About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 12 February 2024

108 திவ்ய தேசங்கள் - 026 - திரு இந்தளூர் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||026. திரு இந்தளூர்||
||பஞ்ச ரங்க க்ஷேத்திரம் - மாயவரம்||
||இருபத்தி ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 11

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1328 - பெரிய திருமொழி - 4.9.1
நும்மைத் தொழுதோம்* நும் தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம்*
இம்மைக்கு இன்பம் பெற்றோம்* எந்தாய் இந்தளூரீரே*
எம்மைக் கடிதாக் கருமம் அருளி* ஆ ஆ என்று இரங்கி*
நம்மை ஒருகால் காட்டி நடந்தால்* நாங்கள் உய்யோமே?

002. திவ்ய ப்ரபந்தம் - 1329 - பெரிய திருமொழி - 4.9.2
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே* 
மருவினிய மைந்தா* அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே*
நந்தா விளக்கின் சுடரே* நறையூர் நின்ற நம்பீ* 
என் எந்தாய் இந்தளூராய்* அடியேற்கு இறையும் இரங்காயே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1330 - பெரிய திருமொழி - 4.9.3
பேசுகின்றது இதுவே*  வையம் ஈர் அடியால் அளந்த*
மூசி வண்டு முரலும்* கண்ணி முடியீர்!*  
உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து* இங்கு அயர்த்தோம்* 
அயலாரும் ஏசுகின்றது இதுவே காணும்* இந்தளூரீரே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1331 - பெரிய திருமொழி - 4.9.4
ஆசை வழுவாது ஏத்தும்* எமக்கு இங்கு இழுக்காய்த்து* 
அடியோர்க்கு தேசம் அறிய* உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு*
காசின் ஒளியில் திகழும் வண்ணம்* காட்டீர் எம் பெருமான்*
வாசி வல்லீர் இந்தளூரீர்!*  வாழ்ந்தே போம் நீரே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1332 - பெரிய திருமொழி - 4.9.5
தீ எம் பெருமான் நீர் எம் பெருமான்* திசையும் இரு நிலனும் ஆய்* 
எம் பெருமான் ஆகி நின்றால்* அடியோம் காணோமால்*
தாய் எம் பெருமான்* தந்தை தந்தை ஆவீர்* 
அடியோமுக்கே எம் பெருமான் அல்லீரோ நீர்?*  இந்தளூரீரே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1333 - பெரிய திருமொழி - 4.9.6
சொல்லாது ஒழியகில்லேன்* அறிந்த சொல்லில்* நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க* எண்ணியிருந்தீர் அடியேனை*
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்* நமக்கு இவ் உலகத்தில்*
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர்* இந்தளூரீரே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1334 - பெரிய திருமொழி - 4.9.7
மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள* எம்மைப் பணி அறியா வீட்டீர்* 
இதனை வேறே சொன்னோம்* இந்தளூரீரே*
காட்டீர் ஆனீர்* நும் தம் அடிக்கள் காட்டில்* 
உமக்கு இந்த நாட்டே வந்து தொண்டர் ஆன* நாங்கள் உய்யோமே?

008. திவ்ய ப்ரபந்தம் - 1335 - பெரிய திருமொழி - 4.9.8
முன்னை வண்ணம் பாலின் வண்ணம்* முழுதும் நிலை நின்ற*
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம்* வண்ணம் எண்ணுங்கால்*  
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம்* புரையும் திருமேனி*
இன்ன வண்ணம் என்று காட்டீர்* இந்தளூரீரே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1336 - பெரிய திருமொழி - 4.9.9
எந்தை தந்தை தம்மான் என்று என்று* எமர் ஏழ் அளவும்*
வந்து நின்ற தொண்டரோர்க்கே* வாசி வல்லீரால்*
சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர்* சிறிதும் திருமேனி*
இந்த வண்ணம் என்று காட்டீர்* இந்தளூரீரே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1337 - பெரிய திருமொழி - 4.9.10
ஏர் ஆர் பொழில் சூழ்* இந்தளூரில் எந்தை பெருமானை*
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்* கலியன் ஒலி செய்த*
சீர் ஆர் இன் சொல் மாலை* கற்றுத் திரிவார் உலகத்தில்*
ஆர் ஆர் அவரே* அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே|

011. திவ்ய ப்ரபந்தம் - 2779 - பெரிய திருமடல் - 7.7 (67)
கோட்டியூர் அன்ன உருவின் அரியை* 
திருமெய்யத்து இன் அமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை*
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை*
மன்னிய பாடகத்து எம் மைந்தனை*

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment