About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 26 August 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.20

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.20 

அத² வ்யவஸ் தி²தாந் த்³ருஷ்ட்வா
தா⁴ர்த ராஷ்ட்ராந் கபித்⁴வஜ:|
ப்ரவ்ருத்தே ஸ²ஸ்த்ர ஸம்பாதே
த⁴நுருத்³ யம்ய பாண்ட³வ:||

  • அத² - அதன் பின் 
  • வ்யவஸ் தி²தாந் - எதிர் நிற்கும் 
  • த்³ருஷ்ட்வா - பார்த்து 
  • தா⁴ர்த ராஷ்ட்ராந் - திருதராஷ்டிரரின் புதல்வர்கள் 
  • கபித்⁴வஜஹ - அனுமானின் கொடியைக் தாங்கியவன் 
  • ப்ரவ்ருத்தே - ஈடுபடத் தயாராக 
  • ஸ²ஸ்த்ர ஸம்பாதே - அம்புகள் எய்ய 
  • த⁴நுர் - வில் 
  • உத்³யம்ய - ஏந்திக் கொண்டு 
  • பாண்ட³வஹ - பாண்டுவின் மகன் (அர்ஜுனன்)

பாண்டவ கெளரவர்களிடம் அம்புகள் பறக்க விடப்பட்டன. அச்சமயத்தில் ஹனுமானின் கொடியைத் தாங்கிய தேரில் அமர்ந்திருந்த பாண்டுவின் மகன் பார்த்தன், தனது வில்லை எடுத்து அம்புகள் எய்வதில் ஈடுபட தயாராக இருந்தவன், அதன் பின் அணி வகுக்கப்பட்ட படையில் திருதராஷ்டரின் புதல்வர்களை பார்த்தவுடன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நோக்கி அர்ஜுனன் பின்வருமாறு கூறினான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
||ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.4

நாராயணம் நமஸ் க்ருத்ய
நரம் சைவ நரோத்தமம்।
தே³வீம் ஸரஸ்வதீம் வ்யாஸம்
ததோ ஜயம் உதீ³ரயேத்:॥

  • நாராயணம் - ஸ்ரீமந் நாராயணனையும் 
  • நரோத்தமம் - நரர்களுள் சிரேஷ்டரான 
  • நரம் சைவ - ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவையும் 
  • தே³வீம் ஸரஸ்வதீம் - தேவியான ஸரஸ்வதியையும் 
  • வ்யாஸம் - வியாஸ பகவானையும் 
  • நமஸ் க்ருத்ய ததோ - வணங்கிய பிறகு 
  • ஜயம் - ஜெயத்தை கொடுக்கிற பாகவதத்தை 
  • உதீ³ரயேத்து - சொல்லுதல் வேண்டும்

பகவானான ஸ்ரீமந் நாராயணனையும், நரோத்தமனான நரனையும் (அர்ஜுனனையும்), ஸரஸ்வதி தேவியையும், இந்த ஸ்ரீமத் பாகவத புராணத்தை எழுதியருளிய வேத வியாஸரையும் வணங்கி, பிறவித் துன்பக்கடல் ஒழித்து வெற்றியை வழங்கக் கூடிய ஸ்ரீமத் பாகவதத்தைச் சொல்ல வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 35

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய|| 
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்||

||ஸ்லோகம் - 5||

ஸ்வயம்பூ⁴: ஸ²ம்பு⁴ர் ஆதி³த்ய: 
புஷ்கராக்ஷோ மஹாஸ் வந:|
அநாதி³ நித⁴நோ தா⁴தா 
விதா⁴தா தா⁴து ருத்தம:||

  • 37. ஸ்வயம்பூ⁴ஸ்² - தானே தோன்றியவர். சுயமாக பிறந்தவர்.
  • 38. ஸ²ம்பு⁴ர் - பேரின்பத்தை விளைவிப்பவர். தனது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறார்.
  • 39. ஆதி³த்யஃ - சூரிய மண்டலத்தின் நடுவில் தங்க நிறத்தில் இருப்பவர். சூரியனின் மைய ஆற்றல் உடையவர்.
  • 40. புஷ்கராக்ஷோ - தாமரை மலரைப் போன்ற அழகிய கண்களை உடையவர்.
  • 41. மஹாஸ்வநஹ - வழிபடுவதற்கு உவப்பான திருநாமத்தை உடையவர். ஆழமான மற்றும் எதிரொலிக்கும் குரல் கொண்டவர். வேதங்களின் உருவகம்.
  • 42. அநாதி³ நித⁴நோ - ஆதியும் அந்தமும் இல்லாதவர். நித்யமானவர். அவருக்கு  பிறப்பு, சிதைவு அல்லது இறப்பு இல்லை.
  • 43. தா⁴தா - படைப்பவர். பிரபஞ்சத்தை உருவாக்கியவர். ஆதரிப்பவர் மற்றும் நிலை நிறுத்துபவர். செயல்களின் பலனை உருவாக்குகிறார்.
  • 44. விதா⁴தா - கர்ப்பத்தைப் பாதுகாத்து உற்பத்தி செய்பவர்.
  • 45. தா⁴து ருத்தமஹ - பிரம்மத்தை விட மிக உயர்ந்தவர். எல்லாவற்றின் இறுதியான அங்கமாக இருப்பவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - 32

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

முப்பத்தி இரண்டாவது வார்த்தை

032. கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே|

வைஷ்ணவத்தில் இரு திருவடிகள். பெரிய திருவடிகள் - கருடாழ்வார். சிறிய (இரண்டாவது) திருவடி – ஹனுமான்.

பெரிய திருவடியான கருடன் எப்பொழுதும் எம்பெருமானை சுமந்து கொண்டு செல்லும் வாகனமாவார். இராமாயணத்தில் சிறிய திருவடியான அனுமான் ராம லக்ஷ்மணர்களை தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார். 


கருடன் தன் தாயான வினதையின் அடிமைத்தனத்தை நீக்கும் பொருட்டு அமிர்தகலசத்தை தேவர்களிடம் இருந்து கவர்ந்து வரச் சென்று தேவர்களுடன் போரிட்டு இறுதியில் மகாவிஷ்ணுவின் ஆணைப்படி பணிந்து அவர்க்கு வாகனமாகிறார்.

பெரியாழ்வார் கூடல் மாநகர் மன்னன் சந்தேகத்தைத் தீர்த்து, பொற்கிழியைப் பெற்றுக் கொண்டு யானை மீதேறி மதுரை வீதிகளில், யானை மீதேறி பவனி வரும் போது, எம்பெருமான் தேவி சகிதம் கருட வாகனத்தில் காட்சியளித்தார்.


ஆழ்வார் திருநகரியில் கருடனுக்கென தனி உற்சவமே உண்டு. இங்குக் கோவில் வெளிச் சுவரில் அமர்ந்திருக்கும் கருடன் விஷேசமானவன்.

இந்த கருடனுக்கு அருள்பட்சிராஜர் என்ற பெயரும் உண்டு. ஒருமுறை இஸ்லாமியர்கள் படையெடுப்பின் காரணமாக திருவுருவச் சிலைகளுக்கு, பாதுகாப்பின்மை ஏற்பட, நம்மாழ்வாரின் காய்ச்சிய திருமேனியை எடுத்துக் கொண்டு கோழிக்கோட்டில் மறைத்து வைத்தனர்.


மீண்டும் அமைதித் திரும்பியதும், ஒளித்து வைத்த சிலையைத் தெடிச் செல்கையில். ஒளித்த இடம் மறந்து விடுகிறது. அப்போது கருடன் பறந்து வந்து இடத்தை அடையாளம் சொன்னது, நம்மாழ்வார் சிலை மீண்டும் சந்நிதியில் எழுந்தருளச் செய்தனர்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " இப்படி பெரிய திருவடியும், சிறிய திருவடியும் எம்பெருமானை சுமந்து கொண்டு திரிந்து கைங்கர்யம் பண்ணினார்கள். வைத்தமாநிதி பெருமானை சுமக்க நான் ஆசை கூட பாடலையே! அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கலையே!!” ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்