About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 26 August 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.21

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.21 

ஹ்ருஷீகேஸ²ம் ததா³ வாக்யம்
இத³ம் ஆஹ மஹீபதே|
அர்ஜுந உவாச|
ஸேநயோ ருப⁴ யோர் மத்⁴யே
ரத²ம் ஸ்தா²பய மேச்யுத||

  • ஹ்ருஷீகேஸ²ம் - கண்ணனிடம்
  • இத³ம் வாக்யம் - இந்த வார்த்தைகளை 
  • ஆஹ - சொல்கிறான்
  • மஹீபதே - ராஜனே!
  • அர்ஜுந: உவாச - அர்ஜுநன் கூறினான் 
  • ஸேநயோ: - படைகளுக்கு 
  • உப⁴யௌ: - இரண்டு 
  • மத்⁴யே - நடுவே 
  • ரத²ம் - தேர் 
  • ஸ்தா²பய - தயவுசெய்து நிறுத்தும் 
  • மே - என்னுடைய 
  • அச்யுத - வீழ்ச்சியடையாதவரே 

கண்ணனிடம் இந்த வார்த்தைகளை சொல்கிறான். அர்ஜூனன் கூறுகிறார்: ராஜனே! கண்ணா! வீழ்ச்சியடையாதவரே! படைகளிரண்டுக்கும் நடுவே என் தேரை கொண்டு நிறுத்தும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
||ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.5

முநய: ஸாது⁴ ப்ருஷ்டோ ஹம்
ப⁴வத்³ பி⁴ர்லோக மங்க³ளம்।
யத் க்ருத: க்ருஷ்ண ஸம் ப்ரஸ்²நோ
யேநாத்மா ஸுப்ர ஸீத³தி॥

  • யேந - எந்த கேள்வினால்
  • ஆத்மா - எனது ஆத்மாவானது
  • ஸுப்ர ஸீத³தி - மிக மகிழ்ச்சி அடையுமோ
  • க்ருஷ்ண ஸம் ப்ரஸ்²நோ - க்ருஷ்ண பரமாத்மா விஷயமான கேள்வியானது
  • ப⁴வத்³ பி⁴ர் - உங்களால்
  • அஹம் ப்ருஷ்டோ - நான் கேட்கப்பட்டேன்
  • யத் க்ருதஹ் - எந்த க்ருஷ்ண கதையானது
  • முநயஸ் - மஹரிஷிகளே!
  • ஸாது⁴ - நல்லதும்
  • லோக மங்க³ளம் - உலக க்ஷேமத்தை கொடுக்கக் கூடியதாகவும் உள்ளதோ 

முனிவர்களே! ஸ்ரீ க்ருஷ்ணரைப் பற்றி நீங்கள் கேட்ட உத்தமமான கேள்வியினால் எனது மனம் மகிழ்கிறது. அந்த கேள்வி, உலகிற்கெல்லாம் நன்மையைத் தரக் கூடியது; நலத்தைச் செய்யப் போகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 36

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய|| 
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்|| 

||ஸ்லோகம் - 6||

அப்ரமேயோ ஹ்ருஷீகேஸ²: 
பத்³ம நாபோ⁴ அமரப்ரபு⁴:|
விஸ்²வ கர்மா மநுஸ் த்வஷ்டா 
ஸ்த²விஷ்ட²: ஸ்த²விரோ த்⁴ருவ:||

  • 46. அப்ரமேயோ - அறிவுக்கு எட்டாத பெருமைகளை உடையவர். அளவிட முடியாதவர். வரையறுக்க முடியாதவர், ஐந்து புலன்களால் உணர முடியாது.
  • 47. ஹ்ருஷீகேஸ²ஃ - இந்திரியங்களை அடக்கி ஆள்பவர். இந்திரியங்களின் இறைவன். சூரியன் மற்றும் சந்திரன் வடிவத்தில் மகிழ்ச்சியின் கதிர்களை பரப்புகிறவர்.
  • 48. பத்³மநாபோ⁴ - நாபியிலிருந்து நீண்ட தண்டையுடைய தாமரைப்பூ அழகன். பிரபஞ்சத்தின் ஆதாரமாக இருப்பவர். படைப்பாளியான பிரம்மாவின் இருப்பிடமாக அனைத்து படைப்புகளுக்கும் அவர் தான் அடிப்படைக் காரணம். தொப்புள் கொடி போன்ற ஒன்றால் தாங்கப்பட்ட அவரது நாபியிலிருந்து (தொப்புள்) பத்மம் (பிரபஞ்சம்) வெளிப்படுகிறது.
  • 49. அமரப் ரபு⁴ஹு - தேவர்கள் தலைவனாயிருந்து நிர்வாகம் செய்பவர்.
  • 50. விஸ்²வ கர்மா - உலக நடைமுறைகளைத் தானே செய்பவர்.
  • 51. மநுஸ் - மனதில் நினைத்த மாத்திரத்திலேயே உலக நியதிகளைச் செய்பவர். விஸ்வகர்மாவைப் போல அவர் தனது கருவிகளைக் கொண்டு உலகை உருவாக்கினார். அவர் தனது சிந்தனையால் மட்டுமே படைப்பை ஏற்படுத்துகிறார்.
  • 52. த்வஷ்டா - பெயர்கள், உருவ அமைப்புகள் முதலானவற்றைப் பாகுபாடு செய்பவர். அவதாரங்கள் எடுப்பவர். பிரளய காலத்தில் உலகைச் சுருக்கி தனக்குள் அடக்கிக் கொள்கிறார்.
  • 53. ஸ்த²விஷ்ட²ஸ் - மிகவும் பெரியவர். தனது விருப்பத்தின் பேரில் பிரம்மாண்டமான வடிவங்களை எடுப்பவர். (வராஹ அவதாரத்தில் உள்ள பெரிய பன்றி அல்லது வாமன அவதாரத்தில் திரிவிக்ரமைப் போல)
  • 54. ஸ்த²விரோ - எக்காலத்தும் நிலைத்திருப்பவர்.
  • 55. த்⁴ருவஹ - மாறாமல் நிலையாய் இருப்பவர். நேரம், இடம் முழுவதும் முழுமையாக இருக்கிறார். காலச் சக்கரத்தால் பாதிக்கப்படாத வயதுடையவர். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - 33

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

முப்பத்தி மூன்றாவது வார்த்தை

033. இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவானைப் போலே|

ஸ்ரீநாராயணர் முன்னிலையில் சாதி பேதம் கூடாது என உரைத்தது வைஷ்ணவம். ஸ்ரீராமாநுஜர் அதற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்.

இனி நம்பாடுவான் கதை.


108 திவ்ய தேசங்களில் திருக்குறுங்குடியும் ஒன்று. மகேந்திர மலை என்ற மலையை அடுத்து அமைந்துள்ள இவ்விடத்தில் எம்பெருமான், நின்ற நம்பி, இருந்த நம்பி, கிடந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி, மலைமேல் நம்பி என ஐந்து விதமாக எழுந்தருளியுள்ளார். வராக அவதாரம் எடுத்த பெருமாள் தன் உடலைக் குறுக்கிக் கொண்டதால் இத்தலத்திற்கு இப்பெயர்.

நம்பாடுவான் ஒரு வைணவ பக்தர். முனிக்கிராமம் என்ற ஊரைச் சேர்ந்த நம்பாடுவான், பாணர் குலத்தில் பிறந்தவர். தினந்தோறும் திருக்குறுங்குடிக்குச் சென்று, அங்குள்ள நம்பி என்ற பெருமாளை யாழிசைத்துப் பாடிய பின் தான் தனது தினசரிச் செயல்களைத் தொடங்குவார். சூரியன் உதிக்கும் முன் காடு கடந்து திருக்குறுங்குடி சென்று, பெருமாளைப் பற்றிப் பாடிவிட்டு, மக்கள் எழும் முன் ஊர் திரும்பி விடுவார். தன்னுடைய குலத்தின் காரணமாக கோயிலின் வாயிலில் நின்று பாடிவிட்டு செல்வது அவரது வழக்கம். அவரது பண்ணில் மயங்கிய திருக்குறுங்குடிப் பெருமாள், யாழிசையுடன் போற்றிப் பாடிய பாணரை, ‘நம்பாடுவான்’ (என் பாடகர்) என்று சிறப்புப் பெயர் கொண்டு அழைத்தார். அன்று முதல் அப்பாணர் அவ்வாறு அழைக்கப்பட்டார். அதுவே நிரந்தரமானது.


கார்த்திகை மாத சுக்லபக்க்ஷ ஏகாதசி நாளில் நம்பாடுவான், இரவு முழுதும் விழித்திருந்து பெருமாள் புகழைப் பாடி, விரதமிருந்து, விடியும் முன் பண்ணிசைக்க கோவிலை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார். காட்டில் இருந்த பிரம்ம ராக்ஷஸன், பாணரை வழிமறித்தான். 'உன்னை உணவாக உண்ணப் போகிறேன்" என்றான்.

பாணரோ, “என்னை உண்டு உன் பசியைப் போக்கிக் கொள்கிறாய் என்றால் எனக்கும் சந்தோஷம் தான். எனக்கு இவ்வுடலின் மீது எந்த ஒரு விருப்பமும் இல்லை. இது என் உடைமையும் இல்லை. ஆனால், இன்று ஏகாதசி. திருக்குறுங்குடிக்குச் சென்று, எம்பெருமானின் முன் பாடிவிட்டு, நான் மேற்கொண்டுள்ள ஏகாதசி விரதத்தை நிறைவு செய்துவிட்டுத் திரும்பி வந்த பின் என்னை உண்டு உன் பசியாறுவாயாக! அதுவரை பொறுத்திரு”, என்று கூறினார். 


முதலில் பாணரை அவன் நம்பவில்லை. ஏகாதசி விரதம் மேற்கொள்ளும் திருமாலடியார் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்கள் என்பதைக் கூறி, அதை மீறினால், மீண்டும் மீண்டும் பிறந்து, இறைவனை அடைய முடியா வண்ணம் ஆன்மா பிறவிக்கடலில் அகப்பட்டுக் கொள்ளும். எனவே, நான் வாக்குறுதி வழங்குகிறேன். நான் வருவேன்.” என்று கூறி விளக்கியவுடன் அவரைக் குறுங்குடிக்குச் சென்று வர அனுமதித்தான்.

சந்நிதி அடைந்து, வழக்கம் போல, சந்நிதியிலிருந்து விலகிப் பாடினார் நம்பாடுவான். ஆனால், எம்பெருமான், கொடி மரம், கருடன் ஆகியவற்றை விலகி இருக்கச் சொல்லி அங்கிருந்த வண்ணமே சேவை சாதித்தார்.

பின்னர், கொடுத்த வாக்கைக் காக்க ராட்சசனிடம் சென்றார். வழியில் ஒரு முதியவர், "நீ போகாதே! தன் உயிரைக் காத்துக் கொள்ள வாக்குத் தவறினால் தவறில்லை" என்றார். ஆனால், கொடுத்த வாக்கைக் காப்பது தான் ஸ்ரீவைஷ்ணவின் தருமம்" என நம்பாடுவான் மறுத்து விட்டார்.

பிரம்மராக்ஷஸனிடம் உறுதியளித்தபடி வந்து நின்றார். பிரம்மராக்ஷஸன், ‘‘அடியவரே! சிறந்த திருமாலடியார் நீங்கள். தங்களைப் புசித்து மேலும் என் பாவத்தைப் பெருக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை! தாங்கள் இனிதே இல்லம் திரும்புங்கள்!’’ என்று கூறினான்.

நம்பாடுவான், தான் உறுதி அளித்தபடி, பிரம்மராக்ஷஸனின் பசியைப் போக்காமல் அவ்விடத்தை விட்டு அகல விரும்பவில்லை. ஆனால், அவனோ அவரைப் புசிக்க விரும்பவில்லை. தன்னை இப்பாவத்தில் இருந்து விடுவிக்கும் சக்தி, நம்பாடுவானுக்கே உள்ளது என்பதை அறிந்த பிரம்மராக்ஷஸன், “ஏகாதசி விரதத்தைத் தொடர்ந்து அனுஷ்டித்து வந்ததால் பெரும்புண்ணியம் கிடைக்கும் அல்லவா? அந்தப் புண்ணியத்தில் எட்டில் ஒரு பங்கை என்னிடம் கொடுங்கள்”, என்றார்.

நம்பாடுவான், அதற்கு, “நான் பலனை எதிர்ப்பார்த்து விரதம் இருக்க வில்லை. அவரின் புகழ் பாடுவதால், பெருமாளின் மனமும் என் மனமும் குளிரும். எதையும் எதிர்ப்பார்த்து நான் செய்யவில்லை”, என்றார். “சரி, என்றால், நீங்கள் பாடும் ஒரு பாடலின் பலனை எனக்கு வழங்குவதாக கூறிவிடுங்கள்.”, என்றான் பிரம்மராக்ஷஸன்.

பிரம்மராக்ஷஸனின் நிலைமையை கண்ட நம்பாடுவான், மனம் வருந்தி ராட்சஸனிடம் அவன் கேட்டதைக் கொடுத்து விட்டார். உடனே, பிரம்மராக்ஷஸ வடிவம் நீங்கி, அந்தணப் பிரம்மச்சாரியாக நிற்கக் கண்டார். தான் வேள்வி செய்த பொழுது செய்த தவறுகளின் காரணமாகத் தனக்கு இந்த அசுர உருவம் ஏற்பட்டதாகக் கூறிய பிரம்மச்சாரி நம்பாடுவானுக்கு நன்றி கூறிச் சென்றார்.

பிரம்மராக்ஷஸன் உணவு கிடைக்காமல் பசியும் தாகமும் வாட்டிய நிலையில் இருந்தான். அந்த இளைப்பு, விடாய் இரண்டையும் நம்பாடுவார் தீர்த்தார். அத்துடன் சாபம் நீங்கவும் உதவினார். இன்றும் கைசிக ஏகாதசி (கார்த்திகை மாதம்) அக்கோயில் விழா கொண்டாடுகிறது.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அறநெறி பிறழாது நம்பாடுவான், ராட்சசன் இளைப்பின் தாகத்தை தீர்த்தார். நம்பாடுவான் போல் பிறருக்கு உதவி புரிந்தேனா?!” ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்