||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
1. அவினய மபநய விஷ்ணோ தமய மந:
ஸமய விஷய ம்ருகத்ருஷ்ணாம்|
பூத தயாம் விஸ்தாரய
தாரய ஸம்ஸார ஸாகரத:||
ஹே விஷ்ணோ! எனது பணிவின்மையைப் போக்கு! மனதை அடங்கச் செய். பேராசையையும் தணித்து விடு. எல்லா ஜீவராசிகளிடத்தும் தயை வரச்செய். என்னை ஸம்ஸாரக் கடலிலிருந்து அக்கரை சேர்ப்பித்து விடு.
2. திவ்யதுனீ மகரந்தே பரிமள
பரிபோக ஸச்சிதானந்தே|
ஶ்ரீபதி பதாரவிந்தே பவபய
கேதச்சிதே வந்தே:||
கங்கையை மகரந்தமாகக் கொண்டதும், ஸத் சித் ஆனந்தமாகியவற்றை வாசனையாகக் கொண்டதும், உலகில் சம்சார துன்பத்தைப் போக்குவதுமான ஸ்ரீபதியான நாராயணனின் திருவடித் தாமரைகளை வணங்குகின்றேன்.
3. ஸத்யபி பேதாபகமே நாத
தவாஹம் ந மாமகீநஸ்த்வம்|
ஸாமுத்ரோ ஹி தரங்க:
க்வசன ஸமுத்ரோ ந தாரங்க:||
ஜீவாத்மாவான எனக்கும், பரமாத்மாவான உமக்குமிடையில் வேற்றுமை இல்லையெனினும், ஹே ஸ்வாமி நான் உம்மைச் சேர்ந்த அடிமையே. தாங்கள் எனது உடைமையானவரல்ல. அலைதானே ஸமுத்திரத்தையண்டியது. ஒரு போதும் கடல், அலைகளில் அடங்கியதில்லையன்றோ!
4. உத்ருதநக நகபிதநுஜ தநுஜ
குலாமித்ர மித்ரசசித்ருஷ்டே|
த்ருஷ்டே பவதி ப்ரபவதி
நபவதி கிம்பவதி ரஸ்கார:||
கோவர்தன மலையை தூக்கியவரே! இந்திரனின் இளையவரே! அசுரக் கூட்டத்தை அழித்தவரே! சூர்ய சந்திரர்களை கண்களாகக் கொண்டவரே! உங்களுடைய கருணைக் கடைக்கண் பார்வை ஒருவனுக்கு கிடைக்குமானால் எவருக்குத்தான் உலகியலில் இழிவு தோன்றாது?
5. மத்ஸ்யாதிபி ரவதாரைர் அவதாரவதா
அவதா ஸதாவஸுதாம்|
பரமேச்வர பரிபால்யோ
பவதா பவதாபீதோஹம்||
ஹே பெருமாளே! மத்ஸ்ய கூர்மாதி அவதாரங்களால் இறங்கிவந்து பூமியை காத்தருளும் தங்களால், ஸம்ஸார தாபத்தால் மருண்ட நான் காக்கப்பட வேண்டியவரன்றோ!
6. தாமோதர குணமந்திர
ஸுந்தரவதனாரவிந்த கோவிந்த|
பவ ஜலதி மதனமந்தர பரமம்
தரமபனயத்வம் மே||
தாமோதரனே! குணங்களுக்கு கோயிலானவனே! அழகிய தாமரையொத்த முகம் கொண்டவனே! கோவிந்த! ஸம்ஸாரக் கடலை கடையும் மந்தர மலையானவனே! எனது பெரும் துன்பத்தைப் போக்குவாயாக!
7. நாராயண கருணாய சரணம்
கரவாணி தாவகௌ சரணௌ|
இதி ஷட்பதீ மதீயே
வதனஸரோஜே ஸாதாவஸது||
ஹே நாராயண கருணை வடிவானவனே! உனது திருவடிகளை சரணம் அடைகிறேன் என்ற இந்த ஆறு சொற்கள் என் முகத்தில் எப்பொழுதும் தங்கட்டும்.
இதனைப் பாராயணம் செய்தால் பகவானிடத்தில் பக்தி, வைராக்யம், மோக்ஷம், ஞானம் உண்டாகி மனக்கவலையும் கிரஹதோஷமும் நீங்கும்.
||இதி ஸ்ரீ விஷ்ணு ஷட்பதீ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்||
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:
Post a Comment