||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய||
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்||
||பூர்வ நியாஸம்||
மூன்றாம் பாகத்திலுள்ள ஸ்லோகங்கள்
உரைநடையாக அநுசந்திக்கும் முறை
இனி சொல்லப்படுகிறது
அஸ்ய ஸ்ரீ விஷ்ணோர் தி³வ்ய
ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய|
ஸ்ரீ வேத³ வ்யாஸோ ப⁴க³வாந் ரிஷி:|
அநுஷ்டுப் ச²ந்த³:|
ஸ்ரீ மஹாவிஷ்ணு: பரமாத்மா
ஸ்ரீமந் நாராயணோ தே³வதா|
- அஸ்ய - இதனுடைய
- ஸ்ரீ - திரு, மங்களம்
- விஷ்ணோர் - திருமாலின்
- தி³வ்ய - தெய்வீகமான
- ஸஹஸ்ர நாம - ஆயிரம் திருநாமங்கள்
- ஸ்தோத்ர - துதிப்பாடல்
- மஹா - பெரிய, சிறந்த
- மந்த்ரஸ்ய - மந்திரத்தினுடைய
- ஸ்ரீ வேத³ வ்யாஸோ- ஸ்ரீ வேத வியாசர்
- ப⁴க³வாந் - பகவான், இறைவன்
- ரிஷிஹி - முனிவர்
- அநுஷ்டுப் - அநுஷ்டுப் என்னும்
- ச²ந்த³ஹ - செய்யுள் வகை, சந்தம்
- ஸ்ரீ மஹாவிஷ்ணுஃ - ஸ்ரீ மகாவிஷ்ணு
- பரமாத்மா - பரம ஆத்மா, உயர்ந்த இறைநிலை
- ஸ்ரீமன் நாராயணோ - திருமகளுடன் கூடிய நாராயணன்
- தேவதா - தெய்வம், வழிபடப்படும் தெய்வம்
----
அம்ருதாம் ஸூ²த்³ ப⁴வோ பா⁴நுரிதி பீ³ஜம்|
தே³வகீ நந்த³ந: ஸ்ரேஷ்டேதி ஸ²க்தி:||
உத்³ப⁴வ: க்ஷோப⁴ணோ தே³வ இதி பரமோ மந்த்ர:|
ஸ²ங்க² ப்⁴ருந் நந்த³கீ சக்ரீ தி கீலகம்||
- அம்ருதாம் - அமுதம்
- ஸூ²த்³ப⁴வோ - தோன்றியவர், தோற்றுவிப்பவர்
- பா⁴நுர் - சூரியன், ஒளிமிக்கவர்
- இதி - என்று
- பீ³ஜம் - விதை மந்திரம், மூல காரணம்
- தே³வகீ - தேவகி
- நந்த³நஸ் - மகன்
- ஸ்ரேஷ்டஹ் - சிறந்தவர்
- இதி - என்று
- ஸ²க்திஹி - சக்தி
- உத்³ப⁴வஸ் - தோன்றியவர்
- க்ஷோப⁴ணோ - அசைப்பவர், இயக்குபவர்
- தே³வ: - இறைவன்
- இதி - என்று
- பரமோ - உயர்ந்த, உன்னதமான
- மந்த்ரஹ - மந்திரம்
- ஸ²ங்க² - சங்கு
- ப்⁴ருந் - தாங்குபவர்
- நந்த³கீ - நந்தகம் என்னும் வாள் உடையவர்
- சக்ரீ - சக்கரத்தை உடையவர்
- இதி - என்று
- கீலகம் - ஆணிக்கல், மறைந்திருக்கும் திறப்புச் சக்தி
----
ஸா²ர்ங்க³ த⁴ந்வா க³தா³த⁴ர இத் யஸ்த்ரம்|
ரதா²ங்க³ பாணி ரக்ஷோப்⁴ய இதி நேத்ரம்||
த்ரிஸாமா ஸாமக³: ஸாமேதி கவசம்|
ஆநந்த³ம் பர ப்³ரஹ்மேதி யோநி:||
- ஸார்ங்க³ - ஸார்ங்கம் என்னும் வில்
- த⁴ந்வா - வில் ஏந்தியவர்
- க³தா³த⁴ர - கதையைத் தாங்கியவர்
- இதி - என்று
- அஸ்த்ரம் - ஆயுதம்
- ரதா²ங்க³ - தேரின் சக்கரம், சக்கரம்
- பாணி - கையில் உடையவர்
- ரக்ஷோப்⁴ய - பாதுகாப்பவர், அசைக்க முடியாதவர்
- இதி - என்று
- நேத்ரம் - கண், பார்வை
- த்ரி ஸாமா - மூன்று சாம வேத வடிவங்கள்
- ஸாமக³ - சாம வேதத்தைப் பாடுபவர்
- ஸாம - சாம வேதம்
- இதி - என்று
- கவசம் - பாதுகாப்புக் கவசம்
- ஆநந்த³ம் - ஆனந்தம்
- பர - உயர்ந்த, பரமான
- ப்³ரஹ்ம - பரம்பொருள்
- இதி - என்று
- யோநிஹி - மூலாதாரம், பிறப்பிடம்
----
ருது: ஸுதர்ஸ²ந: கால இதி தி³க்³ ப³ந்த⁴:|
ஸ்ரீ விஸ்²வரூப இதி த்⁴யாநம்|
ஸ்ரீ மஹாவிஷ்ணு ப்ரீத்யர்தே²|
ஸஹஸ்ர நாம ஜபே விநியோக³:||
- ருதுஸ் - பருவ காலம்
- ஸுதர்ஸ²நஹ் - சிறந்த தரிசனம் உடையவர், சுதர்சனச் சக்கரத்தை உடையவர்
- கால - காலம்
- இதி - என்று
- திக்³ ப³ந்த⁴ஹ - திசைகளைப் பாதுகாத்துக் கட்டுதல்
- ஸ்ரீ விஸ்²வரூப - ஸ்ரீ விஸ்வரூபம், அனைத்துலக வடிவம்
- இதி - என்று
- த்⁴யாநம் - தியானம்
- ஸ்ரீ மஹாவிஷ்ணு - ஸ்ரீ மகாவிஷ்ணு
- ப்ரீத்யர்தே² - மகிழ்ச்சிக்காக, திருப்திக்காக
- ஸஹஸ்ரநாம - ஆயிரம் திருநாமங்கள்
- ஜபே - ஜபிப்பதில், உச்சரிப்பதில்
- விநியோக³ஹ - பயன்பாடு, அர்ப்பணிப்பு
----
விஷ்ணுவின் இந்த திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மகா மந்திர நாம ஸ்தோத்ர: மகா மந்திரத்துக்குப் பகவான், வேத வியாசர் ரிஷி; அநுஷ்டுப் சந்தஸ்; பரமாத்வான ஸ்ரீமகா விஷ்ணு - ஸ்ரீமந்நாராயணன் தேவதை; சந்திர குலத்து உதித்த சூரியன் குல விளக்கு என்பது பீஜம் (மூலகாரணம்); தேவகீ நந்தனாகிய ஸ்ரீ கிருஷ்ணன் சக்தி; உத்பவ: - க்ஷோபணோ தேவ; என்பது இதன் உயர்ந்த மந்திரமாம்; திருவாழி, திருச்சக்கரம், நாந்தக வாள் ஏந்தியவன் கீலகம் (அச்சாணி); இதன் காப்பு (கவசம்) த்ரிஸாமா ஸாமக; ஸாம; ஆநந்தம் பர ப்ரஹ்ம என்பது யோநி (கர்ப்பம்); ருதுஸ் ஸுதர்சந: - கால என்பது திக்குகளை அடக்கிப் பரப்பு; எத்திக்கிலிருந்தும் தீமை வராமல் இந்த மகா மந்திரத்தால் காப்பு; எங்கும் நிறைந்தவர் என்பது தியானம், எம்பெருமானுக்குக் கைங்கர்யமாக அவருடைய திருநாமங்களை அநுஸந்தித்துத் தொழுதல் அதாவது ஸ்ரீமஹா விஷ்ணுவின் திருவருள் சித்திக்கும் பொருட்டு ஸஹஸ்ரநாம ஜபத்தில் இதற்குப் பயன் என்பதாம்.
மூன்றாம் பகுதி ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் முற்றுப் பெறுகிறது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment