||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய||
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்||
(17)
யத: ஸர்வாணி பூதா⁴நி
ப⁴வந்த் யாதி³ யுகா³க³மே|
யஸ் மிம்ஸ்² ச ப்ரளயம் யாந்தி
புநரேவ யுக³ க்ஷயே||
- யதஸ் - எதிலிருந்து, எவரிடமிருந்து
- ஸர்வாணி - அனைத்து
- பூதா⁴நி - உயிரினங்கள், உயிர்கள்
- ப⁴வந்தி - தோன்றுகின்றன, உருவாகின்றன
- யாதி³ - செல்கின்றன, அடைகின்றன
- யுகா³க³மே - யுகத்தின் தொடக்கத்தில்
- யஸ் மிம்ஸ்² - எதில், எவரிடம்
- ச - மேலும், மற்றும்
- ப்ரளயம் - அழிவு, ஒடுக்கம்
- யாந்தி - செல்கின்றன, அடைகின்றன
- புநர் - மீண்டும்
- ஏவ - மட்டுமே, நிச்சயமாக
- யுக³ - யுகத்தின்
- க்ஷயே - முடிவில்
----
(18)
தஸ்ய லோக ப்ரதா⁴ நஸ்ய
ஜக³ந் நாத²ஸ்ய பூ⁴பதே|
விஷ்ணோர் நாம ஸஹஸ்ரம் மே
ஸ்²ருணு பாப ப⁴யா பஹம்||
- தஸ்ய - அவருடைய, அந்த
- லோக - உலக
- ப்ரதா⁴ நஸ்ய - தலைவருடைய, முதன்மையானவருடைய
- ஜக³ந் நாத²ஸ்ய - உலகத்தின் தலைவருடைய
- பூ⁴பதே - அரசனே
- விஷ்ணோர் - விஷ்ணுவினுடைய
- நாம - பெயர்கள்
- ஸஹஸ்ரம் - ஆயிரம்
- மே - எனக்கு, என்னால்
- ஸ்²ருணு - கேள், கேட்பாயாக
- பாப - பாவம்
- ப⁴ய - பயம்
- அபஹம் - நீக்குவது, அகற்றுவது
-----
17 & 18
"உயிர்கள் அனைத்தும் ஆதி யுகத்தின் தொடக்கத்தில் எவரிடமிருந்து பிறந்தனவோ, யுகத்தின் முடிவில் மீண்டும் அவை எவரிடத்தில் மறைகின்றனவோ, உலகத்தைத் தாங்கிக் கொண்டிருப்பவரும், உலகத்துக்குக் காரணமானவரும், உலக நாயகருமாக எங்கும் விளங்குபவர் எவரோ அவரே விஷ்ணு. இத்தகைய உயர்வும் சிறப்பும் மிக்க மகாவிஷ்ணுவினுடைய ஆயிரம் நாமங்கள் பாவங்களையும், பயங்களையும் போக்குவன. அந்த ஆயிரம் நாமங்களையும் என்னிடம் கேட்பாயாக." இவ்வாறு அம்புப் படுக்கையில் இருந்தவாறே பீஷ்மர், தரும புத்திரருக்கு ஆயிரம் நாமங்களைக் கூறலானார். மேலும், பீஷ்மர் தருமருக்குக் கூறுகிறார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment