருஷ்ணரின் அழகைத் தம் கண்களால் பருகிக் கொண்டு, சிலை போல நின்றார். கிருஷ்ணர் பகவான் ஆனபோதிலும் ஒரு சாதாரண மனிதனைப் போல தான் நடந்துக் கொண்டார். அவர் எழுந்து நின்று அந்தணரைச் சிம்மாசனத்தில் உட்காரும்படி செய்தார். பிறகு அவரை எல்லோரும் பூஜிப்பது போல தாமும் பூஜித்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்