||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய||
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்||
||ஸேனை முதலியார் வணக்கம்||
யஸ்ய த்³விரத³ வக்த்ராத்³யா:
பாரி ஸ²த்³யா: பரஸ்² ஸ²தம்|
விக்⁴நம் நிக்⁴நந்தி ஸததம்
விஷ்வக் ஸேநம் தமாஸ்²ரயே||
- யஸ்ய - யாருடைய
- த்³விரத³ - யானை
- வக்த்ராத்³யாஃ - முகம் முதலான
- பாரி ஸ²த்³யாஃ - பரிவாரத்தினர், தொண்டர்கள்
- பரஸ்² ஸ²தம் - நூற்றுக்கணக்கான
- விக்⁴நம் - தடைகளை
- நிக்⁴நந்தி - அழிக்கின்றனர், நீக்குகின்றனர்
- ஸததம் - எப்பொழுதும்
- விஷ்வக் ஸேநம் - விஷ்வக்சேனரை
- தம் - அந்த அவரை
- ஆஸ்²ரயே - சரணடைகிறேன், அடைக்கலம் புகுகிறேன்
யானை முகன் முதலான பரிவாரக் கூட்டங்களுக்குத் தலைவராகவும், தம்மையே தியானம் செய்பவருக்கு வருகின்ற எல்லா இடையூறுகளையும் நீக்கி மகிழ்ச்சி அளிப்பவருமாகிய ஸேனை முதல்வரின் திருவடிகளை வணங்குகிறோம்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment