About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 4 November 2023

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.4

பஸ்²யந்த் யதோ³ ரூப மத³ப்⁴ர சக்ஷுஷா
ஸஹஸ்ர பாதோ³ரு பு⁴ஜாந நாத்³ பு⁴தம்|
ஸஹஸ்ர மூர்த⁴ ஸ்²ரவணாக்ஷி நாஸிகம்
ஸஹஸ்ர மௌல் யம்ப³ ரகுண்ட³ லோல் லஸத்||

  • ஸஹஸ்ர - ஆயிரக் கணக்கான
  • பாதோ³ரு பு⁴ஜாந நாத்³ பு⁴தம் - கால்கள், தொடைகள், புஜங்கள், முகங்கள் இவைகளால் மிக அற்புதமானதும்
  • ஸஹஸ்ர - ஆயிரக் கணக்கான
  • மூர்த⁴ ஸ்²ரவணாக்ஷி நாஸிகம் - தலைகள், காதுகள், கண்கள், மூக்குகள் உள்ளதும்
  • ஸஹஸ்ர - ஆயிரக் கணக்கான
  • மௌல் யம்ப³ ரகுண்ட³ லோல் லஸத் - கிரீடங்கள், தலைப்பாகைகள், குண்டலங்கள் இவைகளால் பிரகாசிக்கின்றதுமான
  • யதோ³ ரூபம் - இந்த விராட் புருஷனின் ரூபத்தை
  • அத³ப்⁴ர சக்ஷுஷா - மிக விரிவான ஞானக் கண்களால்
  • பஸ்²யந்தி - யோகிகள் பார்க்கின்றனர்

அந்த விராட் திருவுருவம் - ஆயிரமாயிரம் திருவடிகள், தொடைகள், முகங்கள், ஆயிரமாயிரம் தலைகள், செவிகள், கண்கள், மூக்குகள் மற்றும் ஆயிரமாயிரம் கிரீடங்கள், ஆடைகள், குண்டலங்கள் ஆகியன கொண்டு விளங்கிற்று. இவ்வாறான அற்புதமான திருவுருவத்தை யோகிகள் தங்கள் ஞானக் கண்களால் காண்கின்றனர். அதாவது, எல்லாப் பொருள்களிலும் பரமாத்ம ஸ்வரூபத்தையே காண்கிறார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.4

ஆத்மவாந் கோ ஜிதக் ரோதோ⁴ 
த்³யுதி மாந் கோந ஸூயக:।
கஸ்ய பி³ப்⁴யதி தே³வாஸ்²ச 
ஜாதரோ ஷஸ்ய ஸம்யுகே³॥ 

  • ஆத்மவாந் -  தைரியம் உடையவன்
  • கோ -  எவன்
  • ஜிதக் ரோதோ⁴ -  கோபத்தை தன் வசப்படுத்தினவன்
  • த்³யுதி மாந் -  காந்தி உள்ளவன்
  • அந ஸூயகஹ - பொறாமை இல்லாதவன் 
  • கோ - எவன்
  • ஸம்யுகே³ - போரில்
  • ஜாத ரோ ஷஸ்ய -  கோபம் கொண்ட 
  • கஸ்ய -  எவனுக்கு
  • தே³வாஸ்²ச -  தேவர்கள் கூட 
  • பி³ப்⁴யதி -  நடுங்குகிறார்கள்

தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனும், கோபத்தை வென்றவனும், அறிவார்ந்தவனும், பொறாமையற்றவனும், கோபம் தூண்டப் பட்டால் தேவர்களையே பீதியைடையச் செய்பவனுமாக இருப்பவன் எவன்? 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 52 - பெரியாழ்வார் திருமொழி - 1.3.9

ஸ்ரீ:
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 52 - துர்க்கை தந்த பொருள்கள்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்

மெய் திமிரும் நானப்* பொடியொடு மஞ்சளும்*
செய்ய தடங் கண்ணுக்கு* அஞ்சனமும் சிந்துரமும்*
வெய்ய கலைப்பாகி* கொண்டுவளாய் நின்றாள்*
ஐயா! அழேல் அழேல் தாலேலோ* 
அரங்கத்தணையானே! தாலேலோ!

  • மெய் - திருமேனியிலே
  • திமிரும் - பூசத் தகுந்த
  • நானம் - கஸ்தூரி, கருப்பூரம், சந்தநம் முதலிய 
  • பொடியோடு - ஸூகந்தப் பொடிகளையும் 
  • மஞ்சளும் - மஞ்சள் பொடியையும்
  • செய்ய - சிவந்ததாய்
  • தட - விசாலமாயுள்ள
  • கண்ணுக்கு - கண்களில் சாத்த
  • அஞ்சனமும் - மையையும்
  • சிந்தூரமும் - திருநெற்றியில் சாத்த ஸிந்தூரத்தையும்
  • வெய்ய கலை பாகி - கொடிய ஆண் மானை வாஹனமாக உடைய துர்க்கையானவள்
  • கொண்டு - எடுத்துக் கொண்டு வந்து
  • உவளாய் நின்றாள் - பணிவன்புடன் நின்றாள்
  • ஐயா - ஸ்வாமியான கண்ணனே! 
  • அழேல் அழேல் தாலேலோ - அய்யனே அழாது கண்ணுறங்கு
  • அரங்கத்து - திருவரங்கத்திலே 
  • அணையானே - திருவனந்தாழ்வானைப் படுக்கையாக உடையவனே! 
  •  தாலேலோ! - கண்ணுறங்கு! 

திருமேனியில் பூசுவதற்க்காக வாசனை மற்றும் மஞ்சள் பொடிகளையையும், சிவந்து அகந்திருந்த கண்களுக்கு மையையும், நெற்றிக்கு இட சிந்தூரத்தையும் கொண்டு வந்து கண்ணனுக்கு அளிப்பதற்காக அதோ நிற்கிறாள் ஆண் மானை வாகனமாகக் கொண்ட துர்கா தேவி. பெருமானே, அழாதே, அழாதே, கண்ணுறங்கு, ஸ்ரீரங்கத்தில் பாம்பைப் படுக்கையாக உடையவனே கண்ணுறங்கு.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 014 - திருநறையூர் 6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||014. திருநறையூர்||
||நாச்சியார் கோயில் - கும்பகோணம்||
||பதிநான்காவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 111 - 4

திருமங்கையாழ்வார்
062. திவ்ய ப்ரபந்தம் - 1536 - பெரிய திருமொழி - 6.9.9
மறை ஆரும் பெரு வேள்விக்* கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்*
நிறை ஆர வான் மூடும்* நீள் செல்வத் திருநறையூர்*
பிறை ஆரும் சடையானும்* பிரமனும் முன் தொழுது ஏத்த*
இறை ஆகி நின்றான் தன்* இணை அடியே அடை நெஞ்சே|

063. திவ்ய ப்ரபந்தம் - 1537 - பெரிய திருமொழி - 6.9.10
திண் களக மதிள் புடை சூழ்* திருநறையூர் நின்றானை*
வண் களகம் நிலவு எறிக்கும்* வயல் மங்கை நகராளன்*
பண்கள் அகம் பயின்ற சீர்ப்* பாடல் இவை பத்தும் வல்லார்*
விண்கள் அகத்து இமையவர் ஆய்* வீற்றிருந்து வாழ்வாரே|

064. திவ்ய ப்ரபந்தம் - 1538 - பெரிய திருமொழி - 6.10.1
கிடந்த நம்பி குடந்தை மேவிக்* கேழல் ஆய் உலகை இடந்த நம்பி* 
எங்கள் நம்பி* எறிஞர் அரண் அழிய*
கடந்த நம்பி கடி ஆர் இலங்கை* உலகை ஈர் அடியால்*
நடந்த நம்பி நாமம் சொல்லில்* நமோ நாராயணமே|

065. திவ்ய ப்ரபந்தம் - 1539 - பெரிய திருமொழி - 6.10.2
விடம் தான் உடைய அரவம் வெருவச்* செருவில் முன நாள்* 
முன் தடந் தாமரை நீர்ப் பொய்கை புக்கு* மிக்க தாள் ஆளன்*
இடந்தான் வையம் கேழல் ஆகி* உலகை ஈர் அடியால்*
நடந்தானுடைய நாமம் சொல்லில்* நமோ நாராயணமே|

066. திவ்ய ப்ரபந்தம் - 1540 - பெரிய திருமொழி - 6.10.3
பூணாது அனலும்* தறுகண் வேழம் மறுக* 
வளை மருப்பை பேணான் வாங்கி* 
அமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன்*
பாணா வண்டு முரலும் கூந்தல்* ஆய்ச்சி தயிர் வெண்ணெய்*
நாணாது உண்டான் நாமம் சொல்லில்* நமோ நாராயணமே|

067. திவ்ய ப்ரபந்தம் - 1541 - பெரிய திருமொழி - 6.10.4 
கல் ஆர் மதிள் சூழ்* கச்சி நகருள் நச்சிப்* 
பாடகத்துள் எல்லா உலகும் வணங்க* இருந்த அம்மான்* 
இலங்கைக்கோன் வல் ஆள் ஆகம்* வில்லால் முனிந்த எந்தை* 
விபீடணற்கு நல்லானுடைய நாமம் சொல்லில்* நமோ நாராயணமே|

068. திவ்ய ப்ரபந்தம் - 1542 - பெரிய திருமொழி - 6.10.5
குடையா வரையால்* நிரை முன் காத்த பெருமான்* 
மருவாத விடை தான் ஏழும் வென்றான்* கோவல் நின்றான்* 
தென் இலங்கை அடையா அரக்கர் வீயப்* பொருது மேவி வெம் கூற்றம்*
நடையா உண்ணக் கண்டான் நாமம்* நமோ நாராயணமே|

069. திவ்ய ப்ரபந்தம் - 1543 - பெரிய திருமொழி - 6.10.6
கான எண்கும் குரங்கும்* முசுவும் படையா* 
அடல் அரக்கர் மானம் அழித்து நின்ற* வென்றி அம்மான்* 
எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதும் ஆய* திருமால் திருநாமம்*
நானும் சொன்னேன் நமரும் உரைமின்* நமோ நாராயணமே|

070. திவ்ய ப்ரபந்தம் - 1544 - பெரிய திருமொழி - 6.10.7
நின்ற வரையும் கிடந்த கடலும்* திசையும் இரு நிலனும்*
ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி* நின்ற அம்மானார்*
குன்று குடையா எடுத்த* அடிகளுடைய திருநாமம்*
நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன்* நமோ நாராயணமே|

071. திவ்ய ப்ரபந்தம் - 1545 - பெரிய திருமொழி - 6.10.8
கடுங் கால் மாரி கல்லே பொழிய* அல்லே எமக்கு என்று படுங்கால்* 
நீயே சரண் என்று* ஆயர் அஞ்ச அஞ்சா முன்*
நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி* நிரையைச் சிரமத்தால்*
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம்* நமோ நாராயணமே|

072. திவ்ய ப்ரபந்தம் - 1546 - பெரிய திருமொழி - 6.10.9
பொங்கு புணரிக் கடல் சூழ் ஆடை* நில மா மகள் மலர் மா மங்கை* 
பிரமன் சிவன் இந்திரன்* வானவர் நாயகர் ஆய*
எங்கள் அடிகள் இமையோர்* தலைவருடைய திருநாமம்*
நங்கள் வினைகள் தவிர உரைமின்* நமோ நாராயணமே|

073. திவ்ய ப்ரபந்தம் - 1547 - பெரிய திருமொழி - 6.10.10
வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று* நறையூர் நெடுமாலை*
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு* நம்பி நாமத்தை*
காவித் தடங் கண் மடவார் கேள்வன்* கலியன் ஒலி மாலை*
மேவிச் சொல்ல வல்லார் பாவம்* நில்லா வீயுமே|

074. திவ்ய ப்ரபந்தம் - 1548 - பெரிய திருமொழி - 7.1.1
கறவா மட நாகு* தன் கன்று உள்ளினால் போல்*
மறவாது அடியேன்* உன்னையே அழைக்கின்றேன்*
நறவு ஆர் பொழில் சூழ்* நறையூர் நின்ற நம்பி*
பிறவாமை எனைப் பணி* எந்தை பிரானே|

075. திவ்ய ப்ரபந்தம் - 1549 - ஏபெரிய திருமொழி - 7.1.2
வற்றா முதுநீரொடு* மால் வரை ஏழும்*
துற்று ஆக முன் துற்றிய* தொல் புகழோனே*
அற்றேன் அடியேன்* உன்னையே அழைக்கின்றேன்*
பெற்றேன் அருள் தந்திடு* என் எந்தை பிரானே|

076. திவ்ய ப்ரபந்தம் - 1550 - பெரிய திருமொழி - 7.1.3
தாரேன் பிறர்க்கு* உன் அருள் என்னிடை வைத்தாய்*
ஆரேன் அதுவே* பருகிக் களிக்கின்றேன்*
கார் ஏய் கடலே மலையே* திருக்கோட்டி ஊரே* 
உகந்தாயை* உகந்து அடியேனே|

077. திவ்ய ப்ரபந்தம் - 1551 - பெரிய திருமொழி - 7.1.4
புள் வாய் பிளந்த* புனிதா என்று அழைக்க*
உள்ளே நின்று* என் உள்ளம் குளிரும் ஒருவா!*
கள்வா!* கடல் மல்லைக் கிடந்த கரும்பே*
வள்ளால் உன்னை* எங்ஙனம் நான் மறக்கேனே?

078. திவ்ய ப்ரபந்தம் - 1552 - பெரிய திருமொழி - 7.1.5
வில் ஏர்* நுதல் நெடுங் கண்ணியும் நீயும்*
கல் ஆர் கடுங் கானம்* திரிந்த களிறே*
நல்லாய் நர நாரணனே!* எங்கள் நம்பி*
சொல்லாய் உன்னை* யான் வணங்கித் தொழும் ஆறே|

079. திவ்ய ப்ரபந்தம் - 1553 - பெரிய திருமொழி - 7.1.6
பனி ஏய் பரங் குன்றின்* பவளத் திரளே*
முனியே* திருமூழிக்களத்து விளக்கே*
இனியாய் தொண்டரோம்* பருகும் இன் அமுது ஆய கனியே* 
உன்னைக் கண்டு கொண்டு* உய்ந்தொழிந்தேனே|

080. திவ்ய ப்ரபந்தம் - 1554 - பெரிய திருமொழி - 7.1.7
கதியேல் இல்லை* நின் அருள் அல்லது எனக்கு*
நிதியே!* திருநீர்மலை நித்திலத் தொத்தே*
பதியே பரவித் தொழும்* தொண்டர் தமக்குக் கதியே* 
உன்னைக் கண்டுகொண்டு* உய்ந்தொழிந்தேனே|

081. திவ்ய ப்ரபந்தம் - 1555 - பெரிய திருமொழி - 7.1.8
அத்தா அரியே என்று* உன்னை அழைக்க*
பித்தா என்று பேசுகின்றார்* பிறர் என்னை*
முத்தே மணி மாணிக்கமே* முளைக்கின்ற வித்தே* 
உன்னை எங்ஙனம் நான் விடுகேனே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்