About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 12 August 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 19

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய|| 
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்||

யாநி நாமாநி கௌ³ணாநி 
விக்²யா தாநி மஹாத்மந:|
ருஷிபி⁴ஃ பரி கீ³தாநி 
தாநி வக்ஷ்யாமி பூ⁴தயே||

  • யாநி - எவையோ, எந்தெந்த
  • நாமாநி - பெயர்கள்
  • கௌ³ணாநி - சிறப்புப் பெயர்கள், குணங்களைக் குறிக்கும் பெயர்கள்
  • விக்²யா தாநி - புகழ்பெற்ற, பிரசித்தமான
  • மஹாத்மநஹ - மகாத்மாவின், உயர்ந்த ஆன்மாவின்
  • ருஷிபி⁴ஃ - முனிவர்களால், ரிஷிகளால்
  • பரி கீ³தாநி - பாடப்பட்ட, போற்றிப் பாடப்பட்ட
  • தாநி - அவற்றை
  • வக்ஷ்யாமி - நான் கூறுவேன், சொல்வேன்
  • பூ⁴தயே - நன்மைக்காக, நல்வாழ்விற்காக

பகவான் அளவிட முடியாத பெருமை உடையவர். அவரே மஹாத்மா. எந்தெந்த நாமங்கள் பகவானுடைய கல்யாண குணங்களினாலும், சரிதத்தினாலும் பிரசித்தி பெற்றவையோ, ஆத்ம ஞானிகளான ரிஷிகளால் எங்கும் பாடப் பெற்றவையோ அவற்றை ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டு உனக்குச் சொல்லுகிறேன். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment