About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 29 January 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 99

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 

ஸ்லோகம் - 69

கால நேமி நிஹா வீரஸ்² 
ஸொ²ரிஸ்² ஸூ²ர ஜநேஸ்²வர:|
த்ரி லோகாத்மா த்ரி லோகேஸ²:
கேஸ²வ: கேஸி² ஹா ஹரி:||

  • 648. கால நேமி நிஹா வீரஸ்² - கலியுகக் கொடுமைகளை அழிப்பவர். காலச் சக்கரத்தை அழிப்பவர். கலநேமி என்ற பெயரில் அசுரனை அழிப்பவர். நேரத்தைக் கட்டுப்படுத்தும் சூரியனுக்கு திசையை அமைப்பவர். தைரியமானவர்.
  • 649. ஸொ²ரிஸ்² - சூராவின் மகன் (வாசுதேவனின் மற்றொரு பெயர்) யாதவ குலத்தைச் சேர்ந்த சூரர் இனத்தில் பிறந்தவர். எப்போதும் வீரமும் வெற்றியும் கொண்டவர். அவர் துணிச்சலானவர்.
  • 650. ஸூ²ர - எதிரிகளை அழிப்பவர்.  
  • 651. ஜநேஸ்²வரஹ - சூரர்களுக்குத் தலைவர். வீரம் மிக்க மக்களின் தலைவர்.
  • 652. த்ரி லோகாத்மா - மூவுலங்களிலும் சஞ்சரிப்பவர்.
  • 653. த்ரி லோகேஸ²ஹ் - மூவுலகங்களுக்கும் ஈசன்.
  • 654. கேஸ²வஹ் - துக்கங்களை அழிப்பவர். அழகான கூந்தலை உடையவர். உச்ச நறுமணம் கொண்டவர். பிரம்மா மற்றும் சிவனின் ஆதாரம். சூரியன் முதலியவற்றிலிருந்து வெளிப்படும் கதிர்களுக்கு ஆதாரமாக இருப்பவர். எதிரிகளை துன்புறுத்துபவர். பக்தர்களின் துக்கங்களை நீக்குபவர். மோட்சத்தை வழங்குபவர். நீரின் மீது ஆட்சி செய்பவர். (கடல் போன்றவை)
  • 655. கேஸி² ஹா - கேசி என்னும் அசுரனைக் கொன்றவர்.
  • 656. ஹரிஹி - பச்சை வண்ணன். பக்தர்களின் துன்பத்தை அழிப்பவர். பிரளய காலத்தில் பிரபஞ்சத்தை அழித்தவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.36

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.36 

அவாச்ய வாதா³ம்ஸ்² ச ப³ஹூந்
வதி³ஷ் யந்தி தவா ஹிதா:|
நிந்த³ந் தஸ்தவ ஸாமர்த்²யம் 
ததோ து³:க² தரம் நு கிம்||

  • அவாச்ய - அன்பில்லாத 
  • வாதா³ம்ஸ்² - வார்த்தைகள் 
  • ச - மேலும் 
  • ப³ஹூந் - பல 
  • வதி³ஷ் யந்தி - கூறுவார்கள் 
  • தவ - உன்னுடைய 
  • அஹிதாஹ - எதிரிகள் 
  • நிந்த³ந்தஸ் - பழிக்கும் போது 
  • தவ - உன்னுடைய 
  • ஸாமர்த்²யம் - திறமை 
  • ததோ - அதை விட 
  • து³ஹ்க² தரம் - மிகத் துன்பம் தரும் 
  • நு - நிச்சயமாக 
  • கிம் - வேறு என்ன உள்ளது

உன்னுடைய திறமைகளை, உனக்கு வேண்டாதார் அன்பில்லாத வார்த்தைகளால் பலவற்றை கூறி நிந்திக்கும்போது அதைவிட மிகத் துன்பம் தருவன வேறு என்ன உள்ளது?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.34

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.34

யத்³ யே ஷோ பரதா தே³வீ 
மாயா வைஸா²ரதீ³ மதி:|
ஸம்பந்ந ஏவேதி விது³ர்
மஹிம் நிஸ் வே மஹீயதே||

  • வைஸா²ரதீ³ - ஸர்வஞனான  ஈஸ்வரனுடையதும்
  • தே³வீ - ஸம்சார சக்கரத்தினால் விளையாடுகின்றதுமான
  • யேஷா மாயா - இந்த மாயை 
  • மதிஹி - வித்யா ரூபமாக 
  • யதி³ உபரதா -  எப்பொழுது பரிணாமத்தை அடைகிறதோ அப்பொழுது 
  • ஸம்பந்ந ஏவ - ஜீவ ப்ரும்ம ஸ்வரூபத்தை அடைந்ததாய்
  • ஸ்வே மஹிம்நி - தனது பரமானந்த ஸ்வரூபத்தில்
  • மஹீயதே - விளங்குகிறான் 
  • இதி - என்று 
  • விது³ர் - பெரியோர்கள் அறிகின்றனர்

எல்லாமறிந்த பகவானது தொடர்புடையது அவித்தையாகிற மாயை. மாயை என்னும் இவள், உலகியல் சக்கரத்தைக் கைக்கொண்டு லீலைகள் புரிகிறாள். அதாவது, தானே எல்லாம் அறிந்தவள் என்கிற பொய்யான எண்ணத்தைத் தோற்று விக்கிறாள். இந்த மாயையே, உண்மை வித்யை ஞானமாக மாறுதலை அடையுமேயானால், அப்பொழுது ஜீவன் பிரும்ம ஸ்வரூபனாக ஆகி, பரமானந்தத்தில் திளைக்கறான் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.34

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.34

நியுஜ்ய மாநோ ராஜ்யாய 
நைச்ச²த்³ ராஜ்யம் மஹாப³ல:|
ஸ ஜகா³ம வநம் வீரோ 
ராம பாத³ ப்ரஸாத³க:|| 

  • ராஜ்யாய -  ராஜ்ய பரிபாலனத்தின் பொருட்டு
  • நியுஜ்ய மாநோ - நியமிக்கப்பட்ட
  • மஹா ப³லஹ -  மகா சக்திமானானவர்
  • வீரோ  - வீரரானவர்
  • ராஜ்யம் -  ராஜ்யத்தை
  • ஐச்ச²த்³  ந- ஏற்றுக் கொள்ளவில்லை
  • ராம  பாத³ ப்ரஸாத³கஹ  - பூஜ்யரான ஸ்ரீராமரின் க்ருபையை பெற முயலும்
  • ஸ - அவர்
  • வநம்  - வனத்திற்கு 
  • ஜகா³ம  - புறப்பட்டார்

ராஜாவாக  நியமிக்கப்பட்டாலும்,  வீரரான, மஹாபலனான  பரதன்  ராஜ்யத்தை விரும்பாமல் ஸ்ரீராமரின் பாதத்தை வழிபட வனத்திற்கு  புறப்பட்டார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 79 - பெரியாழ்வார் திருமொழி - 1.6.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 79 - பத்மநாபா! சப்பாணி கொட்டு
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்

புட்டியிற் சேறும்* புழுதியும் கொண்டு வந்து* 
அட்டி அமுக்கி* அகம் புக்கு அறியாமே* 
சட்டித் தயிரும்* தடாவினில் வெண்ணெயும் உண்* 
பட்டிக் கன்றே! கொட்டாய் சப்பாணி
பற்பநாபா! கொட்டாய் சப்பாணி|

  • புட்டியில் - இடுப்பில் படிந்திருக்கும் 
  • சேறும் - சேற்றையும் 
  • புழுதியும் - புழுதி மண்ணையும் 
  • கொண்டு வந்து - கொண்டு வந்து 
  • அட்டி - என் மேல் இட்டு
  • அமுக்கி - அழுத்தி உறைக்கப் பூசி
  • அகம் புக்கு - வீட்டினுள் புகுந்து 
  • அறியாமே - யாருக்கும் தெரியாமல் 
  • சட்டித் தயிரும் - சட்டியில் வைத்திருக்கும் தயிரையும் 
  • தடாவினில் - பானைகளிலிருக்கிற 
  • வெண்ணெயும் - வெண்ணெயையும் 
  • உண் - உண்ணுகின்ற 
  • பட்டி - மாட்டுத் தொழுவத்தில் மேய்ந்து திரியும் 
  • கன்றே! - கன்று போன்றவனே! 
  • கொட்டாய் சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்
  • பற்பனாபா! - ப்ரஜாபதி பிறப்பதற்குக் காரணமான தாமரைப் பூவைக் கொண்ட நாபியை உடையவனே! 
  • கொட்டாய் சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்

விளையாடுவதால் ஏற்பட்ட, உடம்பிலேறிய சேறும், மண் புழுதியும் என் மேல் அப்பி விட்டு, எனக்குத் தெரியாமல் தப்பி உள்ளே சென்று சட்டியிலுள்ள தயிரையும், பானையிலுள்ள வெண்ணையையும் உண்டு மாட்டுத் தொழுவத்தில் மேயும் கன்னுகுட்டியைப் போன்றவனே, கைகளைக் கொட்டவும். தாமிரைப் பூவை நாபியிலுடையவனே (பற்பநாபா), உன் திருக்கைகளைக் கொட்ட வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 022 - திருவெள்ளியங்குடி 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||022. திருவெள்ளியங்குடி||
||கும்பகோணம்|| 
||இருபத்தி இரண்டாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் – 10 பாசுரங்கள்

001. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள் 
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் – 1338 - 1347  - நான்காம் பத்து - பத்தாம் திருமொழி 

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி 

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
கால் அளவும் போதாக் கடல் ஞாலத் தோர் கற்ற*
நூல் அளவே அன்றி நுவல்வார் ஆர் கோலப்*
பரு வெள்ளி அம் குடியான் பாதக ஊண் மாய்த்த*
திரு வெள்ளியங் குடியான் சீர்|

  • கோலம் பரு வெள்ளி அம் குடியான் - அழகிய பெரிய கைலாசம் என்னும் வெள்ளி மலையை வாழும் இடமாக உடையனான சிவபிரானது
  • பாதகம் ஊண் - பிரமஹத்தியாகிய பாவத்தினால் நேர்ந்த இரந்துண்ணுதலை
  • மாய்த்த - ஒழித்தருளிய
  • திருவெள்ளியங்குடியான் - திருவெள்ளியங்குடி என்னும் தலத்தில் எழுந்தருளிய எம்பெருமானது
  • சீர் - சிறப்பை
  • கால் அளவும் போதா கடல் ஞாலத்தோர் - திரிவிக்கிரம அவதார காலத்தில் எம்பெருமானது ஒரு திருவடியினால் அளவிடுதற்கும் போதாத கடல் சூழ்ந்த நில உலகத்தில் உள்ளவர்களில்
  • நூல் அளவே அன்றி - கற்ற தாம் படித்தறிந்த நூல்களின் அளவாகக் கூறுவதே அல்லாமல்
  • நுவல்வார் - முழுதும் உணர்ந்து சொல்ல வல்லவர்
  • ஆர் - யாவருளர்?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 90

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

சால்வனின் தந்திரம்|

பிரத்தியும்னன் அவர்களுக்கு ஆறுதல் கூறி, சால்வனை எதிர்க்கத் தன் இரதத்தில் ஏறினான். அவனுடன் சாத்யகி, சாம்பன், அக்ரூரர், கிருதவர்மன் போன்ற பல யாதவ வீரர்களும் சென்றார்கள். இரண்டு அணிகளுக்குமிடையே கடும் போர் நிகழ்ந்தது. 

பிரத்தியும்னன் வெகு வீரமாகச் சண்டையிட்டான். அவன் மாயப் போர் நன்கறிந்தவன். அதனால் சால்வனின் எல்லாத் தந்திரங்களையும் அவனால் சமாளிக்க முடிந்தது. ஆனால் அவனுக்கு ஆச்சரியம் அளித்தது சால்வனுடைய இரதம். அவனுடைய சேனையைப் பிரத்தியும்னனால் அழிக்க முடிந்தது. ஆனால் சால்வன் அகப்படவில்லை. 


சிவபெருமான் கொடுத்த அந்த அதிசய விமானத்தில் சால்வன் உட்கார்ந்திருந்தான். அவன் யார் கண்ணுக்கும் புலப்படவில்லை. அந்த விமானம் ஒரு கணம் ஆகாயத்தில் இருக்கும், அடுத்த கணம் அது பூமியில் இருக்கும், அதற்கும் அடுத்த கணம் அது ஆகாயத்தில் பறந்து சென்றுவிடும். ஒரு சமயம் மிகப் பெரியதாகக் காணப்படும்; இன்னொரு சமயம் மிகச் சிரியதாகிவிடும்.

சால்வனின் மிக பராக்கிரமசாலியான மந்திரி த்யுமான் பிரத்தியும்னனை எல்லாப் பக்கங்களிலிருந்தும் தாக்கினான். ஒரு நல்ல தருணம் பார்த்து அவன் பிரத்தியும்னனைத் தன் இரும்பு கதையினால் அடித்தான். பிரத்தியும்னனுக்கு மார்பில் நல்ல அடி. உடனே அவனுடைய சாரதி இரதத்தைப் போர்க் களத்திலிருந்து அப்பால் ஓட்டிச் சென்றான். மருத்துவ உதவிக்குப் பிறகு பிரத்தியும்னனுக்கு நினைவு திரும்பியது. 

உடனே அவன் தன் சாரதியைக் கடுமையாகக் கோபித்துக் கொண்டான். இதற்கு சாரதி, "ஐயா! யுத்த தர்மத்தின்படி என்ன செய்ய வேண்டுமோ அதைத் தான் நான் செய்தேன். யஜமானன் ஆபத்தில் இருந்தால் அவரைக் காப்பாற்ற வேண்டியது சாரதியின் கடமை. அதைத் தான் நான் செய்தேன். இதனால் நான் தங்களுக்கு ஒரு களங்கமும் ஏற்படுத்தவில்லை. தாங்கள் இப்பொழுது சரியாகி விட்டதனால், மீண்டும் போர்க்களத்திற்குத் தங்களை நான் ஓட்டிச் செல்வேன்" என்றான்.

பிரத்தியும்னன் உடனே த்யுமானைத் தாகித் தன் கொடிய அம்புகளினால் அவன் தலையைத் துண்டித்தான். கிருஷ்ணர் நகரத்தைக் காப்பாற்றும் பொறுப்பைப் பாலராமரிடம் விட்டுவிட்டு, தம்முடைய சாரதி தாருகனை நேரே யுத்தக் களத்திற்கு இரதத்தை ஓட்டும்படிச் சொன்னார். 

கிருஷ்ணரைப் பார்த்ததும் அங்குள்ள யாதவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். சால்வனும் கிருஷ்ணரின் இரதத்தைப் பார்த்தான். இருவருக்கும் இடையே கொடிய போர் நடந்தது. சப்தமிட்டுக் கொண்டு வெகு வேகமாகச் செல்லும் வேலாயுதத்தைச் சால்வன் கிருஷ்ணரை நோக்கி எறிந்தான். கிருஷ்ணர் தம்முடைய அம்புகளினால் அதைத் துண்டு துண்டாக்கினார். சால்வன் தன் விமானம் மூலம் ஆகாயத்தில் மறைந்து, அங்கிருந்து கிருஷ்ணரின் இடக்கையை நோக்கி அம்புகளைப் பொழிந்தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 43

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

இறைவனின் திருத்தோற்றங்கள் - 2

ஸ்கந்தம் 02

11. மத்ஸ்ய 
சாக்ஷுஷ மன்வந்தரத்தின் முடிவில் அடுத்து வரப் போகும் த்ய விரதன் என்ற பாண்டிய மன்னனுக்கு மீன் உருவில் காட்சி அளித்தார். ப்ரளய ஜலத்தில் வேதங்களைச் சொல்லிக் கொண்டு அதிலேயே விளையாடி மகிழ்ந்தார். தசாவதாரத்தில் முதலாவதாகச் சொல்லப்படும் மத்ஸ்ய அவதாரம் நமது தமிழ் நாட்டில் மதுரையம்பதியில் நிகழ்ந்தது.

12. கூர்ம 
தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற விரும்பி பாற்கடலைக் கடைந்த போது இறைவன் ஆமை உருக்கொண்டு மத்தாக விளங்கிய மந்தர மலையைத் தன் முதுகில் தாங்கினார்.

மலை முன்னும் பின்னுமாக அவர் முதுகில் சுழன்றது அவருக்கு முதுகு சொறிந்து விடுவது போல் சுகமாக இருந்ததாம்.

13. நரஸிம்ஹ 
உத்தம பக்தனான ப்ரஹலாதனைக் காப்பதற்காக ஏற்பட்ட அவதாரம். சிங்க முகத்துடனும் மனித உடலுடனும் தோன்றி ஹிரண்ய கசிபுவைக் கொன்று தேவர்களின் துயர் தீர்த்தார்.

14. கஜேந்திரனுக்காக வந்த அவதாரம்
ஹரி என்று பெயர் பெற்ற இந்த அவதாரம் முதலையினால் துன்புற்ற கஜேந்திரன் என்ற யானையைக் காப்பதற்காக நிகழ்ந்தது.

ஆதிமூலமே, அகில லோகநாதனே! என்றழைத்த யானைக்குத் தானே அது என்னும்படி கருடன்மீதேறி விரைந்து வந்து காத்தார்.

15. வாமந 
அதிதி தேவியின் மகனாக அவதரித்தவர். தன் சகோதரர்களான தேவர்களின் துயர் நீக்கவும், பரம் பக்தனான பலிச் சக்ரவர்த்தியின் அஹங்காரத்தை அழித்து அவரை ஆட்கொள்ளவும் சிறிய திருமேனியாக இருந்தவர், திரிவிக்ரம அவதாரம் எடுத்தார்.

16. ஹம்ஸ 
நாரதரின் அளப்பரிய அன்பினாலும் பக்தியினாலும் ஈர்க்கப்பட்டு அன்னப்பறவை உருவில் தோன்றி பாகவத தர்மத்தையிம், பக்தி யோகத்தையும் உபதேசித்தார்.

17. மனு
ஒவ்வொரு மன்வந்தரத்திலும் அந்தந்த காலத்தில் அதிபதியான மனுவாக இறைவனே அவதாரம் செய்கிறார்.

18. தன்வந்த்ரி
பாற்கடலைக் கடையும்போது கைகளில் அமுதக் கலசத்தோடு தோன்றியவர். தன் பெயரைச் சொன்னாலே அனைத்து நோய்களையும் குணப்படுத்துபவர்.

19. பரசுராமர்
அந்தணர்களைக் காக்க வேண்டிய அரசர்களே அவர்களைத் துன்புறுத்தி தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ள முற்பட்டனர். அப்போது கூர்மையான (பரசு) கோடரியை ஏந்தி தீயொழுக்கமுள்ள அரசர்களை 21 முறை அழித்தார்.

20. ஸ்ரீ ராமர்
தன் பதினாறு கலைகளுடனும் பூர்ணாவதாரமாக தன் அம்சங்களோடு அவதரித்தார். மானுட தர்மத்தை அனுஷ்டித்துக்‌ காட்டினார்.

21. ஸ்ரீ க்ருஷ்ணன் 
இவரும் பூர்ணாவதாரமே. பூபாரம் தீர்க்க தன் அம்சமான பலராமனோடு அவதரித்து எண்ணற்ற லீலைகள் புரிந்தார்.

22. ஸ்ரீ வியாஸர்
காலமெனும் நீரோட்டத்தில் மானிடர்களின் அறிவும் ஆற்றலும் குறையும்போது, ஒவ்வொரு சதுர்யுகத்தின் துவாபர யுகத்திலும் ஸத்யவதியின் வயிற்றில் பிறந்து வேதமாகிய விருக்ஷத்தைப் பல கிளைகளாகப் பிரிக்கப் போகிறார்.

23. புத்தர்  
தேவர்களின் பகைவர்களான அசுரர்கள் கண்ணுக்குப் புலப்படாமல் வசித்துக்கொண்டு சத்தியத்தை அழிக்கத் துவங்குவார்கள். அப்போது மனத்தில் மயக்கத்தையும் கவர்ச்சியையும் உண்டுபண்ணும் வண்ணம் அழகிய திருமேனியை ஏற்று, புத்தர் என்ற வடிவில், வேத நெறிக்குப் புறம்பான ஆனால் மக்கள் நலனுக்கேற்ற பல வாழ்க்கை நெறிகளை உபதேசிக்கப்போகிறார்.

24. கல்கி 
கலியுகமுடிவில், வேதம் எங்குமே ஒலிக்காது. ஓரிடத்திலும் ஸத்சங்கம் நடைபெறாது. நல்ல விஷயம் என்று எதுவுமே இருக்காது. அப்போது கலியை அழிப்பதற்காக தென் ந்தியாவில் சம்பளம் என்ற கிராமத்தில் அவதாரம் செய்வார். தேவதத்தம் என்ற குதிரையில் சுற்றி, கோடிக் கணக்கான துஷ்டர்களை வாளால் வதம் செய்யப் போகிறார். அப்போது மாந்தர்களிடையே ஸத்வகுணம் மிகுந்து க்ருதயுகம் தோன்றும்.

படைக்கும் போது ப்ரஜாபதிகள், ப்ரும்மாவாகிய நான், காப்பாற்றும் போது விஷ்ணு, அழிக்கும் போது ருத்ரன் என்று அனைத்து ரூபங்களாகவும் விளங்குபவர் பகவான் ஒருவரே என்று சொல்லி, யோக மாயையை அறிந்தவர்கள் பற்றிய விவரத்தையும் கூறினார் ப்ரும்மா.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Thursday, 25 January 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 98

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் 

ஸ்லோகம் - 68

அர்ச்சிஷ்மா நர்ச்சித: கும்போ⁴ 
விஸு² த்³ தா⁴த்மா விஸோ²த⁴ந:|
அநிருத்³தோ⁴ ப்ரதி ரத²: 
ப்ரத்யும்நோ மித விக்ரம:||

  • 639. அர்ச்சிஷ் மாந் - பேரொளியை உடையவர். மிகுந்த பொலிவு கொண்டவர்.
  • 640. அர்ச்சிதஹ் - வணங்கப்படுபவர். அர்ச்சிக்கப் படுபவர். அர்ச்சாரூபி.
  • 641. கும்போ⁴ - திவ்ய தேசங்களில் விளங்குபவர். ஆசைப் பொருளாக இருப்பவர். இந்த உலகத்தை தன் புகழால் நிரப்புபவர். பூமியை மூடுபவர்.
  • 642. விஸு²த்³தா⁴த்மா - தன்னையே அருள் புரியும் இயல்பினன். தூய இயல்புடையவர்.
  • 643. விஸோ²த⁴நஹ - அமலன். சுத்தியைத் தருபவர். தூய்மையாக்குபவர்.
  • 644. அநிருத்³தோ⁴ - வியூஹ மூர்த்தி. பாற்கடலில் பள்ளி கொள்பவர். தடையற்றவர்.
  • 645. அப்ரதி ரத²ஃ - ஒப்பற்றவர்.
  • 646. ப்ரத்யும்நோ - எல்லாவற்றையும் ஒளிரச் செய்பவர். ஆசைகள் அனைத்தையும் அருளுபவர். பெரும் பலம் கொண்டவர்.
  • 647. அமித விக்ரமஹ - அளவற்ற திருவடிகளை உடையவர். அளவற்ற ஆற்றல், ஒளி உடையவர். அளவிட முடியாத படிகளை உடையவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.35

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.35 

ப⁴யாத்³ ரணாது³ பரதம் 
மம்ஸ் யந்தே த்வாம் மஹா ரதா²:|
யேஷாம் ச த்வம் ப³ஹுமதோ 
பூ⁴த்வா யாஸ் யஸி லாக⁴வம்||

  • ப⁴யாத் - பயத்தால் 
  • ரணாத்³ - போர்க்களத்திலிருந்து 
  • உபரதம் - விலகி விட்டதாக 
  • மம்ஸ் யந்தே - எண்ணுவர் 
  • த்வாம் - நீ 
  • மஹாரதா²ஹ - மிகச்சிறந்த போர்த்தலைவர்கள் 
  • யேஷாம் - அவர்களில் 
  • ச - மேலும் 
  • த்வம் - நீ 
  • ப³ஹுமதோ - பெருமதிப்பு 
  • பூ⁴த்வா - ஆவாய் 
  • யாஸ் யஸி - இழப்பாய் 
  • லாக⁴வம் - மதிப்பிழந்த
மிகச் சிறந்த போர் தலைவர்கள், நீ பயத்தால் போர்க் களத்தில் இருந்து விலகி விட்டதாக எண்ணுவர். நீ பெருமதிப்பை இழப்பாய். அவர்களிடம் நீ மதிப்பை இழந்ததாய் ஆவாய்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.33

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.33

யத்ரே மே ஸத³ ஸத்³ ரூபே 
ப்ரதி ஷித்³தே⁴ ஸ்வஸம் விதா³|
அவித்³ய யாத்மநி க்ருதே 
இதி தத்³ ப்³ரஹ்ம த³ர்ஸ²நம்||

  • யத்ர - எப்பொழுது 
  • இமே -  இந்த 
  • ஸத³ ஸத்³ ரூபே -  ஸ்தூல ஸூக்ஷமமான உருவங்கள்
  • அவித்³யயா - அறியாமையால் 
  • ஆத்மநி -  ஆத்மாவில் 
  • க்ருதே -  கற்பிக்கப்பட்டவை 
  • இதி -  என்ற காரணத்தால் 
  • ஸ்வஸம் விதா³ - நன்கு ஏற்பட்ட ஸ்வரூப ஞானத்தால்
  • ப்ரதி ஷித்³தே⁴ -  தடுக்கப்பட்டதுகள் ஆகிறதோ
  • தத்³ - அப்பொழுது ஜீவன் 
  • த³ர்ஸ²நம் - ஞான ஸ்வருபமான 
  • ப்³ரஹ்ம -  பிரம்மாவாக ஆகிறான் 

காரிய ரூபமாகிய ஸ்தூல ஸரீரம், காரண ரூபமாகிய லிங்க ஸரீரம், இவையிரண்டையும் பரமாத்மாவிடம் ஏற்றிக் கூறப்படுவதற்குக் காரணம், அவித்யை என்கிற அறியாமையே. உண்மையில் ஆத்மாவிற்கு இவ்விரண்டின் சம்பந்தமே இல்லை. இந்த உண்மை ஸ்வரூப ஞானத்தை, ஜீவன் உணர்ந்த அக்கணமே, அவன் ஞான ரூபியான பிரும்மமாகவே ஆகிறான். ஸ்வரூப ஞானம் என்பது ஜீவாத்மாவை ஸ்தூல ஸூக்ஷம தேங்களுடன் சம்பந்தப்படுத்தாமல் இருப்பது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.33

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.33

ராஜா த³ஸ²ரத²: ஸ்வர்க³ம் 
ஜகா³ம விலபந் ஸுதம்|
ம்ருதே து தஸ்மிந் ப⁴ரதோ 
வஸிஷ்ட² ப்ரமுகை²ர் த்³விஜை:|| 

  • ராஜா - மகாராஜாவான
  • த³ஸ²ரத²ஸ் -  தஸரதர்
  • ஸுதம் - குமாரனை நினைத்து
  • விலபந் -  புலம்பிக் கொண்டு
  • ஸ்வர்க³ம்  - ஸ்வர்க்கத்தை 
  • ஜகா³ம -  அடைந்தார்
  • தஸ்மிந்  - அவர் 
  • ம்ருதே - மரித்த பொழுது
  • வஸிஷ்ட² - வஸிஷ்டரை
  • ப்ரமுகை²ர் - முக்கியராக உடைய
  • த்³விஜைஹி - பிராஹ்மணர்களால்
  • து -  போதிலும்
  • ப⁴ரதோ  - பரதன்

ராஜா தசரதன் துன்புற்று தன் மகனுக்காக அழுதவாறே சொர்க்கத்தை அடைந்தார். தசரதன் இறந்ததும், வஸிஷ்டராலும், பிற முக்கிய பிராஹ்மணர்களாலும் இரு பிறப்பாளர்களாலும் பரதன்,

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 78 - பெரியாழ்வார் திருமொழி - 1.6.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 78 - திருக்குடந்தையில் பள்ளி கொண்டவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - நான்காம் பாசுரம்

தூ நிலா முற்றத்தே* போந்து விளையாட* 
வான் நிலா அம்புலீ* சந்திரா! வாவென்று*
நீ நிலா நிற் புகழா நின்* ஆயர்தம்* 
கோ நிலாவக் கொட்டாய் சப்பாணி* 
குடந்தைக் கிடந்தானே! சப்பாணி|

  • வான் - ஆகாசத்திலே
  • நிலா - விளங்குகின்ற
  • அம்புலி - அம்புலியே!
  • சந்திரா - சந்திரனே!
  • தூ - வெண்மையான
  • நிலா - நிலவொளி திகழும்
  • முற்றத்தே - முற்றத்திலே
  • போந்து - வந்து
  • நீ - நீ
  • விளையாட - நான் விளையாடும்படி
  • வா - வருவாயாக
  • என்று - என்று சந்திரனை அழைத்து
  • நிலா - நின்று கொண்டு
  • நின் - உன்னை
  • புகழாநின்ற - புகழ்கின்ற
  • ஆயர் தம் - இடையர்களுடைய
  • கோ - தலைவராகிய நந்த கோபர்
  • நிலாவ - மனம் மகிழும்படி 
  • சப்பாணி கொட்டாய் - சப்பாணி கொட்டி அருள வேணும்
  • குடந்தை - திருக்குடந்தையில்
  • கிடந்தானே! - பள்ளி கொண்டவனே
  • சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்

வெண்மையான நிலா காயும் முற்றத்தில் இருந்துகொண்டு வானில் உலாவும் சந்திரனை உன்னுடன் விளையாட அழைப்பதை இடையர்களின் தலைவரான நந்தகோபர் பெருமிதத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறார் கண்ணா. அவர் மனம் குளிரக் கைககளைக் கொட்ட வேண்டும். திருக்குடந்தையில் பள்ளி கொண்டவனே! கைகளைக் கொட்டவும்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 022 - திருவெள்ளியங்குடி 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||022. திருவெள்ளியங்குடி||
||கும்பகோணம்|| 
||இருபத்தி இரண்டாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ கோலவில்லி ராமர் திருக்கோயில்||

||ஸ்ரீ மரகதவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ கோலவில்லி ராமர் பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - கோலவில்லி ராமன், க்ஷீராப்தி நாதன்
  • பெருமாள் உற்சவர் - சிருங்கார சுந்தரர் (தன்னை அழகு படுத்திக் கொள்வதில் இப்பெருமானுக்கு விருப்பம் அதிகம்)
  • தாயார் மூலவர் - மரகதவல்லி
  • தாயார் உற்சவர் - ஸ்ரீதேவி, பூதேவி
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு
  • திருக்கோலம் - புஜங்க ஸயனம்
  • புஷ்கரிணி/தீர்த்தம் - சுக்கிர, பிரம்ம, பரசுராம, இந்திர 
  • விமானம் - புஷ்கலா வர்த்தக 
  • ஸ்தல விருக்ஷம் - செவ்வாழை
  • ப்ரத்யக்ஷம் - சுக்ரன், பிரமன், பராசரர், இந்திரன், மயன், மார்கண்டேயன், பூமிதேவி
  • ஆகமம் - வைகாநஸம்
  • ஸம்ப்ரதாயம் - வட கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

இத்தலத்தின் அருகில் சேங்கானூர் என்ற ஊர் உள்ளது. இது தான் வைணவ மேதை பெரியவாச்சான் பிள்ளையின் அவதார தலமாகும். காஞ்சிப் பெரியவர் இத்தலத்தில் தங்கி கோயில் திருப்பணி செய்துள்ளார். 

இந்த பெருமாளை தரிசித்தால் 108 திருப்பதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தனக்கு கண்ணில் ஒளி தந்த பெருமாளுக்கு நன்றி செலுத்தும் வகையில், சுக்கிர பகவான் அணையா தீபமாக இத்தலத்தில் இரவு பகலாக பிரகாசித்து கொண்டிருக்கிறார். எனவே இத்தலம் நவக்கிரகத்தில் சுக்கிரத் தலமாக போற்றப்படுகிறது. பெருமாளின் 108 திருப்பதிகளுள் இங்கு மட்டும் தான் கருடாழ்வார் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்து வரும் காட்சியை இன்றும் காணலாம். இத்தலத்தில் உள்ள பெருமாள் கிழக்கு நோக்கி, பள்ளி கொண்ட கோலத்தில் வர்ணம் பூசப்பட்ட நிலையில் அருள் பாலிக்கிறார். 

மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது இறைவன் என்பதை அறியாத மன்னன் தாரை வார்த்து கொடுக்க சம்மதிக்கிறான். ஆனால், உண்மை நிலை அறிந்த அசுர குல குரு சுக்ராச்சாரியார், தாரை வார்க்கும் செம்புக் குடத்தின் துவாரத்தை ஒரு வண்டாக உருவெடுத்து அடைத்து விட்டார். குருவின் இந்த செயல் அறிந்த பகவான் ஒரு குச்சியால் துவாரம் வழியாக குத்த, ஒரு கண்ணை இழக்கிறார் சுக்கிரன். ஒளியிழந்த கண்ணுடன் பல தலங்களுக்கு சென்று வழிபட்டு கடைசியாக இத்தலத்து பெருமாளை வழிபட்டு மீண்டும் பார்வை பெற்றார். இதனால் தான் இத்தலம் வெள்ளியங்குடி (சுக்கிரன்) என அழைக்கப் படுகிறது. சுக்கிரன் இத்தலத்தில் வந்து தவம் செய்வதற்கு மற்றொரு காரணமும் உண்டு. தேவ சிற்பியான விஸ்வகர்மா பெருமாளுக்கு அழகாக கோயில்களை கட்டி முடித்தார். இதே போல் தன்னால் கோயில்கள் கட்ட முடியவில்லையே என அசுர குல சிற்பி மயன் வருத்தப் பட்டு பிரம்மனிடம் வேண்டினார். அதற்கு பிரம்மா இத்தலத்தில் கடும் தவம் செய்தால் பெருமாள் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்,'' என கூறினார். மயனின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் சங்கு சக்ரதாரியாக காட்சி கொடுத்தார். ஆனால் மயன், "தனக்கு இந்த தரிசனத்திற்கு பதில், ராமாவதார காட்சி வேண்டும் என்றான். தன் கரத்திலிருந்த சங்கு சக்கரத்தை கருடாழ்வாரிடம் கொடுத்து விட்டு கோலவில்லி ராமனாக வில் அம்புகளுடன் தரிசனம் தந்தார் பகவான். இப்படிப்பட்ட பெருமைக்குரிய தலத்தில் தவமிருக்க விரும்பி இங்கு வந்தார் சுக்ராச்சாரியார். இதன் காரணமாகவும் இது "வெள்ளியங்குடி' ஆயிற்று.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 89

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

சால்வனுடன் சண்டை|

சிசுபாலனுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவன் சால்வன் என்ற அரசன். ருக்மிணியைச் சிசுபாலனுக்குக் கொடுப்பது என்று ஏற்பாடாகி ருந்த போது, அவனுடன் விதர்ப்ப நாடு சென்றவர்களில் இவனும் ஒருவன். கிருஷ்ணர் ருக்மிணியை எடுத்துச் சென்றதும், சால்வன் எல்லா அரசர்களின் முன்னால், "நான் தக்க தருணத்தில் யாது வம்சத்தையே பூண்டோடு அழிப்பேன்" என்று சபதம் செய்தான்.


இப்படிச் சப்தம் செய்தவன், நேராக இமயமலைச் சாரலுக்குச் சென்று, ஒரு வருட காலம் கொடிய தவம் புரிந்தான். அவன் தவத்தைக் கண்டு மெச்சிய சிவபெருமான் அவன்முன் தோன்றி, அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். 

அதற்குச் சால்வன், "தேவர்களாலும் அசுரர்களாலும் கந்தவர்களாலும் மனிதர்களாலும் அழிக்க முடியாத ஒரு விமானம் வேண்டும்" என்றும், "அது எங்கு வேண்டுமானாலும் செல்லக் கூடியதாக இருக்க வேண்டும்" என்றும், "அது யாதவர்களுக்குப் பயத்தை அளிக்க வேண்டும்" என்றும் கேட்டான். 

சிவனார் "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி விட்டு, தேவ லோகச் சிற்பியான மயனை அத்தகைய விமானம் ஒன்றைத் தயாரிக்கும் படி உத்தரவிட்டார். உடனே மயன் எஃகினாலான ஒரு பெரிய விமானம் தயாரித்தான். ஒரு பெரிய அரண்மனையைப் போல அது அத்தனை பெரியதாக இருந்தது. அதற்கு ஸௌபம் என்று பெயர் வைக்கப்பட்டது. 

சால்வன் மிக்க மகிழ்ச்சியுடன், அதிலேயே பறந்து தன் ராஜ்ஜியம் திரும்பினான். கிருஷ்ணர் துவாரகையை விட்டு எப்பொழுது வெளியே செல்வார் என்று காத்துக் கொண்டிருந்தான். கிருஷ்ணர் ராஜசூய யாகத்திற்குச் சென்று விட்டார் என்று தெரிந்ததும், அவன் தன ஆயுதங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு ஒரு பெரிய சேனையையும் திரட்டிக் கொண்டு துவாரகையை முற்றுகை இட்டான். நகரம் முழுவதும் அழிக்கத் தீர்மானித்தான். 

பிறகு நகரின் வாயில்கள், கோபுரங்கள், அரண்மனைகள் முதலியவற்றை அழித்தான். மிகவும் உயரத்தில் பறந்த தன் விமானத்தில் இருந்து கொண்டு, நகரை அம்புகளாலும் கற்களாலும் பாறைகளினாலும், வேரோடு சாய்ந்த மரங்களாலும் தாக்கினான். 

ஒரு பெரிய சூறாவளி வீசுமாறு செய்ய, அது கிளப்பிய புழுதியினால் நகரமே இருந்த இடம் தெரியவில்லை. யாதவர்கள் நடுங்கினார்கள். கிருஷ்ணனின் மகனான பிரத்தியும்னனிடம் ஓடிச் சென்று, தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்