About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 2 November 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.4 

அர்ஜுந உவாச।
கத²ம் பீ⁴ஷ்ம மஹம் ஸங்க்²யே 
த்³ரோணம் ச மது⁴ ஸூத³ந| 
இஷுபி⁴: ப்ரதி யோத்ஸ் யாமி 
பூஜார் ஹாவரி ஸூத³ந||

  • அர்ஜுந உவாச - அர்ஜுநன் சொல்லுகிறான் 
  • கத²ம் - எப்படி 
  • பீ⁴ஷ்மம் - பீஷ்மர் 
  • அஹம் - நான் 
  • ஸங்க்²யே - போரில் 
  • த்³ரோணம் - துரோணர் 
  • ச - மேலும் 
  • மது ஸுதந - மது என்னும் அரக்கனைக் கொன்றவரே 
  • இஷுபி⁴ஃ - அம்புகளால் 
  • ப்ரதி யோத்ஸ் யாமி - எதிர்ப்பேன் 
  • பூஜா அர்ஹெள - பூஜைக்கு உரியவர்களை 
  • அவரி ஸூத³ந - எதிரிகளை அழிப்பவரே

அர்ஜுநன் கூறுகிறார்: மது என்னும் அரக்கனை கொன்றவரே! பூஜைக்கு உரியவர்களான பீஷ்மர், துரோணர் போன்றோரை இந்த போரில் எப்படி அம்புகளால் எதிர்த்து நிற்பேன். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.2

யஸ்யாம் ப⁴ஸி ஸ²யா நஸ்ய 
யோக³ நித்³ராம் விதந் வத:|
நாபி⁴ஹ் ரதா³ம் பு³ஜா தா³ஸீத்³
ப்³ரஹ்மா விஸ்²வ ஸ்ரு ஜாம் பதி:||

  • அம்ப⁴ஸி - ஜலத்தில்
  • ஸ²யா நஸ்ய - பள்ளி கொண்டிருப்பவரும்
  • யோக³ நித்³ராம் - யோக நித்ரையை
  • விதந் வதஹ - செய்கிறவராயும் உள்ள
  • யஸ்ய - எந்த வாஸுதேவனுடைய
  • நாபி⁴ஹ் ரதா³ம் பு³ஜாத்³ - நாபிக் கமலத்தில் இருந்து
  • விஸ்²வ ஸ்ரு ஜாம் பதிஹி - தக்ஷன், மரீசி முதலானவர்களின் பதியான
  • ப்³ரஹ்மா ஆஸீத்³து - பிரும்மா உண்டானாரோ

பிரளய கால ஜலத்தில் அநந்த பள்ளி கொண்டு, யோக நித்திரை புரியும் அந்த பகவான் வாசுதேவனுடைய தொப்புள் கொடியில் தோன்றிய தாமரை மலரினின்றும், உலகத்தைப் படைக்கும் தக்ஷன், மரீசீ முதலிய பிரஜாபதிகளுக்குத் தலைவராகிய பிரும்ம தேவர் தோன்றினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்


கோந் வஸ்மிந் ஸாம்ப்ரதம் லோகே 
கு³ணவாந் கஸ்²ச வீர்யவாந்।
த⁴ர்மஜ் ஞஸ்²ச க்ருதஜ் ஞஸ்²ச 
ஸத்ய வாக்யோ த்³ருட⁴ வ்ரத:॥ 

  • அஸ்மிந் லோகே - இந்த உலகில்
  • ஸாம்ப்ரதம் - இப்பொழுது
  • கு³ணவாந் - நேர்மை உடையவன்
  • கோந் -  எவன்
  • வீர்யவாந் ச - வீரியமுடையவனும் 
  • த⁴ர்மஜ்ஞஸ்² ச -  தர்மம் அறிந்தவரும்
  • க்ருதஜ்ஞஸ்² ச-  நன்றி அறிவு உள்ளவனும்
  • ஸத்ய வாக்யோ -   உண்மையையே பேசுபவனும் 
  • த்³ருட⁴ வ்ரதஹ -  விரதத்தில் உறுதி உடையவனும்
  • கஸ்² -  எவன்

இவ்வுலகில் தற்போது சிறந்த குணங்களால் நிறைந்தவனும், ஆற்றல் வாய்ந்தவனும், அறம் வழுவாதவனும், நன்றி அறிபவனும், வாய்மை பேசுபவனும், செயலுறுதி கொண்டவனுமாக இருப்பவன் எவன்? 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 50 - பெரியாழ்வார் திருமொழி - 1.3.7

ஸ்ரீ:
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 50 - திருமகள் அனுப்பிய திருத்துழாய் மாலை
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஏழாம் பாசுரம்

கானார் நறுந்துழாய்* கை செய்த கண்ணியும்* 
வானார் செழும் சோலைக்* கற்பகத்தின் வாசிகையும்*
தேனார் மலர் மேல்* திருமங்கை போத்தந்தாள்* 
கோனே! அழேல் அழேல் தாலேலோ* 
குடந்தைக் கிடந்தானே! தாலேலோ!

  • கான் ஆர் - காட்டில் வளர்ந்துள்ள
  • நறு துழாய் - மணம் மிக்க துளசியால்
  • கை செய்த - தொடுத்த
  • கண்ணியும் - மாலையையும்
  • வான் ஆர் - சுவர்க்க லோகத்தில் 
  • செழு - செழுமை தங்கிய
  • சோலை - சோலையாய்த் தழைத்த
  • கற்பகத்தின் - கல்ப வ்ருக்ஷத்தின் 
  • வாசிகையும் - பூக்களால் தொடுத்த மாலையையும்
  • தேன் ஆர் - தேன் நிறைந்துள்ள
  • மலர் மேல் - செந்தாமரை மலரில் உறைகின்ற 
  • திருமங்கை - பெரிய பிராட்டியார்
  • போத்தந்தாள் - அனுப்பினாள் 
  • கோனே - ஸர்வ ஸ்வாமியான கண்ணனே!
  • அழேல் அழேல் தாலேலோ! - அழாதே அழாதே
  •  தாலேலோ! - கண்ணுறங்கு! 
  • குடந்தை - திருக்குடந்தையிலே 
  • கிடந்தானே - உறங்கும் பிரானே!
  •  தாலேலோ! - கண்ணுறங்கு! 

தேன் நிறைந்த சிவப்புத் தாமரையில் உறைபவளான பெரிய பிராட்டி, காட்டில் உற்பத்தியான மணமுள்ள துளசியால் தொடுத்த மாலையையும், சுவர்க்க லோகத்தில் பசுமையாகவும் சோலையாகவும் தழைத்துக் கிடந்த கல்பக வ்ருக்ஷத்தின் பூக்களால் தொடுத்த நெற்றியில் அணிவதற்கு மாலையையும் கொடுத்து அனுப்பியிருக்கிறாள். இளவரசே! கண்ணா, அழாதே, அழாதே, கண்ணுறங்கு, திருக்குடந்தையில் சயனத்திருப்பவனே கண்ணுறங்கு.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்