About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 5 November 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.7 

கார்பண்ய தோ³ஷோ பஹத ஸ்வபா⁴வ: 
ப்ருச்சா²மி த்வாம் த⁴ர்ம ஸம்மூட⁴ சேதா:|
யச் ஸ்²ரேய: ஸ்யாந் நிஸ்²சிதம் ப்³ரூஹி தந்மே 
ஸி²ஷ்ய ஸ்தே ஹம் ஸா²தி⁴ மாம் த்வாம் ப்ரபந்நம்||

  • கார்பண்ய - கருமித்தனம் 
  • தோ³ஷ - பலவீனம் 
  • உபஹத - தாக்கப்பட்டு 
  • ஸ்வபா⁴வஹ - குணங்கள் 
  • ப்ருச்சா²மி - நான் வினவுகிறேன் 
  • த்வாம் - உம்மிடம் 
  • த⁴ர்ம - தர்மம் 
  • ஸம்மூட⁴ - குழம்பி 
  • சேதாஹ - இதயத்தில் 
  • யத் - எதை 
  • ஸ்²ரேயஸ் - சாலச் சிறந்தது 
  • ஸ்யாத் - ஆகும் 
  • நிஸ்²சிதம் - நிச்சயமாக 
  • ப்³ரூஹி - கூறுவீராக 
  • தத் - அதை 
  • மே - எனக்கு 
  • ஸி²ஷ்ய - சீடன் 
  • தே - உமது 
  • அஹம் - நான் 
  • ஸா²தி⁴ - அறிவுறுத்துங்கள் 
  • மாம் - எனக்கு 
  • த்வாம் - உம்மிடம் 
  • ப்ரபந்நம் - சரணடைந்தேன்

இதயத்தில், கருமித்தன குணங்களின் பலவீனத்தால் தாக்கப்பட்டு, அறம் இன்னது என்றுணராமல் கடமையில் குழம்பம் அடைந்து, உம்மிடம் வினவுகிறேன். எது எனக்கு சாலச் சிறந்தது ஆகும்? எனக்கு அதை கூறுவீராக. நான் உமது சீடனாக, உம்மிடம் சரணடைந்தேன். எனக்கு அறிவுறுத்துங்கள். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.5

ஏதந்நா நாவதா ராணாம் 
நிதா⁴நம் பீ³ஜமவ் யயம்|
யஸ்யாம் ஸா²ம் ஸே²ந ஸ்ருஜ் யந்தே 
தே³வ திர் யங் நராத³ய:||

  • ஏதந் - இந்த ஸ்வரூபமானது
  • நா நாவதா ராணாம் - பலவிதமான அவதாரங்களுக்கும்
  • நிதா⁴நம் - இருப்பிடமாகும்
  • பீ³ஜம் - காரணமாகும்
  • அவ்யயம் - அழிவற்றதும்
  • யஸ்ய - எந்த பரம புருஷனுடைய
  • அம்ஸா²ம் ஸே²ந - அம்ஸமான பிரம்மா, அந்த பிரம்மாவின் அம்ஸமான மரீசி முதலானவர்களால்
  • தே³வ திர் யங் நராத³யஹ - தேவன் மனிதன் மிருகம் முதலானவர்கள்
  • ஸ்ருஜ் யந்தே - சிருஷ்டிக்கப்படுகின்றனர்

ஆதிநாராயண ஸ்வரூபமாகிய இந்த விராட் புருஷ அவரதாரம், மற்ற எல்லா அவதாரங்களுக்கும் கருவூலம். எல்லா அவதாரங்களும் தோன்றுவதற்கு அழிவற்ற வித்து. இந்த விராட் ரூபத்தின் அம்சமாயுள்ளவர் பிரும்மதேவர். அந்த பிரும்ம தேவரின் அம்சமானவர்கள் மரீசி முதலிய பிரஜாபதிகள். அந்த பிரஜாபதிகளால் தேவர்கள், மனிதர்கள், விலங்குகள் முதலானவர்கள் தோற்றுவிக்கப்பட்டனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.5

ஏத தி³ச்சா²ம் யஹம் ஸ்²ரோதும் 
பரம் கௌதூ ஹலம் ஹி மே।
மஹர் ஷே த்வம் ஸமர் தோ²ஸி 
ஜ்ஞாது மேவம் வித⁴ம் நரம்॥

  • ஏதத் - இதை
  • ஸ்²ரோதும் - அறிந்து கொள்ள
  • அஹம் -  நான்
  • இச்சாமி - ஆசைப்படுகிறேன்
  • ஹி - ஏனெனில்
  • மே - என்
  • கௌதூ ஹலம் - ஆசை
  • பரம் - மிகவும் அதிகம்
  • ஏவம் வித⁴ம் - இம்மாதிரியான
  • நரம் - மானிடனை
  • ஜ்ஞாதும் -  உள்ளபடி அறிய
  • மஹர் ஷே - மஹரிஷியே
  • த்வம் -  தேவரீர்
  • ஸமர்தோ² - அதற்குத் தகுந்த யோகியதை உள்ளவராய்
  • அஸி - இருக்கிறீர்

"மஹரிஷி நாரதரே!, இத்தகைய மனிதனை நீர் அறிய வல்லவர் என்பதால், இவை யாவற்றையும் உம்மிடம் இருந்து கேட்க நான் பேராவல் கொண்டுள்ளேன்" என்று கேட்டார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 53 - பெரியாழ்வார் திருமொழி - 1.3.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 53 – என்றும் துன்பம் இல்லை 
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - பத்தாம் பாசுரம்

தரவு கொச்சகக் கலிப்பா 

வஞ்சனையால் வந்த* பேய்ச்சி முலை உண்ட*
அஞ்சன வண்ணனை* ஆய்ச்சி தாலாட்டிய*
செஞ்சொல் மறையவர் சேர்* புதுவைப் பட்டன் சொல்*
எஞ்சாமை வல்லவர்க்கு* இல்லை இடர் தானே! (2)

  • வஞ்சனையால் வந்த - வஞ்சக எண்ணத்தோடு 
  • வந்த - தாய் வேடத்தில் வந்த
  • பேய்ச்சி - பேயான பூதனையினுடைய
  • முலை உண்ட - தாய்ப்பாலை உண்ட
  • அஞ்சனம் வண்ணனை - மை போன்ற நிறத்தை உடையவனான கண்ணபிரானை
  • ஆய்ச்சி - யசோதைப் பிராட்டி
  • தாலாட்டிய - தாலாட்டின விதத்தை
  • செம் சொல் - சிறந்த சொற்கள் நிறைந்த
  • மறையவர் - வேதங்களில் வல்லவரான ஸ்ரீ வைஷ்ணவர்கள்
  • சேர் - நித்ய வாசம் பண்ணப் பெற்ற
  • புதுவை - ஸ்ரீ வில்லிபுத்தூரில் அவதரித்த
  • பட்டன் - பெரியாழ்வார் அருளிச் செய்த 
  • சொல் - இப்பாசுரங்களை
  • எஞ்சாமை - குறைவில்லாமல்
  • வல்லவர்க்கு - சொல்பவர்களுக்கு
  • இடர் இல்லை - துன்பம் ஒன்றுமில்லையாம் 

வஞ்சகமே வடிவாக வந்த பூதனையின் விஷமேறிய முலைப்பாலை அமுது செய்தவனும், மை போன்ற நிறத்தை உடையவனுமான கண்ணனை, தாலாட்டிப் பாடிய வரிகளைத் தான், வேதமோதுவோர் செழித்தோங்கிய ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த பெரியாழ்வார் அருளிச் செய்திருக்கிறார். இப்பாசுரங்களை குறையில்லாமல் ஓத வல்லவர்களுக்கு ஒரு துன்பமும் இல்லையாம்.

அடிவரவு: மாணி உடை என்* சங்கின் எழில் ஓத* கானார் கச்சு மெய்* வஞ்சனை - தன்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்