||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய||
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்||
பரமம் யோ மஹத்தேஜ:
பரமம் யோ மஹத்தப:|
பரமம் யோ மஹத்³ ப்³ரஹ்ம
பரமம் ய: பராயணம்||
- பரமம் - மிக உயர்ந்த, மேலான
- ய: - எது, யார்
- மஹத் - மிகப்பெரிய, அளவற்ற
- தேஜஃ - ஒளி, பிரகாசம், ஆற்றல்
- பரமம் - மிக உயர்ந்த
- யஃ - எது, யார்
- மஹத் - மிகப் பெரிய
- தபஃ - தவம், ஞான வடிவம்
- பரமம் - மிக உயர்ந்த
- ய: - எது, யார்
- மஹத்³ - மிகப் பெரிய
- ப்³ரஹ்ம - பிரம்மம், பரம்பொருள்
- பரமம் - மிக உயர்ந்த
- யஃ - எது, யார்
- பராயணம் - புகலிடம், இறுதி இலக்கு
எது எல்லாவற்றையும் விட மேலான, அளவற்ற பெரும் ஒளியாக விளங்குகிறதோ, எது எல்லாவற்றையும் விட உயர்ந்த, பெரும் தவத்தின் வடிவமாகத் திகழ்கிறதோ, எது எல்லாவற்றையும் விடப் பெரிய, உன்னதமான பரம்பொருளாக, பிரம்மமாக இருக்கிறதோ, எது எல்லாவற்றையும் விடச் சிறந்த, உயிர்களின் இறுதிப் புகலிடமாக விளங்குகிறதோ, அதுவே மகாவிஷ்ணு ஆகும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment