About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 22 November 2026

ருண விமோசந ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்மரணாத் ஸர்வ பாபக்⁴நம் 
கத்³ரூஜம் விஷ நாஸ²நம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ருண முக்தயே||

  • ஸ்மரணாத் - நினைப்பதால் மட்டுமே
  • ஸர்வ - எல்லா
  • பாபக்⁴நம் - பாவங்களையும் அழிப்பவரை
  • கத்³ரூஜம் - பாம்பினால் உண்டாகும் (கத்ருவின் புத்திரர்களான பாம்புகளிடம் இருந்து தோன்றும்)
  • விஷ - விஷத்தை
  • நாஸ²நம் - போக்குபவரை, அழிப்பவரை
  • ஸ்ரீ - மங்களம் நிறைந்த லட்சுமி தேவியுடன் கூடிய
  • ந்ருஸிம்ஹம் - நரசிம்ம மூர்த்தியை
  • மஹா - மிகச் சிறந்த
  • வீரம் - பராக்கிரமம் உடையவரை
  • நமாமி - வணங்குகிறேன்
  • ருண - பிறவி கடன்களிலிருந்து (பொருளுதவி கடன் மற்றும் பாவக் கடன்கள்)
  • முக்தயே - விடுதலை பெறுவதற்காக

நினைத்த உடனேயே அனைத்து பாவங்களையும் போக்கடிப்பவரும், கொடிய விஷத்தை முறியடிப்பவரும், மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஜடாயுவின் இராம ஸ்தோத்திரம் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ப⁴வ விபிந ப³வாக்³நி நாம தே⁴யம் 
பா⁴வ முக² தை³வத தை³வதம் த³யாளும்|
த³னு ஜபதி ஸஹஸ்ர கோடி நாஸம் 
ரவி தநயா ஸத்³ருஸம் ஹரிம் ப்ரபத்³யே||

  • ப⁴வ - பிறவி, சம்சாரம்
  • விபிந - காடு
  • ப³வாக்³நி - காட்டுத் தீ
  • நாம தே⁴யம் - பெயராகக் கொண்டவர்
  • பா⁴வ - பக்தி, தூய எண்ணம்
  • முக² - முதலிய
  • தை³வத - தெய்வங்கள்
  • தை³வதம் - தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமானவர்
  • த³யாளும் - கருணையுடையவர்
  • த³னு ஜபதி - அசுரர்களின் தலைவன்
  • ஸஹஸ்ர - ஆயிரம்
  • கோடி - கோடி
  • நாஸம் - அழிப்பவர்
  • ரவி - சூரியன்
  • தநயா - மகன்
  • ஸத்³ருஸம் - ஒப்பானவர்
  • ஹரிம் - ஹரியை, இராமரை
  • ப்ரபத்³யே - சரணடைகிறேன்

பிறவி என்னும் காட்டை எரிக்கும் காட்டுத் தீ போன்றவரும், அனைத்து தெய்வங்களுக்கும் தெய்வமானவரும், அளவற்ற கருணை உடையவரும், கோடிக்கணக்கான அசுரர்களை அழிக்க வல்லவரும், சூரியனின் மகனான சுக்ரீவனுக்கு ஒப்பான நண்பரும் ஆன இராமரிடம் நான் சரணடைகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ருண விமோசந ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஆந்த்ர மாலாத⁴ரம் ஸ²ங்க² 
சக்ராப்³ ஜாயுத⁴  தா⁴ரிணம்|
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் 
நமாமி ருண முக்தயே||

  • ஆந்த்ர - குடலை
  • மாலா - மாலையாக 
  • த⁴ரம் - அணிந்திருப்பவரை
  • ஸ²ங்க² - சங்கு 
  • சக்ர - சக்கரம்
  • அப்³ஜ - தாமரை
  • ஆயுத⁴ - ஆகிய ஆயுதங்களை
  • தா⁴ரிணம் - ஏந்தியிருப்பவரை
  • ஸ்ரீ - மங்களம் நிறைந்த லட்சுமி தேவியுடன் கூடிய
  • ந்ருஸிம்ஹம் - நரசிம்ம மூர்த்தியை
  • மஹா - மிகச் சிறந்த
  • வீரம் - பராக்கிரமம் உடையவரை
  • நமாமி - வணங்குகிறேன்
  • ருண - பிறவி கடன்களிலிருந்து (பொருளுதவி கடன் மற்றும் பாவக் கடன்கள்)
  • முக்தயே - விடுதலை பெறுவதற்காக

ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், ஸங்கம், சக்கரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும், மஹா வீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை, பிறவி கடனிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||